ஆசிரியர் பெயர்: இரா.காயத்ரி
பதவி : பட்டதாரி
ஆசிரியை (கணிதம்)
பள்ளி : ஊ.ஒ.ந.நி.பள்ளி, எலுமிச்சனஅள்ளி , காரிமங்கலம் ஒன்றியம், தருமபுரி மாவட்டம்
அறிமுகம்: கொரானா காலகட்டத்தில் மாணவர்களுக்கு ஏதேனும் ஒன்றை கொடுக்க
வேண்டும் என தேடிய போது ஜூலை 2021 இல் பயிற்சித்தாள்கள் கொடுக்க தேடிய போது ஆன்லைன் கல்வி ரேடியோவில் அடி எடுத்து வைத்தேன். மாணவர்கள் ஆர்வமுடன் செய்ய
அந்த பயிற்சித்தாள்களை இன்றுவரை பயன்படுத்தி வருகிறோம். பள்ளி மற்றும் வகுப்பறை சார்ந்த அத்தனை கோப்புகளும்
சேகரித்து வைத்துள்ளனர். எளிமையாக பிரதி எடுத்து பயன்படுத்தலாம்.
ஆன்லைன் கல்விரேடியோவில் எனது பயணம் :
1.அக்டோபர் 2021 இல் தருமபுரி கல்வி ரேடியோ குழுவில் நவம்பர் மாத
குழந்தைகள் தின விழா செயல்பாடுகள் குறித்த இணைப்பு தென்பட்டது. ஓராண்டு கால இடைவெளிக்கு
பின்னர் மாணவர்களை ஊக்குவிக்க நல்ல வாய்ப்பென்று 20 மாணவர்கள் 3 முதல் 8 ஆம்
வகுப்பு வரை பங்கேற்க செய்தேன். நினைத்ததை விட மாணவர்களிடம் நல்ல ஆர்வம் தென்பட்டது. இதில் 3 மாணவர்கள் கேடயம், பதக்கமும், 6 மாணவர்கள் பதக்கமும், 11 மாணவர்கள் சான்றிதழ்களும்
பெற்றனர். அதிலிருந்து மற்ற
மாணவர்களும் வாய்ப்பு எப்போது மீண்டும் வரும் என கேட்க துவங்கினார்கள். தலைமையாசிரியர்
பாராட்டுகளுடன் ஒத்துழைப்பும் அளித்தார். இந்த செயல்பாடுகள் செய்ய உதவி ஆசிரியை சாந்தி அவர்கள் ஒத்துழைப்பு தந்தார். மாணவர்கள் மற்றும் ஆசியர்கள்
காணொளியும் கல்வி ரேடியோ யூ டூபில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
பெற்ற பரிசுப்பொருட்களை
பள்ளி மேலாண்மை குழு மற்றும் ஆசிரியப் பயிற்றுநர் முன்னிலையில் வழங்கி
பாராட்டினோம்.
அனைத்து கல்வி ரேடியோ
வலையொலி பக்கத்தில் சேமித்துள்ளனர். எப்போதும் வேண்டுமானாலும் பார்த்து பயன் பெறலாம்.
2. அதன் பிறகு மாணவர்களுக்கு கல்வி ரேடியோவை எவ்வாறு
பயன்படுத்துவது, பாடம் சார்ந்த மற்றும் பாடம் சாராத எத்தனை விதமான விஷயங்கள் உள்ளன என்பதை
தெளிவுப்படுத்தினேன். பெரும்பாலான மாணவர்கள் செயல்படுத்த கற்றுக்கொண்டு செயல்படுத்தி வருகின்றனர். பெற்றோர்களிடமும் நல்ல
வரவேற்பு கிடைத்துள்ளது. பாடல், கதை,விடுகதை, பொது அறிவு மற்றும் பாடம் என
மாணவர்கள் பயன்படுத்த அனைத்தும் ஒருங்கிணைந்து உள்ளது.
3.மாணவர்களுக்காக எனது பங்களிப்பும் தர வேண்டும் என எண்ணினேன். பாடல்கள், ஆறாம் வகுப்பு வாசித்தல்
பகுதி, எளிமையாக நினைவில்
கொள்ள (points to remember) பகுதி என 150 இற்கும் மேற்பட்ட ஆடியோக்களையும் மற்றும் ஆன்லைன் தேர்விற்கு 5 முதல்
8 ஆம் வகுப்பு வரை தயார் செய்து கொடுத்து தொடர்ந்து பயணிக்கிறேன். ஆன்லைன் வினாத்தாள்களும் வடிவமைத்து
தந்துள்ளேன்.
4. ஆன்லைன் கல்வி ரேடியோ சிறப்பு மலர் தயாரிப்பிற்கு தருமபுரி
மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடமிருந்து வாழ்த்துரையும் கிடைக்கப்பெற்றேன்.இதனை கேட்டு ஐயா அவர்கள்
பாராட்டினார்கள். பிரதியை கொடுத்த போது மனமகிழ்ச்சியோடு பாராட்டினார்கள். மாணவர்களை கருத்தில் கொண்டு
எடுத்து வைத்த அடி அங்கீகாரமாக மாறியுள்ளது. எமது மாவட்டத்தில் நான் மட்டுமே ஒரே ஒரு
ஒருங்கிணைப்பாளராக முதலில் இங்கு இணைந்து செயல்பட்டு வருகிறேன் என்பதை
மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். விரைவில் பலரையும் இதில்
இணைப்பேன்.
5. ஜனவரி 2022 குடியரசு தின செயல்பாடுகளில் 45 மாணவர்கள் பங்கேற்றனர். சிறப்பாக செய்து பதக்கமும், சான்றிதழும் பெற்றனர். இதன் மூலம் அவர்களது கேட்டல், படித்தல், எழுதுதல் மற்றும் வரையும்
திறன் மேம்பட்டுள்ளதை நன்றாக கண்காணிக்க முடிகிறது. அந்த கோப்புகளை பத்திரமாக சேகரித்து வைத்துள்ளேன்.
எமது பள்ளிக்கு அருகாமை
பள்ளி எர்ரசீகலஅள்ளி நடுநிலை பள்ளி உதவி ஆசிரியை திருமதி. இராஜேஸ்வரி அவர்களையும் ஊக்குவித்து, 12 மாணவர்கள் பங்கேற்று சான்றிதழ் பெற்றனர்.
எமது பள்ளியில் உடன்
பணியாற்றும் 5 ஆசிரியர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ் பெற்றுத்தந்தேன்.
6. கல்வி மலரில் பள்ளி மேலாண்மை குழு தலைவி கருத்து
பகிர்ந்துள்ளார். மேலும் மற்ற உறுப்பினர்களிடம் இதனை பற்றி கூறி வருகிறார். அவர்களுடைய இரண்டு
பிள்ளைகளும் கேடயம், பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் பெற்றுள்ளனர்.
ஆன்லைன் கல்வி ரேடியோ பற்றிய அனுபவம்:
அரசு பள்ளி மாணவர்களுக்கு
ஆபத்தில்லாமல், எளிமையாக கையாளக்கூடிய ஒரு தளம். மாணவர்களுக்கு ஏற்படும்
சந்தேகங்களை தானே கேட்டு களைந்திடலாம். எங்களை போன்ற
ஆசிரியர்களுக்கு கூட்டு முயற்சியில் கிடைத்த வெற்றி. முகமறியாத எத்தனையோ அரசு பள்ளி மாணவர்களுக்கு சென்று பயனடையும், எதையோ புதிதாக சாதித்தது
போல் ஒரு உணர்வு. இந்த ஆன்லைன் கல்வி ரேடியோ பயணம் இன்னும் தொடரும்.
ஆசிரியை. இரா.காயத்ரி
ஊ.ஒ.ந.நி.பள்ளி, எலுமிச்சனஅள்ளி
காரிமங்கலம் ஒன்றியம்
தருமபுரி மாவட்டம்
Thank you sir. Wonderful platform for students and teachers. You have given me a recognition. Really excellent work.
ReplyDelete