ஆசிரியர்களின் அனுபவங்கள்
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
கொரோனா காலங்களில்.....
🌸🌸🌸🌸🌸🌸
ஆன்லைன் கல்வி ரேடியோ குறித்த ஆசிரியர்களின் அனுபவங்கள்....
🌱முன்னோட்டமாக.....
☘️சின்னஞ்சிறிய குழந்தைகளுக்கு செய்வது; இறைவனுக்கே கடன் வழங்குவதற்கு ஒப்பாகும்.
☘️நான்....
🍀உங்களுடைய பிரியமானவள்...
🍀திருமதி. இலா.ஜெய தங்கம், இடைநிலை ஆசிரியை. சிறுமலர் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி, பழனி வட்டம், திண்டுக்கல் மாவட்டம் .
🔖 நான் 2009 ஆம் ஆண்டு ஜூன் 15 அன்று இடைநிலை ஆசிரியையாக சிறுமலர் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் பணியில் சேர்ந்து பணியாற்றி வருகின்றேன்.
🔖ஆன்லைன் கல்வி ரேடியோ குழுமத்தில் நானும் இணைந்து பயணித்ததில் மிகுந்த மகிழ்ச்சி...
எல்லாம் வல்ல இறைவனுக்கு எனது நன்றிகள் 🙏🙏🙏🙏
🔖2019- 2020 ,2020 -2021 இந்த கல்வி ஆண்டுகளில், யாரும் நினையாத கொரோனா தொற்றால், எனக்கும், என் பிள்ளைகளுக்கும், அவர்களின் கல்விக்கும் இடையேயான மிகப்பெரிய இடைவெளியை கண்டு, உள்ளத்தால் மிகவும் வருந்தினேன்.
🔖 குழந்தைகளை கற்றலில் ஆர்வம் ஏற்படுத்துவதற்கு, என்ன செய்வது? என எண்ணிய தருணத்தில்...
கடவுள் வழங்கிய வரப்பிரசாதமாக.... ஆன்லைன் கல்வி ரேடியோவை நினைத்தேன்.
🔖www.kalviradio.com என்ற வலைதளத்தை உருவாக்கிய திருவாளர். மதிப்புமிகு. இடைநிலை ஆசிரியர். திரு. ஆ.கார்த்திக் ராஜா அவர்களுக்கும், அவர்களுக்கு உறுதுணையாக இருந்த ஒவ்வொரு நல்ல உள்ளங்களுக்கும் ....
இந்நிமிடத்தில் எனது வாழ்த்துக்களையும்💐💐💐💐💐💐💐 இதயமிகு நன்றிகளையும்🙏🙏🙏🙏🙏🙏🙏
மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்றேன்.🙂
அறிமுகம்.
🔖2021 ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் பழனி நகர், வட்டார கல்வி அலுவலர், மதிப்புமிகு. திரு.வெ.ரமேஷ் குமார் அவர்கள் வழியாக www.kalviradio.com என்ற வலைத்தளம் குறித்து அறிந்து கொண்டோம்.
🔖எமது சிறுமலர் தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியை, அருட் சகோதரி.ரெக்சலின் அவிலா செல்வி அவர்களது முழுமையான ஒத்துழைப்புடன்,
எம் பள்ளியில் பயிலும் அனைத்து மாணவ செல்வங்களுக்கும், அவர்தம் பெற்றோர்களுக்கும், இந்த வலைத்தளம் பற்றியும், அதன் நன்மைகள் குறித்தும் அறிமுகப்படுத்தினோம்.
🔖 மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு இதனுடைய பயன்பாடு பற்றியும், மாணவர்களின் உடல் நலனுக்கு எந்தவித பாதிப்பும் இன்றி, கற்றலில் மேம்படுவது குறித்தும், தெளிவாக பெற்றோர்களிடம் நேரடியாக மற்றும் தொலைபேசி வாயிலாக அறிமுகப்படுத்தினோம்.
பிள்ளைகளின் ஈடுபாடும்....
பெற்றோர்களின் ஆர்வமிகுதியும்....
☘️ குழந்தைகள் தின விழா...
🔖 2021 ஆம் ஆண்டு நவம்பர் 14 குழந்தைகள் தினத்தை முன்னிட்டு ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு எழுதுதல், பேசுதல், படங்கள் வரைதல், வண்ணம் தீட்டுதல், கதை கூறுதல் வாய்ப்பாடு சொல்லுதல் திருக்குறள்...
போன்ற பல்வேறு கல்வி செயல்பாடுகள் www.kalviradio.com என்ற இணையதளத்தில் மாணவர்களுக்கு அறிவிக்கப்பட்டது.
🔖2021, அக்டோபர்15 அன்று ஆன்லைன் கல்வி ரேடியோ செயல்பாடுகளில் பங்கு பெற என் பள்ளியின் சார்பாக நான் பதிவு செய்தேன்.
🔖 2021 அக்டோபர் 15 முதல் நவம்பர் 3 வரை நாள் வாரியாக, கிழமை வாரியாக ...
🌷தமிழ் ஆங்கில வார்த்தைகள்
🌷 விடுகதைகள்
🌷 பழமொழிகள்
🌷 திருக்குறள்
🌷 வினா விடைகள்
🌷 தேச தலைவர்கள்
🌷 கதை சொல்லுதல்
🌷 பெருக்கல் வாய்ப்பாடு...
🔖என ஒவ்வொரு செயல்பாடுகளையும், ஒவ்வொரு மாணவர்களும் செய்ய செய்ய, பெற்றோர்கள் மத்தியில் ஒரு ஆர்வம் ஏற்பட்டது.
🔖 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் மிகுந்த உற்சாகத்தோடு ஆடியோவை பதிவு செய்து அனுப்பினார்கள்.
🔖 அழகாக எழுதி, படங்கள் வரைந்து, வண்ணம் தீட்டி, தத்தம் படைப்புகளை பள்ளியில் சமர்ப்பித்தனர்.
🔖ஆசிரியர்கள் அதை சரிப்பார்த்து, திருத்தம் செய்து எனக்கு அனுப்புவர்.
🔖 நான் ஒருங்கிணைப்பாளராக இருந்து மாணவர்களின் தொகுப்புகளை ஆன்லைன் கல்வி ரேடியோ பகுதிக்கு அனுப்பி வைத்தேன்.
🔖 இதன் வாயிலாக ஆரோக்கியமான கற்றல் செயல்பாடுகள் குழந்தைகளிடத்தில் அதிகரித்தது.
🔖 பெற்றோர்களும், தத்தம் பிள்ளைகள், எந்த நிலையில் உள்ளனர்? என்பதை மிகத் தெளிவாக உணர்ந்து கொண்டனர். குழந்தைகளின் வளர்ச்சிக்கு மிக உறுதுணையாக இருந்தனர்.
🔖 இது எனக்கு ஒரு புதிய அனுபவமாக இருந்தது.
🔖 மாணவர்களின் அறிவு தேடலுக்கு வழிகாட்டியாக இருந்ததைக் குறித்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்.
ஜனவரி 26 குடியரசு தின செயல்பாடுகள் 2022...
🔖 குழந்தைகள் தினம் செயல்பாடுகளில் ஏற்பட்ட அனுபவத்தோடு, அதே முனைப்போடு, மிகுதியான உற்சாகத்தோடு இன்னும் அதீத தீரத்துடன் 2021 டிசம்பர் 21 அன்று பதிவு செய்து குடியரசு தின செயல்பாடுகளில் நாங்கள் ஒரு குழுவாக பங்கெடுத்தோம்...
🔖 இந்த முறை ஒருங்கிணைப்பாளராக என்னுடன் இன்னும் ஐந்து பேர் வகுப்பு வாரியாக இணைந்து கொண்டனர்.
🔖 🌸 வகுப்பு1- திருமதி. மா.ஜோஸ்பின் சோனியா ,திருமதி. யா. ஆரோக்கிய ஜென்சி
🌸 வகுப்பு2- திருமதி .வி.ஜொவிட்டா பாலட்
🌸 வகுப்பு-3 திருமதி. டோ. ஏஞ்சல் சந்தன சுந்தரி
🌸 வகுப்பு-4 திருமதி. இலா. ஜெய தங்கம்
🌸 வகுப்பு-5 திருமதி. ஆ. மரியஜோதி மணி
🔖 இவ்வாறாக நாங்கள் ஆறு பேரும், முறையாக பதிவு செய்து, வகுப்பு வாரியாக எங்களது மாணவர்களின் படைப்புகளை, குறிப்பாக
🌷சொல்வதை எழுதுதல்
🌷 வாக்கியங்கள்
🌷 பொது அறிவு வினா விடைகள்
🔖போன்ற ஆன்லைன் கல்வி ரேடியோவில் கொடுத்த அனைத்து செயல்பாடுகளையும் 2021 டிசம்பர் 21 முதல் 2022 ஜனவரி 23 வரை மிகச் சிறப்பாக செய்து, அவர்கள் கூறிய வழிமுறைகளை பின்பற்றி அனுப்பி வைத்தோம்.
🔖 ஏறக்குறைய 250 மாணவர்கள் இதன் மூலம் பயனடைந்தனர்.
🔖 பெற்றோர்களின் முழுமையான ஆதரவுடன், மாணவர்களின் மேம்பாட்டை கருத்தில் கொண்டு செயல்பட்டது எங்களுக்கு மகிழ்ச்சி அளித்தது.
🔖 ஒவ்வொரு பெற்றோர்களும், ஆசிரியர்களாக இருந்து அற்புதமாக செயல்பட்ட அந்த தருணம்..... எங்களை மிகவும் நெகிழ்ச்சிக்கு உள்ளாகியது.
ஆசிரியர்களின் ஒத்துழைப்பு....
🔖 ஆன்லைன் கல்வி ரேடியோ செயல்பாடுகள் குறித்த அனைத்து தகவல்களையும் பெற்றோர் மத்தியில் 2021 செப்டம்பர் ஐந்தாம் தேதி முதல் முறையாக கொண்டு சேர்த்தோம்.
🔖 மாணவர்கள் எழுதி அனுப்புவதை, சரி பார்த்து, திருத்தம் செய்து ,அதை புகைப்படம் எடுத்து அனுப்புதல்.
🔖 மாணவர்கள் அனுப்பிய ஆடியோ பதிவுகளை, முழுவதும் கேட்டு, அதை தொகுத்து டெலிகிராமில் அனுப்புதல்.
🔖 பங்கேற்ற அனைத்து மாணவர்களின் பெயர் பட்டியல் மற்றும் ஒவ்வொரு மாணவரின் செயல்பாடுகள் குறித்து சரியாக மதிப்பிட்டு, முறையான புள்ளி விவரங்களை தருதல்.
🔖 Trophies, Medal, Certificates பெறவேண்டிய மாணவர்களின் விவரங்களை சரியாக மதிப்பிட்டு தருதல்.
🔖 தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் ஆன்லைன் கல்வி ரேடியோ குறித்த தங்களது Feedback வீடியோக்களை வழங்குதல்.
🔖 பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் மற்றும் பெற்றோர்கள், மாணவர்களின் Feedback வீடியோ பகுதிகள் வழங்குதல்.
🔖 சொல்வதை எழுதுதல் பகுதி வீடியோ அனுப்புதல்
🔖இதுபோன்ற பல்வேறு பணிகளை, எம்முடைய தலைமை ஆசிரியை மற்றும் இருபதுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் என்னோடு இணைந்து மிகச் சிறப்பாக, முழுமையான ஒத்துழைப்பு நல்கி பணியாற்றினர்.
🔖 'பலவித மலர்களை இணைத்து ஓர் அழகிய மாலை தொடுப்பது போல' ....
நாங்கள் அனைவரும் கொரோனா காலங்களில் ஆன்லைன் கல்வி ரேடியோவோடு இணைந்து எம் பிள்ளைகளின் கல்விப் பணிக்காக செயல்பட்டது, எங்களுக்கு மிகவும் ஆனந்தத்தை அளித்தது.
அர்ப்பணிப்பு பணியில் .
அளவில்லா சந்தோஷம்...
🔖மழலைகள் தினம், குடியரசு தினம் முன்னிட்டு...
🌷 குழந்தைகள்
🌷 ஆசிரியர்கள்
🌷 பெற்றோர்கள்
🔖என அனைத்து தரப்பினருக்கும் மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கும் வகையில் ,மிக சரியாக திட்டமிட்டு, ஆன்லைன் கல்வி ரேடியோ சார்பாக திரு. ஆ. கார்த்திக்ராஜா இடைநிலை ஆசிரியர்அவர்கள், அவரது நண்பர்கள், ஆசிரியர்கள் இணைந்து பல அமைப்புகளிடமிருந்து, உரிய நிதி பெற்று, ஏற்ற நேரத்தில்,
பலவித இடி, மின்னல், மழை போன்ற சாதகமற்ற இயற்கை சூழலையும் பொருட்படுத்தாது, மாணவச் செல்வங்களுக்காக...
🔖Trophies,Medal, Certificates என அனைத்தையும், எல்லா பணிகளையும் தொய்வில்லாமல், முறையாக முடித்துக் கொடுத்த ஒவ்வொரு பள்ளிக்கும்,(2021 நவம்பர் 14 மற்றும் 2022 ஜனவரி 26-க்குள்) ஏற்ற நேரத்தில், உரிய முறையில் பார்சல் செய்து, அனுப்பி வைத்தனர்.
🔖அவர்கள் தங்கள் இலக்கை நோக்கிய பயணத்தில்... விடாமுயற்சியோடு, சுறுசுறுப்போடு, தியாக உள்ளதோடு பணியாற்றியதைக் கண்டு உள்ளத்தால் நான் ஈர்க்கப்பட்டேன்.
🔖நானும் என்னாலான சிறிய பங்களிப்பை ஆன்லைன் கல்வி ரேடியோவிற்கு வழங்க எனக்கு இது ஒரு தூண்டுகோலாய் இருந்தது.
🔖 கொரோனா காலங்களில் எம் பிள்ளைகளுக்கு கிடைத்த பரிசு பொருள், சான்றிதழ்கள் கண்டு, அவர்கள் மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்றனர் என்றால் அது மிகையாகாது.
🔖 இந்நேரத்தில் ஏழை பிள்ளைகளை, மகிழ்ச்சிப்படுத்திய, ஒவ்வொரு அன்பு உள்ளங்களையும் இறைவன் நிறைவாய் ஆசீர்வதிக்க மனதார வாழ்த்துகின்றேன்.
ஆன்லைன் கல்வி ரேடியோவில் எனது பங்களிப்பு...
🔖 ☘️நான் ....
☘️எனது வகுப்பு....
☘️ எனது பள்ளி ....
என்று குறுகிய வட்டத்தில் பயணித்துக் கொண்டிருந்தேன்.
🔖பலவித ஆசிரியர்களின், தன்னிகரில்லா தியாகத்தால், உந்தப்பட்டு, நானும்2021, டிசம்பர் 6 முதல் ஒவ்வொரு ஆடியோவாக தயாரித்து 2022 பிப்ரவரி இறுதியில் மாணவர்களுக்காக 60 ஆடியோ பதிவுகளை அனுப்பி உள்ளேன்.
🔖 'கல்வி என்பது அறிவை வளர்ப்பது மட்டுமல்ல'...
🔖 இவ்வுலகத்தில் நம் குழந்தைகள் சான்றோர்களாய் மிளிர....
தேவையானவை...✨✨✨✨✨
1.எல்லா உயிரினங்களையும் நேசிக்க வேண்டும்.
2.எல்லாவித மனிதர்களோடும், இணைந்து வாழ வேண்டும்.
3. அகம், புறம் இரண்டிலும் தூய்மை, வலிமை பேண வேண்டும்.
🔖மேற்கண்ட உயரிய நோக்கோடு நான் வாரமலர், சிறுவர் மலர், புத்தகப் பூங்கொத்துக்கள், நீதிக்கதைகள், உண்மை சம்பவங்கள் என பலவற்றை சேகரித்து அதன் வழியாக 50 கதை பகுதிகளை ஆடியோ வடிவாக ஆன்லைன் கல்வி ரேடியோவிற்கு
அனுப்பினேன்.
🔖 மேலும் 10 விடுகதை ஆடியோ பகுதிகளையும் அனுப்பினேன்.
🔖 நானும் இந்த ஆன்லைன் கல்வி ரேடியோ குடும்பத்தில் ஓர் உறுப்பினர் என எண்ணும்போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
🔖 ஆன்லைன் கல்வி ரேடியோவில் விதைத்த விதை....
தற்போது திண்டுக்கல், கல்விச்சாரல் வானொலி வாயிலாக, பல நல்ல கருத்துக்களை, மாணவர்களுக்கு எடுத்து இயம்பிக் கொண்டிருக்கின்றேன்.
என்பதில் நான் மிகவும் பெருமிதம் அடைகின்றேன்.
எனது வகுப்பறையில்
ஆன்லைன் கல்வி ரேடியோவின் பயன்பாடு.....
🔖எனது வகுப்பறையில் 2022 மார்ச் மாதம் முதல் தமிழ், ஆங்கில பாடல்கள், அறிவியல், சமூக அறிவியல் , கதைகள், விடுகதைகள் என பல்வேறு ஆடியோ பகுதிகளை Bluetooth speaker உதவியுடன் ஒலிபரப்பு செய்தேன்.
🔖 அதை எனது மாணவர்கள் கேட்டு பயனடைந்தனர்.
🔖இது மாணாக்கரின் ஒரு முகச் சிந்தனைதிறன், கேட்கும் திறன் போன்றவற்றை அதிகரிக்க செய்கின்றது.
🔖'ஒரு முறை கேட்டல், இருமுறை படித்தலுக்கு சமம் அல்லவா!'
🔖 இந்த புதுவிதக் கற்றல்..
மாணவர்களுக்கு உடல், உள்ள பாதிப்புக்கு வழி வகுக்காமல், முன்னேற்றத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் உள்ளது என்பதில், நான் மிகவும் சந்தோஷப்படுகின்றேன்.
சிறந்த ஆசிரியருக்கான விருது....
🔖 2022, ஜனவரி மாதம் முதல் பழனி வட்டார கல்வி அலுவலர் மதிப்புமிகு.திரு .மு. சரவணகுமார் ஐயா அவர்கள், சிறுமலர் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை சகோதரி. ஆரோக்கிய மேரி அவர்கள் என்னுடைய எல்லா கல்வி சார் செயல்பாடுகளிலும் எனக்கு முழுஉறுதுணையாக, பக்க பலமாக இருந்து, என்னை எல்லா விதங்களிலும் உற்சாகப்படுத்தி, ஊக்கப்படுத்தி வருகின்றனர்.
🔖 2022 செப்டம்பர் 5 பழனி நகர் வட்டார கல்வி அலுவலர் திரு.மு. சரவணக்குமார் அவர்கள், பழனி நகர் வட்டாரத்தில் ஆசிரியர் தின விழாவை முன்னிட்டு பாராட்டு விழா கூட்டம் ஏற்பாடு செய்தார்.
🔖 அதில் வட்டார கல்வி அலுவலர் ஐயா அவர்களது மேற்பார்வையின் அடிப்படையில் 15 ஆசிரியர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு சிறந்த ஆசிரியருக்கான விருது வழங்கி கௌரவித்தார்.
🔖அந்த விருது பெற்றதில் நானும் ஒருவர்....
என்பதை நினைத்து மிகவும் பூரிப்படைகின்றேன்.
🔖 நான் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டதில் ஆன்லைன் கல்வி ரேடியோ செயல்பாடுகளும் ஒரு காரணம் என்பதை இந்நேரத்தில் மிகவும் மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.
🔖 எல்லா பெருமையையும்,
புகழ்ச்சியையும்
இறைவனுக்கு சமர்ப்பிக்கின்றேன் ...
நிறைவாக....
🔖எந்தவித வர்த்தக, விளம்பர, வியாபார நோக்கம் இன்றி, திரு. ஆ. கார்த்திக்ராஜா அவர்களின் கருத்தாழத்தில் உதித்த இந்த www.kalviradio.com தொழில்நுட்பம் வாயிலாக இன்று எண்ணிலடங்கா மாணவர்களும், பெற்றோர்களும், ஆசிரியர்களும் பயனடைந்து வருகின்றனர்.
🔖' ஒரு விளக்கு எரிய தூண்டுகோல் தேவை'
அதைப்போல பலவித மனிதர்களை ஒரு குடும்பமாய் இணைத்து மிகச் சிறப்பாக வழி நடத்திய ஆன்லைன் கல்வி ரேடியோ குழுமத்திற்கு எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.
🔖'நீங்கள் யார் என்று, உங்கள் வார்த்தைகளால் அல்ல; செயல்களால் நிரூபியுங்கள்.'
என்ற வாக்கிற்கு வடிவம் கொடுத்த, அத்தனை ஆசிரிய பெருமக்களையும், இந்நேரத்தில் நன்றியோடு வாழ்த்துகின்றேன்...
🌸🌸🌸🌸🌸
🔖மகிழ்வோடு சிரம் தாழ்த்தி, தலை வணங்குகின்றேன்🙏🙏🙏🙏🙏
🔖மழலை கண்மணிகளுக்காக நாம் விதைக்கின்ற ஒவ்வொரு விதைகளும், நம்மையும், நம் சந்ததியையும் பேணிக்காக்கும்.
🔖எனது அனுபவங்களை, தொகுக்க வாய்ப்பு கொடுத்த ஆன்லைன் கல்வி ரேடியோ குழுமத்திற்கு எனது நன்றிகள்.
🔖 எல்லாம் வல்ல இறைவனுக்கு எனது நன்றிகள்🌸🌸🌸
நன்றி🙏
No comments:
Post a Comment