ஆன்லைன் கல்வி ரேடியோவில்
எனது அனுபவங்கள்
எம்.ஸ்ரீதேவி
பட்டதாரி ஆசிரியை - கணிதம்
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி
வடக்கிபாளையம் - பொள்ளாச்சி வடக்கு
கோவை மாவட்டம்
அறிமுகம்:
அறிமுகம் கிடைத்தது என்னவோ ஆன்லைன் கல்வி ரேடியோவின் குழந்தைப் பருவத்திலே. ஜனவரி 2021 இல் NMMS தேர்வுக்கான SAT- பகுதி கணித வினாக்கள் தயாரிக்கும் பொருட்டு எனது தோழி திருமதி வஹீதா பட்டதாரி ஆசிரியை ராம பட்டணம் பொள்ளாச்சி வடக்கு கோவை அவர்களால் திரு கார்த்திக் ராஜா அவர்களின் அறிமுகமும் அவரது படைப்பான ஆன்லைன் கல்வி ரேடியோவின் அறிமுகமும் எனக்கு அறிய வாய்ப்பாக கிடைத்தது என்பதில் மகிழ்ச்சி.
ஆன்லைன் கல்வி ரேடியோவின் அறிமுகமானது ஆனந்தமாய் அலைகடலாய் அனைவருக்கும் அனுதினமும் கிடைத்த அன்பளிப்பு என்பதில் அளவில்லா ஆனந்தம்.
ருணா ஊரடங்கு காலத்தில் கற்பித்தல் பணியில் ஆன்லைன் கல்வி ரேடியோவின் பயன்பாடுகள்:
கொரோன ஊரடங்கு காலத்தில் மிகப்பெரிய சவாலாக இருந்த ஒன்று மாணவர்களின் கற்றல். சவாலை எதிர்கொள்ள உருவானவைகள்
1.கல்வி தொலைக்காட்சி
2.ஆன்லைன் கல்வி ரேடியோ
எனது பயணம் ஜனவரி 7, 2021 முதல் ஆன்லைன் கல்வி ரேடியோவில் ஆரம்பமானது.இதற்கு முன்னோடி திரு. கார்த்திக் ராஜா அவர்கள்.
"என்று தணியும் இந்த தாகம்" என்ற பாரதியின் வரிகள் போல "என்று ஒழியும் இந்தக் கொரோனா" என்பது தெரியாத சூழலில் மாணவர்களின் கற்றலில் தொய்வின்றி செயல்பட பல்வேறு அரசுப் பள்ளி ஆசிரியர்கள் ஒன்றிணைந்து உருவானதே இந்த ஆன்லைன் கல்வி ரேடியோ.
ஆன்லைன் கல்வி ரேடியோவின் பயன்பாடுகள் (சிறப்பம்சங்கள்).
*1 to 10 வகுப்பு மாணவர்களுக்கான பாடப்பகுதிகள் ஆர்வமூட்டும் அறிவுசார் வளர்ச்சி பகுதிகள் அனைத்தும் ஒலிபரப்பாகிறது.
*மாணவர்கள் எளிதாக சாதாரண பிரவுசர் மொபைல் களிலே இயக்க முடியும்.
*குறைந்த நெட்வொர்க்-லேயே சிறப்பாக இயங்கும்.
*பெற்றோரின் கண்காணிப்பும், மாணவர்களின் பாதுகாப்பும் இதில் உறுதி.
*மாணவரின் உடல் நலம் மற்றும் மனநலம் பேணப்படுகிறது.
*எங்கேயும் எப்போதும் எத்தனை முறை வேண்டுமானாலும் கற்க இயலும்.
* பலமுறை கேட்கும் வசதி உள்ளதால் இது மெல்ல மலரும் மாணவர்களுக்கு பேருதவியாக இருக்கிறது.
* மாணவர்கள் பாடப் பகுதிகளை கற்பதோடு மட்டுமல்லாமல் தங்களது அறிவை வலுப்படுத்தவும், வளப்படுத்தவும் பல்வேறு பல்சுவைவலுப் பகுதிகளும் இதில் உண்டு என்பது கூடுதல் சிறப்பு
*"ஏக்குறை நேரினும் நிற்காது கற்க
ஏச்சூழல் நேரினும் கற்றல் நிற்காது"
இதன் பயன்பாடாக "ஆன்லைன் கல்வி ரேடியோ"*
கொரோனா ஊரடங்கு காலத்தில் மாணவர்களின் கற்றலில் ஆன்லைன் கல்வி ரேடியோவின் பங்கு
கொரோனா ஊரடங்கு காலத்தில் மாணவர்கள் தங்கள் கற்றலை மேம்படுத்த பேருதவியாக இருந்தது ஆன்லைன் கல்வி ரேடியோ. இதில் 1 - 10 வகுப்பு வரையுள்ள பாடப்பகுதிகள் சிறு சிறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு ஆடியோ வடிவில் பாடப் பகுதிகளுக்கான விளக்கம், புக் பேக் எக்ஸர்சைஸ், ஒரு மதிப்பெண் வினாக்கள் போன்ற அனைத்தும் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.இதை மாணவர்கள் எளிதில் பயன்படுத்தும் வண்ணம் mp3 ல் இருக்கும். இதைக் கொண்டு மாணவர்கள் தங்கள் புத்தகத்தின் உதவியோடு இந்த ஆடியோக்களை கேட்டு பாடக் கருத்தை உள்வாங்க ஏதுவாக இருந்தது.மேலும் இதில் "மின்மினிகள் நேரம்" என்ற பகுதியில் மாணவர்களின் தனித்திறமைகளை வெளிக் கொணரும் வகையில் கதை கூறல், பழமொழி, விடுகதை, பேச்சு மற்றும் பாடல் போன்ற பல்சுவைப் பகுதிகளில் மாணவர்கள் ஆகவே தன்னார்வமாக செயல்பட்டு பல நிகழ்ச்சிகளை வழங்கினர்.இது கொரோனா காலத்திலும் மாணவரது திறமைகளை வலுவூட்டும் மிகச்சிறந்த செயல்பாடாக அமைந்தது இதனது மைல்கல்.இதில் பல மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களும் பங்கேற்று அதற்கான சான்றிதழ்களையும் சான்றிதழ்களையும் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
"தனித் திறமைகளை தங்கு தடையின்றி தரமான தாக்கியது நமது ஆன்லைன் கல்வி ரேடியோ "
மாணவரது காலத்தை பொன்னான தாக மாற்றும் விதமாக கொரோனா காலத்தில் வழங்கப்பட்ட செயல்பாடுகள்:
*திருக்குறள்
*பழமொழி
*விடுகதை
*வாய்ப்பாடு
*கதை கூறுதல்
*தேசத் தலைவர்கள்
*ஓவியம்
இச்செயல்பாடுகளில் மாணவர்களில் எழுதியும் பின் அதற்கான ஆடியோக்களை உருவாக்கியும் சிறப்பான முறையில் பங்கேற்று பரிசுகளையும் பாராட்டுகளையும் பெற்றனர் என்பது பேரானந்தம்.
*"பலனறிந்து பயன்படுத்துபவர் பயன்பெறுவர்
பயனறிந்து பகிர்பவர் பண்பெறுவர்" இதற்கான அச்சாணி "ஆன்லைன் கல்வி ரேடியோ"*
ஆன்லைன் கல்வி ரேடியோவின் பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபட்ட மாணவர்களின் கற்றலானது இன்றளவும் எவ்விதத் தொய்வுமின்றி சிறப்பாக இருக்கிறது என்பதில் எவருக்கும் ஐயமில்லை.
பள்ளி தொடங்கிய பின் வகுப்பறை கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளில் ஆன்லைன் கல்வி ரேடியோவின் பயன்பாடுகள்:
பள்ளி தொடங்கிய பின்பும் மேலும் பல புதிய பகுதிகள் ஆன்லைன் கல்வி ரேடியோவில்...
*Points to remember
* சொல்வதை எழுதுதல் பகுதி
*Reading corner
*Writing corner
*Story corner
*Song corner
*Video corner
*Activity corner
*Online test
*Online revision test
*NMMS இன்னும் பல...
இவ்வனைத்துப் பகுதிகளுமே மாணவர்களுக்கு வகுப்பறைக் கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளில் மிகுந்த பயனளிக்கிறது.
மாணவர்கள் பள்ளிக்கு வர இயலாத போது (விடுப்பு எடுக்கும் போது) ஆன்லைன் கல்வி ரேடியோவின் பாடப்பகுதிக்கான விளக்கம் அடங்கிய ஆடியோ மூலம் தெரிந்துகொள்ள ஏதுவாக உள்ளது.
மேலும் ஒவ்வொரு பாடப்பகுதியிலும் அவர்களின் கற்றல் அடைவை சோதிக்கும் விதமாக online test மற்றும் online revision test ம் இதில் இருப்பது மாணவர்களுக்கு மிகுந்த உபயோகமாக உள்ளது.
NMMS தேர்வுக்கான MAT, SAT போன்றவைகளில் ஆடியோ மற்றும் வீடியோவும் மீத்திறன் பெற்ற மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கிறது.
"சுதந்திரமாய் சுற்றித் திரியும் காற்று புல்லாங்குழலில் அடைபட்டு விரல்களால் இசையாகிறது"
அதுபோல்
*"சுதந்திரமாய் சுற்றித் திரியும் காற்று
ஆன்லைன் கல்வி ரேடியோ மூலம்
அறிவுக்கு விருந்தாகிறது"
*
*"தன்னை தன்னாலே அறியக்கூடிய வாய்ப்பு
என்ற திருமூலரின் வாக்கிற்கிணங்க"*
Online test- ம் சொல்வதை எழுதுதல் பகுதியும்
வினா விடை பகுதியும் ஆன்லைன் கல்வி ரேடியோவிலே... சுய மதிப்பீடாகும்.
ஆன்லைன் வீடியோவில் எனது மாணவர்களின் பங்களிப்பு மற்றும் செயல்பாடுகள்: கொரோனா ஊரடங்கு காலத்தில் ஆன்லைன் கல்வி ரேடியோவின் செயல்பாடுகளில் பங்கேற்றமைக்காக அம்மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி ரேடியோவின் சார்பாக e-certificate அனைவருக்கும் வழங்கி பாராட்டப்பட்டது.
14th November 2021 குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு ஆன்லைன் கல்வி ரேடியோவில் வழங்கப்பட்ட செயற்பாடுகள்: குழந்தைகள் தினத்தை முன்னிட்டு ஆன்லைன் கல்வி ரேடியோவில் பல்வேறு செயல்பாடுகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன. அதில் எமது பள்ளி மாணவர்கள் 12 பேர் பங்கேற்று கேடயமும் பரிசுகளும் சான்றிதழ்களும் பெற்றனர்.
கொரோனா ஊரடங்கு காலத்திலும் மாணவர்களின் ஆர்வத்தை கருத்தில் கொண்டு அதற்கு அங்கீகாரம் அளித்தது நமது ஆன்லைன் கல்வி ரேடியோ.
வழங்கப்பட்ட செயல்பாடுகள் *words or sentences-50
*விடுகதை அல்லது பழமொழி-50
*திருக்குறள்-50
*வினா விடை-100 *தேசத்தலைவர்கள்-5
*Drawing &Colouruing-5
*Stories-5
*Tables-20
மேற்கண்ட அனைத்து செயல்பாடுகளையும் எழுதியும் பேசியும் நூறு சதவீதம் முழுமையாக முடித்தவர்களுக்கு கேடயம் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
26th January 2022 குடியரசு தினவிழாவை முன்னிட்டு ஆன்லைன் கல்வி ரேடியோவில் வழங்கப்பட்ட செயல்பாடுகள்:
பள்ளிகள் திறந்த பின் குடியரசு தினவிழாவை முன்னிட்டு ஆன்லைன் கல்வி ரேடியோவில் பல்வேறு செயல்பாடுகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன அதில் எம்பள்ளி மாணவர்கள் 15 பேர் பங்கேற்று கேடயங்கள், பரிசுகள், சான்றிதழ்கள், போன்றவற்றை பெற்றனர். இதற்கெல்லாம் காரணகர்த்தாவான திரு. கார்த்திக் ராஜா அவர்களுக்கு மாணவர்கள் சார்பாகவும் பள்ளியின் சார்பாகவும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம்.
செயல்பாடுகள்
*தமிழ் வாக்கியங்கள்-10
*ஆங்கில வாக்கியங்கள்-5
*வாய்ப்பாடு-any one
*Good habits & Awareness- 5 points
*3/5 mins reading
மேற்கூறிய செயல்பாடுகளை 13/12/2021 முதல் 31/12/2021 முடிய 15 நாட்கள் இச்செயல்பாடுகளை தினமும் முழுமையாக முடித்த எம்பள்ளி மாணவர்களுக்கு கேடயங்கள் வழங்கி 26th January 2022-ல் சிறப்பிக்கப்பட்டது.
ஆன்லைன் கல்வி ரேடியோ மூலம் எம் பள்ளி மாணவர்கள் பெற்ற ஊக்கமும் அங்கீகாரமும்:
* பாட கருத்துக்களுக்கான ஆடியோக்களை கேட்டு பயன்பெற்ற எமது பள்ளி மாணவர்களுக்கு (24 பேர்) வழங்கப்பட்ட e-certificate.
*14th November 2021 ல் ஆன்லைன் கல்வி ரேடியோவின் செயல்பாடுகளில் பங்கேற்ற மாணவர்கள் 12 பேருக்கு வழங்கப்பட்ட கேடயமும், பரிசுகளும், சான்றிதழ்களும் மாணவர்களை ஊக்கப்படுத்தியது.
*"ஊக்கு விற்பவனை ஊக்கப்படுத்தினால்
தேக்கு விற்பவனாக்கலாம்"*
என்பது போல
பங்கேற்ற மாணவர்களுக்கு அளிக்கும் ஊக்கம் அவர்களுக்கு அங்கீகாரமாகவும், மற்ற மாணவர்களுக்கு ஏக்கம் மூலம் தாக்கத்தை ஏற்படுத்தி அவர்கள் மேம்படவும் வழிவகுக்கும் என்பதில் ஐயமில்லை.
*26th January 2022 குடியரசு தினவிழாவை முன்னிட்டு ஆன்லைன் கல்வி ரேடியோ மூலம் பல்வேறு செயல்பாடுகள் வழங்கப்பட்டன. அதில் எம்பள்ளி மாணவர்கள் 15 பேர் பங்கேற்று கேடயங்களும்ப், பரிசுகளும், சான்றிதழ்களும் பெற்றனர்.
ஆன்லைன் கல்வி ரேடியோ வைப்பற்றி எம்பள்ளி மாணவரது பெற்றோரது கருத்துக்கள்:
கொரோனா காலத்தில் மாணவர்களின் கற்றல் தொய்வின்றி கற்பதற்கு பேருதவியாக இருந்தது.
ஆன்லைன் கல்வி ரேடியோவில் கற்பதால் மாணவர்களின் உடல்நலமும் மனநலமும் பாதுகாக்கப்படுகிறது.
எங்கேயும் எப்போதும் எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்பதன் மூலம் கருத்துக்கள் மிகுந்த தெளிவு பெறுகிறது.
செயல்பாடுகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கு பரிசுகளும், கேடயங்களும் வழங்குவதால் மாணவர்களிடையே கற்றலில் ஆர்வம் மேலோங்குகிறது.
"ஊக்கமே ஆக்கத்திற்கு வழி"
ஆன்லைன் கல்வி ரேடியோ பற்றி கல்வி அலுவலர்களின் கருத்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்
*மாவட்டக் கல்வி அலுவலர் திரு. கன்னிச்சாமி அவர்களிடம் ஆன்லைன் கல்வி ரேடியோ சிறந்த செயல்பாடுகளுக்கு பெற்ற பாராட்டு.
*Certificate of appreciation presented by kalvi 40- Bumble B Trust.
*Appreciation certificate presented by
The International Association of Lion Clubs.
*கோவை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திருமதி. கீதா அவர்களிடம் தினமலரின் இலட்சிய ஆசிரியர் விருது-21 பெற்ற கேடயம். இதற்கான அச்சாணி ஆன்லைன் கல்வி ரேடியோ என்பதில் பெருமிதம். *எமது பொள்ளாச்சி வடக்கு வட்டாரக் கல்வி அலுவலர்கள் திரு. சின்னப்பராஜ், திருமதி. சார்மிளா, திருமதி. யோகேஸ்வரி போன்றோரும் ஆன்லைன் கல்வி ரேடியோவின் செயல்பாடுகளுக்காக பாராட்டு தெரிவித்தனர்.
*"பிறக்கும் போது தாலாட்டு
இறக்கும் போது நீராட்டு
இடையில் கிடைப்பது பாராட்டு"
சாதிப்போம்!வெல்வோம்!*
ஒன்றுபடுவோம்! வெல்வோம்!
எம்.ஸ்ரீதேவி
பட்டதாரி ஆசிரியை - கணிதம்
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி
வடக்கிபாளையம் - பொள்ளாச்சி வடக்கு
கோவை மாவட்டம்
No comments:
Post a Comment