Sunday, October 9, 2022

Tr.Gayathri-PUMS-ELUMICHANAHALLI-Dharmapuri Dt

  


ஆசிரியர் பெயர்: இரா.காயத்ரி

பதவி   : பட்டதாரி ஆசிரியை (கணிதம்)

பள்ளி   : ஊ.ஒ.ந.நி.பள்ளி, எலுமிச்சனஅள்ளி , காரிமங்கலம் ஒன்றியம், தருமபுரி மாவட்டம்

 

 அறிமுகம்:   கொரானா காலகட்டத்தில் மாணவர்களுக்கு ஏதேனும் ஒன்றை கொடுக்க வேண்டும் என தேடிய போது ஜூலை 2021 இல் பயிற்சித்தாள்கள் கொடுக்க தேடிய போது  ஆன்லைன் கல்வி ரேடியோவில் அடி எடுத்து வைத்தேன். மாணவர்கள் ஆர்வமுடன் செய்ய அந்த பயிற்சித்தாள்களை இன்றுவரை பயன்படுத்தி வருகிறோம். பள்ளி மற்றும் வகுப்பறை சார்ந்த அத்தனை கோப்புகளும் சேகரித்து வைத்துள்ளனர். எளிமையாக பிரதி எடுத்து பயன்படுத்தலாம்.

 

 ஆன்லைன் கல்விரேடியோவில் எனது பயணம்  :

  1.அக்டோபர் 2021 இல் தருமபுரி கல்வி ரேடியோ குழுவில் நவம்பர் மாத குழந்தைகள் தின விழா செயல்பாடுகள் குறித்த இணைப்பு தென்பட்டது. ஓராண்டு கால இடைவெளிக்கு பின்னர் மாணவர்களை ஊக்குவிக்க நல்ல வாய்ப்பென்று 20 மாணவர்கள் 3 முதல் 8 ஆம் வகுப்பு வரை பங்கேற்க செய்தேன். நினைத்ததை விட மாணவர்களிடம்  நல்ல ஆர்வம் தென்பட்டது. இதில் 3 மாணவர்கள் கேடயம், பதக்கமும், 6 மாணவர்கள் பதக்கமும், 11 மாணவர்கள் சான்றிதழ்களும் பெற்றனர். அதிலிருந்து மற்ற மாணவர்களும் வாய்ப்பு எப்போது மீண்டும் வரும் என கேட்க துவங்கினார்கள். தலைமையாசிரியர் பாராட்டுகளுடன் ஒத்துழைப்பும் அளித்தார். இந்த செயல்பாடுகள் செய்ய உதவி ஆசிரியை சாந்தி அவர்கள் ஒத்துழைப்பு தந்தார். மாணவர்கள் மற்றும் ஆசியர்கள் காணொளியும் கல்வி ரேடியோ யூ டூபில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

      பெற்ற பரிசுப்பொருட்களை பள்ளி மேலாண்மை குழு மற்றும் ஆசிரியப் பயிற்றுநர் முன்னிலையில் வழங்கி பாராட்டினோம்.

  அனைத்து கல்வி ரேடியோ வலையொலி பக்கத்தில் சேமித்துள்ளனர். எப்போதும் வேண்டுமானாலும் பார்த்து பயன் பெறலாம்.

 



2. அதன் பிறகு மாணவர்களுக்கு கல்வி ரேடியோவை எவ்வாறு பயன்படுத்துவது, பாடம் சார்ந்த மற்றும் பாடம் சாராத எத்தனை விதமான விஷயங்கள் உள்ளன என்பதை தெளிவுப்படுத்தினேன். பெரும்பாலான மாணவர்கள் செயல்படுத்த கற்றுக்கொண்டு செயல்படுத்தி வருகின்றனர். பெற்றோர்களிடமும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பாடல், கதை,விடுகதை, பொது அறிவு மற்றும் பாடம் என மாணவர்கள் பயன்படுத்த அனைத்தும் ஒருங்கிணைந்து உள்ளது.

3.மாணவர்களுக்காக எனது பங்களிப்பும் தர வேண்டும் என எண்ணினேன். பாடல்கள், ஆறாம் வகுப்பு வாசித்தல் பகுதி, எளிமையாக நினைவில் கொள்ள (points to remember) பகுதி என 150 இற்கும் மேற்பட்ட ஆடியோக்களையும் மற்றும் ஆன்லைன் தேர்விற்கு 5 முதல் 8 ஆம் வகுப்பு வரை தயார் செய்து கொடுத்து தொடர்ந்து பயணிக்கிறேன். ஆன்லைன் வினாத்தாள்களும் வடிவமைத்து தந்துள்ளேன்.

4. ஆன்லைன் கல்வி ரேடியோ சிறப்பு மலர் தயாரிப்பிற்கு தருமபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடமிருந்து வாழ்த்துரையும் கிடைக்கப்பெற்றேன்.இதனை கேட்டு ஐயா அவர்கள் பாராட்டினார்கள். பிரதியை கொடுத்த போது மனமகிழ்ச்சியோடு பாராட்டினார்கள். மாணவர்களை கருத்தில் கொண்டு எடுத்து வைத்த அடி அங்கீகாரமாக மாறியுள்ளது. எமது மாவட்டத்தில் நான் மட்டுமே ஒரே ஒரு ஒருங்கிணைப்பாளராக முதலில் இங்கு இணைந்து செயல்பட்டு வருகிறேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.  விரைவில் பலரையும் இதில் இணைப்பேன்.



5. ஜனவரி 2022 குடியரசு தின செயல்பாடுகளில் 45  மாணவர்கள் பங்கேற்றனர். சிறப்பாக செய்து பதக்கமும், சான்றிதழும் பெற்றனர். இதன் மூலம் அவர்களது கேட்டல், படித்தல், எழுதுதல் மற்றும் வரையும் திறன் மேம்பட்டுள்ளதை நன்றாக கண்காணிக்க முடிகிறது.  அந்த கோப்புகளை பத்திரமாக சேகரித்து வைத்துள்ளேன். 

       எமது பள்ளிக்கு அருகாமை பள்ளி எர்ரசீகலஅள்ளி நடுநிலை பள்ளி உதவி ஆசிரியை திருமதி. இராஜேஸ்வரி அவர்களையும் ஊக்குவித்து, 12 மாணவர்கள் பங்கேற்று சான்றிதழ் பெற்றனர்.

     எமது பள்ளியில் உடன் பணியாற்றும் 5 ஆசிரியர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ் பெற்றுத்தந்தேன்.




6. கல்வி மலரில் பள்ளி மேலாண்மை குழு தலைவி கருத்து பகிர்ந்துள்ளார். மேலும் மற்ற உறுப்பினர்களிடம் இதனை பற்றி கூறி வருகிறார். அவர்களுடைய இரண்டு பிள்ளைகளும் கேடயம், பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் பெற்றுள்ளனர்.

 

ஆன்லைன் கல்வி ரேடியோ பற்றிய அனுபவம்:

      அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆபத்தில்லாமல், எளிமையாக கையாளக்கூடிய ஒரு தளம்.  மாணவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை தானே கேட்டு களைந்திடலாம்.  எங்களை போன்ற ஆசிரியர்களுக்கு கூட்டு முயற்சியில் கிடைத்த வெற்றி.  முகமறியாத எத்தனையோ அரசு பள்ளி மாணவர்களுக்கு சென்று பயனடையும், எதையோ புதிதாக சாதித்தது போல் ஒரு உணர்வு. இந்த ஆன்லைன் கல்வி ரேடியோ பயணம் இன்னும் தொடரும்.

 

ஆசிரியை. இரா.காயத்ரி

ஊ.ஒ.ந.நி.பள்ளி, எலுமிச்சனஅள்ளி

காரிமங்கலம் ஒன்றியம்

தருமபுரி மாவட்டம்

 

 

Friday, October 7, 2022

Tr-S.Kanagalakshmi-BT-PUMS-Bodipalayam-Pollachi-North-Coimbatore-District

 Online kalvi Radio Teacher's experience 
 www.kalviradio.com


சி.கனகலஷ்மி
பட்டதாரி ஆசிரியை
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி
போடி பாளையம்
பொள்ளாச்சி வடக்கு
கோயம்புத்தூர் மாவட்டம்.

அறிமுகம் ....

ஒரு இனிய காலைப் பொழுது பொள்ளாச்சியில் இருந்து மதுரைக்கு செல்ல பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்தேன். கொரோனா -19 பெருந்தொற்றால் பள்ளி மாணவர்களின் கற்றல் தடைபட்ட பொழுது இடைவெளி இன்றி கற்சிலை தொடர்ந்து மேற்கொள்ள எவ்விதம் முயற்சிக்கலாம் என்று எண்ணிக் கொண்டிருந்தேன். அந்த நேரத்தில் கைபேசியின் அழைப்பு வந்தது. எங்கள் பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய பட்டதாரி ஆசிரியை திருமதி. எம் ரஜனி அவர்கள் ஆன்லைன் கல்வி ரேடியோவை பற்றி சொல்லி அறிமுகம் செய்தார். நானும் உடனே என் கைப்பேசி மூலமாக ஆன்லைன் கல்வி ரேடியோவின் செயல்பாடுகளை கேட்டறிந்தேன். இயக்குவதற்கு எளிமையாகவும், கேட்பதற்கு அருமையாகவும், இருந்தது. இவ்வாறு கையாளுவதற்கு எளிமையாக இருப்பதால் மாணவர்களின் கற்றலை நிச்சயம் ஆன்லைன் கல்வி ரேடியோ வலுப்படுத்தும் என்பதை புரிந்து கொண்டேன். மேலும் பள்ளி மாணவர்கள் வீட்டில் இருந்தபடியே இந்த இக்கட்டான நோய் தொற்று சூழலில் கற்றலை தொடர நல்லதொரு வாய்ப்பு ஆன்லைன் கல்வி ரேடியோ மூலமாக கிடைத்திருக்கிறது என்பதை உணர்ந்தேன். எங்கள் பள்ளி மாணவர்களுக்கு முதலில் ஆன்லைன் கல்வி ரேடியோவின் சிறப்பு அம்சங்களை பற்றியும், எவ்வாறு இயக்கி பயன்படுத்துவது என்பதைப் பற்றியும் எடுத்துக் கூறினேன். www.kalviradio.com இணைய வலை பக்கத்திற்கு சென்று மாணவர்கள் கற்றலுக்காக பயன்படுத்த ஆரம்பித்தனர். அதன்பின்னர் நானும் ஆன்லைன் கல்வி ரேடியோவில் சமூக அறிவியல் பாடத்தில் என் பங்களிப்பை தருவதற்கு ஆர்வம் காட்டினேன். இதனால் எங்கள் பள்ளி மாணவர்கள் மட்டுமல்லாமல் அனைத்து அரசு பள்ளி மாணவர்களும் பயனுற வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியது. அப்பொழுது திரு. கார்த்திக் ராஜா அவர்களிடம் என் பங்களிப்பு செய்யும் எண்ணத்தை வெளிப்படுத்தினேன். அவர் மிகவும் பொறுமையாக, நிதானமாக, தெளிவாக ஆடியோ பதிவிடும் முறையினை விளக்கிக் கூறினார். 


"எய்தற்கரியது இயைந்தக்கால்  அந்நிலையே

 செய்தற் கரிய செயல்."

 என்ற வள்ளுவ பெருந்தகையின் வாக்கிலற்கேற்ப நல்ல செயல்களை நினைத்தவுடன் செய்ய வேண்டும் என்ற முனைப்பு தோன்றியது.


கற்பக விருட்சகம் கல்வி ரேடியோ....

 எங்கள் பள்ளி பசுமையான சூழலில் போடிபாளையம் கிராமத்தில் அமைந்திருக்கிறது. இங்கு ஓரக்கலியூர், இராசி செட்டிபாளையம் போன்ற அருகில் உள்ள கிராமங்களில் இருந்து மாணவர்கள் வந்து கல்வி பயின்றனர் எனக்கு சிறுவயதில் இருந்து வானொலி கேட்கும் நல்ல பழக்கம் உண்டு. அதனால் வானொலி கேட்டுக்கொண்டே எனது அன்றாட பணிகளை உற்சாகத்துடன் தொடங்குவேன். நாம் செய்கின்ற பல்வேறு பணிகளுக்கு இடையே நிறைய தகவல்களையும், புதிய செய்திகளையும் கேட்டுக்கொண்டே செய்யலாம். அறிவைப் பெருக்கிக் கொள்ளலாம். அதனால் தான் என் மாணவர்களை அடிக்கடி வானொலி கேட்கும்படி ஊக்கப்படுத்துவேன். அவ்வாறுதான் கொரோனா ஊரடங்கு காலத்தில் மாணவர்களின் பாட அறிவை வளர்த்துக் கொள்வதற்கு பக்க பலமாகவும், நவீன உத்தியாகவும் ஆன்லைன் கல்வி ரேடியோ இருந்தது. மேலும் வீட்டில் இருந்தபடியே பெற்றோர்களின் கண்காணிப்புடன் பள்ளி மாணவர்கள் தன்னார்வத்துடன் தங்களது கற்றலை மேற்கொள்ளவும், வழி வகுத்தது. மேலும் மாணவர்களின் திறன்களை மேம்படுத்திக் கொள்ளவும் வசதியாக அமைந்திருப்பது அதனுடைய தனிச்சிறப்பாகும். "எரிந்து கொண்டுள்ள விளக்கே, மற்ற விளக்குகளை ஏற்ற முடியும்." என்று ரவீந்திரநாத் தாகூர் கூறினார். எனவே எங்கள் கிராமப்புற மாணவர்கள் எளிமையாக வீட்டில் இருந்தபடியே கற்றுக் கொள்வதற்கும், கற்றுக் கொண்டதை சுய கற்றல் செய்து பயன் பெறுவதற்கும், கொரோனா காலத்தில் ஆன்லைன் கல்வி ரேடியோ பெரிதும் உதவியது. இன்று அனைத்து பள்ளி மாணவர்களும் எளிமையாக பயன்படுத்தும் வண்ணம் படைப்பு தொகுப்புகள் வலை பக்கங்களில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. இது ஆன்லைன் கல்வி ரேடியோவின் கடின உழைப்பிற்கு கிடைத்த வெற்றியாகும்.


பங்களிப்பும் பயன்பாடும்..


"எனைத் தானும்  நல்லவை கேட்க அனைத்தானும் ஆன்ற பெருமை தரும்."

 என்ற குறள் நெறி கேற்ப சிறந்த பெருமைகளை தரக்கூடிய நற்கருத்துக்களை மாணவர்கள் எளிமையாக கேட்டறிந்து, பயம் பெறுவதற்கு ஆன்லைன் கல்வி ரேடியோ புதிய பாதையை அமைத்து கொடுத்துள்ளது. இத்தகைய புதிய பாதையில் என் முதல் பயணம் ஆரம்பமானது. முதலில் ஆறு ,ஏழு, எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு சமூக அறிவியல் பாட வினா- விடை  தொகுப்புகளை ஆடியோ மூலம் பதிவு செய்து வழங்கினேன். பின்னர் கதை கேட்பதிலும் சொல்வதிலும் ஆர்வம் இருந்ததால் கதைகள் மற்றும் விழிப்புணர்வு தகவல்கள், நன்னெறி கருத்துக்கள் போன்றவற்றையும் பதிவு செய்தேன். மேலும் தேசிய திறனறி தேர்வுக்கு பயிற்சி அளிக்கும் பொருட்டு NMMS கையேடு வாயிலாக சமூக அறிவியல் முக்கிய பாட கருத்துக்கள் மற்றும் Points to remember, வினா தயாரிப்பு ஆகியவற்றையும் பதிவு செய்து வழங்கினேன். இவ்வாறு மாணவர்கள் ஆன்லைன் கல்வி ரேடியோவை பாட கருத்துக்கள், பாடல்கள், பாடப்பயிற்சிகள் Online Test என்று அதன் பல்வேறு பரிமாணங்களை சூழலுக்கு தகுந்தார் போல் பயன்படுத்தி வருகின்றனர். "அறிவற்றங் காக்கும் கருவி செறுவார்க்கும் உள்ளழிக்க லாகா அரண்." இதனை தருவது கேடில் வெளிச்செல்வம் கல்வி ஆகும். கற்கும் மாணவர்களின் உளநிலையை அறிந்து கற்பித்தால் எதையும் எளிதாக கற்பிக்க முடியும். இந்த அறிவியல் தொழில்நுட்ப உலகத்தில் அறிவு பெருக்கம் அளவின்றி நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. இக்கால பட்டத்திற்கு பொருந்தும் வகையில் ஆன்லைன் கல்வி ரேடியோவின் செயல்பாடுகளை ஆடியோ வழியாக மாணவர்கள் மீண்டும் மீண்டும் கேட்டு கற்றலில் முன்னேற்றம் காண்கின்றார்கள். என் வகுப்பறையில் கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளில் பாட வேளைக்கு தகுந்தபடி வினா விடை தொகுப்புகளை மாணவர்கள் கேட்டு நோட்டில் எழுதி பார்ப்பார்கள். மீண்டும் நன்றாக பாட கருத்துக்களை வலுவூட்டுவதற்காக Points to remember பகுதியை கேட்க செய்வது உண்டு. மற்ற ஆசிரியர்கள் வராத நேரங்களில் அந்த பாடங்களை கேட்டுக்கொண்டே எழுதுவதற்கும், படிப்பதற்கும் பயிற்சி கொடுப்பேன். ஆர்வத்துடன் கவனிப்பதற்காக கதைகள் கேட்கச் செய்து ,அதில் உள்ள நன்னெறி கருத்துக்களை விவாதிப்பதும், அப்பொழுது நடக்கும். தன்னார்வம் மிக்க மாணவர்களை கண்டறிந்து மாலை நேரங்களிலும், விடுமுறை நேரங்களிலும், சொல்வதை எழுதுதல், பகுதியை கேட்டு எழுத ஊக்கப்படுத்தியதால், மாணவர்கள் நன்கு பயிற்சி வருகிறார்கள்.


  

வாழ்த்துரையும் வரவேற்பும் ....

கோவை மாவட்டம், (பொள்ளாச்சி வடக்கு) கல்வி அலுவலர் திரு. பி. கன்னிச்சாமி அவர்கள், வட்டார கல்வி அலுவலர்கள் திருமதி. சார்மிளா அவர்கள், திருமதி. யோகேஸ்வரி அவர்கள், வட்டார வள மைய மேற்பார்வையாளர் திரு. கந்தசாமி அவர்கள் மற்றும் ஆசிரியப் பயிற்றுநர்கள் ஆகியோர்களின் வாழ்த்துக்களை நானும் எனது மாணவர்களும் பெற்றோம்.
 


 எங்கள் பள்ளியின் தலைமை ஆசிரியை திருமதி. ஆர். அம்சவேணி அவர்களும், பள்ளியின் உதவி ஆசிரியர்களும், பெற்றோர்களும் முழு ஆதரவையும், ஒத்துழைப்பையும் வழங்கி வாழ்த்தினார்கள். அதனால் தான் எங்களால் ஆன்லைன் கல்வி ரேடியோவின் செயல்பாடுகளில் சுதந்திரமாக செயலாற்றி பங்கு பெற முடிந்தது. வாய்ப்புக்களை பயன்படுத்திக்கொண்டு மாணவர்களின் கற்றலில் மாற்றங்களை கொண்டு வருவதற்கு உதவி புரிந்தது.


 பங்கேற்பும் பாராட்டும் பரிசும்..

 கல்வி வலையொலியில் நான்...
 நான் பிறந்தது படித்தது எல்லாம் மதுரை மண்ணில் தான். ஆசிரியர் பணியின் அருமைகளை சுட்டிக்காட்டி வளர்க்கப்பட்டதால் இப்பணியில் ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது. தந்தையின் தனியாக ஆவலாலும், ஆண்டவனின் ஆசியாலும் பொள்ளாச்சியில் (வடக்கு) 08.01.1999 வெள்ளியன்று இடைநிலை ஆசிரியராக பணியில் சேர்ந்தேன்.பின் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்றேன். மேலும் பதவி உயர்வில் 02.06.2010 புதன் அன்று முதல் பட்டதாரி ஆசிரியராக சேர்ந்து போடிப்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பணியாற்றி வருகிறேன். ஏதேனும் ஒரு வகையில் மாணவர்களின் கற்றல் கற்பித்தலை வளர்ச்சி அடைய செய்ய வேண்டுமென்றே எண்ணத்தில் செயலாற்றிக் கொண்டிருந்தேன். அவ்வாறே ஒருமித்த சிந்தனையில் உருவான ஆன்லைன் கல்வி ரேடியோவின் கூட்டு முயற்சியில் என்னை இணைத்துக் கொண்டேன். மாணவர்களையும் பங்கு பெற செய்து, பயனடைய செய்து வருகிறேன். இதில் பெற்றோரின் கண்காணிப்பும், பாதுகாப்பும் உறுதி செய்யப்படுகிறது. கால நேர அட்டவணை திரு. கார்த்திக் ராஜா அவர்களின் வழிகாட்டுதலுடன் என் பணியை தொடங்கினேன் .

24 .02 .2021 புதன்கிழமை முதல் பருவம் ஏழாம் வகுப்பு சமூக அறிவியல் வினா விடை தொகுப்பு முதல் ஆடியோவை பதிவு செய்து அனுப்பினேன். மாணவர்களுக்கு நம்மால் ஆன ஒரு சிறு முயற்சியை முன்னெடுத்து இருக்கிறோம் என்பதில் மனமகிழ்ச்சி ஏற்பட்டது. திரு.கார்த்திக் ராஜா அவர்களின் தலைமையில், தன்னார்வமிக்க அரசு பள்ளி ஆசிரியர்களின் கூட்டு முயற்சியில், மாணவர்களின் கற்றல் நலனுக்கான உயரிய நோக்கில் நோக்கத்தில் என் முதல் பயணம் 24 .02 .2021 தொடங்கி இனிமையாக தொடர்கிறது.
 எளிமை ;இனிமை; புதுமை ;அருமை; ஆன்லைன் கல்வி ரேடியோ



 "மனிதனுடைய முழு திறமைகளின் வெளிப்பாடே, உண்மையான கல்வி." என்று நம் தேசத்தந்தை காந்தியடிகள் கூறினார். மாணவர்களின் திறமைகளை வெளிக்கொணரும் வண்ணம் ஆன்லைன் கல்வி ரேடியோவில் மாணவர்களின் கல்வி செயல்பாடுகள் வரவேற்கப்பட்டன. எங்கள் பள்ளி மாணவர்கள் அதில் தன்னார்வத்துடன் பங்கேற்று செயல்பாடுகளை ஆடியோக்கள் மூலமாக பதிவு செய்தும், நோட்டில் தொடர்ந்து எழுதியும் வந்தனர். குறிப்பாக நவம்பர் 14 குழந்தைகள் தினம், ஜனவரி 26 குடியரசு தினம், ஆன்லைன் கல்வி ரேடியோவின் முதலாம் ஆண்டு நிறைவு விழா போன்றவற்றின் மூலமாக நடத்தப்பட்ட மாணவர்களுக்கான செயல்பாடுகளில் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள். அதற்காக கேடயமும், மெடல்களும், பாராட்டு சான்றிதழ்களும் பெற்று தமக்கும், பள்ளிக்கும் பெருமை சேர்த்தார்கள். அவர்களின் படைப்புகள் ஆன்லைன் கல்வி ரேடியோவில் "மின்மணிகள் மின்னும் நேரம்" எனும் பகுதியில் சேமிக்கப்பட்டுள்ளது.

" கற்றலின் முழு பயன் சுதந்திரமான படைப்புத்திறன் அடைவது தான்"
 டாக்டர். ராதாகிருஷ்ணன்.

 ஆன்லைன் கல்வி ரேடியோவில் மாணவர்களின் செயல்பாடுகளுக்கு வழிகாட்டிய ஆசிரியர்களுக்கும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
   


 ஒவ்வொரு பாராட்டும் அனைவரையும் உற்சாகப்படுத்தி அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்வதற்கு அடித்தளமாக அமைகிறது.

 எனது ஆசிரிய பணியில் முதன்முறையாக பொள்ளாச்சி வடக்கு குறுவள மையத்தில் சிகரம் தொட்ட ஆசிரியர் விருது (2005 -06) பெற்றேன். இரண்டாவது முறையாக 12 ஜூலை 2021 ஆன்லைன் கல்வி ரேடியோவின் மூலமாக கேடயமும், National Builders  பாராட்டு சான்றிதழும், புவனகிரி ரோட்டரி சங்க பாராட்டு சான்றிதழும் பெற்றேன். மேலும் 10 செப்டம்பர் 2022 அன்று திருநெல்வேலி லயன்ஸ் கிளப் மற்றும் கிரீன் சிட்டி சார்பாக Best Teacher Award  பாராட்டு சான்றிதழும் பெற்றேன். 



Play List இருப்பதால் மீண்டும், மீண்டும் கேட்டு படிப்பதற்கும், கற்றல் வலுப்பெறுவதற்கும் பயன்படுகிறது. தன்னார்வமிக்க மாணவர்கள் மட்டும் அதிகமாக பங்கு பெறவும், பயன்பெறவும் முடிகிறது.
" முயற்சி சிறகுகளை அசைப்போம்
 முடியாது என்பதை முடிப்போம்
 கனவை மெய்ப்பட வைப்போம்
 காலத்தில் வெற்றியைப் பதிப்போம்.,"
- கவிதாசன் 
ஆசிரிய பணி என்பது நமக்கு கிடைத்த அரிய வாய்ப்பு என்பதால் நமது முழு ஆற்றலுடனும், முழு திறமையுடனும் நம்பிக்கையுடனும் பயணிப்போம்.
 வாழ்க வளமுடன்
       வாழ்த்துக்களுடன்.

Tr.M.SRIDEVI-BT-PUMS-VADAKKIPALAYAM-POLLACHI-NORTH-COIMBATORE-DISTRICT

ஆன்லைன் கல்வி ரேடியோவில்
எனது அனுபவங்கள்

 எம்.ஸ்ரீதேவி
பட்டதாரி ஆசிரியை - கணிதம்
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி
வடக்கிபாளையம் - பொள்ளாச்சி வடக்கு
கோவை மாவட்டம் 

அறிமுகம்:

அறிமுகம் கிடைத்தது என்னவோ ஆன்லைன் கல்வி ரேடியோவின் குழந்தைப் பருவத்திலே. ஜனவரி 2021 இல் NMMS தேர்வுக்கான SAT- பகுதி கணித வினாக்கள் தயாரிக்கும் பொருட்டு எனது தோழி திருமதி வஹீதா பட்டதாரி ஆசிரியை ராம பட்டணம் பொள்ளாச்சி வடக்கு கோவை அவர்களால் திரு கார்த்திக் ராஜா அவர்களின் அறிமுகமும் அவரது படைப்பான ஆன்லைன் கல்வி ரேடியோவின் அறிமுகமும் எனக்கு அறிய வாய்ப்பாக கிடைத்தது என்பதில் மகிழ்ச்சி.

ஆன்லைன் கல்வி ரேடியோவின் அறிமுகமானது ஆனந்தமாய் அலைகடலாய் அனைவருக்கும் அனுதினமும் கிடைத்த அன்பளிப்பு என்பதில் அளவில்லா ஆனந்தம்.

ருணா ஊரடங்கு காலத்தில் கற்பித்தல் பணியில் ஆன்லைன் கல்வி ரேடியோவின் பயன்பாடுகள்:

கொரோன ஊரடங்கு காலத்தில் மிகப்பெரிய சவாலாக இருந்த ஒன்று மாணவர்களின் கற்றல். சவாலை எதிர்கொள்ள உருவானவைகள்

1.கல்வி தொலைக்காட்சி

2.ஆன்லைன் கல்வி ரேடியோ 

எனது பயணம் ஜனவரி 7, 2021 முதல் ஆன்லைன் கல்வி ரேடியோவில் ஆரம்பமானது.இதற்கு முன்னோடி திரு. கார்த்திக் ராஜா அவர்கள்.

"என்று தணியும் இந்த தாகம்" என்ற பாரதியின் வரிகள் போல "என்று ஒழியும் இந்தக்   கொரோனா" என்பது தெரியாத சூழலில் மாணவர்களின் கற்றலில்  தொய்வின்றி  செயல்பட பல்வேறு அரசுப் பள்ளி    ஆசிரியர்கள் ஒன்றிணைந்து உருவானதே இந்த ஆன்லைன் கல்வி ரேடியோ.

ஆன்லைன் கல்வி ரேடியோவின் பயன்பாடுகள் (சிறப்பம்சங்கள்).

*1 to 10 வகுப்பு மாணவர்களுக்கான  பாடப்பகுதிகள் ஆர்வமூட்டும் அறிவுசார் வளர்ச்சி பகுதிகள் அனைத்தும் ஒலிபரப்பாகிறது.

*மாணவர்கள் எளிதாக சாதாரண பிரவுசர் மொபைல் களிலே  இயக்க முடியும்.

*குறைந்த நெட்வொர்க்-லேயே சிறப்பாக இயங்கும்.

*பெற்றோரின்  கண்காணிப்பும், மாணவர்களின்  பாதுகாப்பும் இதில் உறுதி.

*மாணவரின் உடல் நலம் மற்றும் மனநலம் பேணப்படுகிறது.

*எங்கேயும் எப்போதும் எத்தனை முறை வேண்டுமானாலும் கற்க இயலும்.

* பலமுறை கேட்கும் வசதி உள்ளதால் இது மெல்ல மலரும் மாணவர்களுக்கு பேருதவியாக இருக்கிறது.

* மாணவர்கள் பாடப் பகுதிகளை கற்பதோடு மட்டுமல்லாமல் தங்களது அறிவை வலுப்படுத்தவும்,  வளப்படுத்தவும் பல்வேறு பல்சுவைவலுப்        பகுதிகளும் இதில் உண்டு என்பது கூடுதல் சிறப்பு

 *"ஏக்குறை நேரினும் நிற்காது கற்க

 ஏச்சூழல் நேரினும் கற்றல் நிற்காது"

இதன் பயன்பாடாக "ஆன்லைன் கல்வி ரேடியோ"*

 கொரோனா ஊரடங்கு காலத்தில் மாணவர்களின் கற்றலில் ஆன்லைன் கல்வி ரேடியோவின் பங்கு

கொரோனா ஊரடங்கு காலத்தில் மாணவர்கள் தங்கள் கற்றலை மேம்படுத்த பேருதவியாக   இருந்தது ஆன்லைன் கல்வி ரேடியோ.  இதில் 1 - 10 வகுப்பு  வரையுள்ள பாடப்பகுதிகள் சிறு சிறு பகுதிகளாகப்  பிரிக்கப்பட்டு ஆடியோ வடிவில் பாடப் பகுதிகளுக்கான விளக்கம், புக் பேக் எக்ஸர்சைஸ், ஒரு மதிப்பெண் வினாக்கள் போன்ற அனைத்தும் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.இதை மாணவர்கள் எளிதில் பயன்படுத்தும் வண்ணம் mp3 ல் இருக்கும். இதைக் கொண்டு மாணவர்கள் தங்கள் புத்தகத்தின் உதவியோடு இந்த ஆடியோக்களை கேட்டு பாடக் கருத்தை உள்வாங்க  ஏதுவாக இருந்தது.மேலும் இதில் "மின்மினிகள் நேரம்" என்ற பகுதியில் மாணவர்களின் தனித்திறமைகளை வெளிக் கொணரும் வகையில் கதை கூறல், பழமொழி, விடுகதை,  பேச்சு மற்றும் பாடல் போன்ற பல்சுவைப் பகுதிகளில்  மாணவர்கள் ஆகவே தன்னார்வமாக செயல்பட்டு பல நிகழ்ச்சிகளை வழங்கினர்.இது   கொரோனா காலத்திலும்  மாணவரது திறமைகளை வலுவூட்டும் மிகச்சிறந்த செயல்பாடாக அமைந்தது இதனது மைல்கல்.இதில் பல மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களும் பங்கேற்று   அதற்கான சான்றிதழ்களையும் சான்றிதழ்களையும்  பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

"தனித் திறமைகளை தங்கு தடையின்றி தரமான தாக்கியது நமது ஆன்லைன் கல்வி ரேடியோ "

மாணவரது காலத்தை  பொன்னான தாக மாற்றும் விதமாக கொரோனா காலத்தில் வழங்கப்பட்ட செயல்பாடுகள்:

*திருக்குறள் 

*பழமொழி

 *விடுகதை

*வாய்ப்பாடு

*கதை கூறுதல் 

*தேசத் தலைவர்கள் 

*ஓவியம்

இச்செயல்பாடுகளில் மாணவர்களில் எழுதியும் பின் அதற்கான ஆடியோக்களை  உருவாக்கியும் சிறப்பான முறையில் பங்கேற்று  பரிசுகளையும் பாராட்டுகளையும் பெற்றனர் என்பது பேரானந்தம்.

*"பலனறிந்து பயன்படுத்துபவர் பயன்பெறுவர்

பயனறிந்து பகிர்பவர் பண்பெறுவர்" இதற்கான அச்சாணி "ஆன்லைன் கல்வி ரேடியோ"*

ஆன்லைன் கல்வி ரேடியோவின் பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபட்ட மாணவர்களின் கற்றலானது இன்றளவும் எவ்விதத் தொய்வுமின்றி சிறப்பாக இருக்கிறது என்பதில் எவருக்கும் ஐயமில்லை.

 











பள்ளி தொடங்கிய பின் வகுப்பறை கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளில் ஆன்லைன் கல்வி ரேடியோவின் பயன்பாடுகள்:
பள்ளி தொடங்கிய பின்பும் மேலும் பல புதிய பகுதிகள் ஆன்லைன் கல்வி ரேடியோவில்...
*Points to remember
* சொல்வதை எழுதுதல் பகுதி
*Reading corner
*Writing corner
*Story corner
*Song corner
*Video corner
*Activity corner
*Online test
*Online revision test
*NMMS    இன்னும் பல...
இவ்வனைத்துப் பகுதிகளுமே மாணவர்களுக்கு வகுப்பறைக் கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளில் மிகுந்த பயனளிக்கிறது.
மாணவர்கள் பள்ளிக்கு வர இயலாத போது (விடுப்பு எடுக்கும் போது) ஆன்லைன் கல்வி ரேடியோவின் பாடப்பகுதிக்கான விளக்கம் அடங்கிய ஆடியோ மூலம் தெரிந்துகொள்ள ஏதுவாக உள்ளது.
மேலும் ஒவ்வொரு பாடப்பகுதியிலும் அவர்களின் கற்றல் அடைவை சோதிக்கும் விதமாக online test மற்றும் online revision test ம் இதில் இருப்பது மாணவர்களுக்கு மிகுந்த உபயோகமாக உள்ளது.
NMMS தேர்வுக்கான MAT, SAT போன்றவைகளில் ஆடியோ மற்றும் வீடியோவும் மீத்திறன் பெற்ற மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கிறது.
"சுதந்திரமாய் சுற்றித் திரியும் காற்று புல்லாங்குழலில் அடைபட்டு விரல்களால் இசையாகிறது"
அதுபோல்
 *"சுதந்திரமாய் சுற்றித் திரியும் காற்று
ஆன்லைன் கல்வி ரேடியோ மூலம்
அறிவுக்கு விருந்தாகிறது"
*
*"தன்னை தன்னாலே அறியக்கூடிய வாய்ப்பு 
என்ற திருமூலரின்  வாக்கிற்கிணங்க"* 
Online test- ம் சொல்வதை     எழுதுதல் பகுதியும் 
வினா விடை பகுதியும் ஆன்லைன் கல்வி ரேடியோவிலே... சுய மதிப்பீடாகும்.

ஆன்லைன்  வீடியோவில் எனது மாணவர்களின் பங்களிப்பு மற்றும் செயல்பாடுகள்:   கொரோனா ஊரடங்கு காலத்தில் ஆன்லைன் கல்வி ரேடியோவின் செயல்பாடுகளில் பங்கேற்றமைக்காக அம்மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி ரேடியோவின் சார்பாக e-certificate  அனைவருக்கும் வழங்கி பாராட்டப்பட்டது.


14th November 2021 குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு ஆன்லைன் கல்வி ரேடியோவில் வழங்கப்பட்ட செயற்பாடுகள்: குழந்தைகள் தினத்தை முன்னிட்டு  ஆன்லைன் கல்வி ரேடியோவில் பல்வேறு செயல்பாடுகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன. அதில் எமது  பள்ளி மாணவர்கள் 12 பேர் பங்கேற்று கேடயமும் பரிசுகளும் சான்றிதழ்களும் பெற்றனர்.
கொரோனா ஊரடங்கு காலத்திலும் மாணவர்களின் ஆர்வத்தை கருத்தில் கொண்டு அதற்கு அங்கீகாரம் அளித்தது நமது ஆன்லைன் கல்வி ரேடியோ.
வழங்கப்பட்ட செயல்பாடுகள்  *words or sentences-50
*விடுகதை அல்லது பழமொழி-50
*திருக்குறள்-50
*வினா விடை-100 *தேசத்தலைவர்கள்-5
*Drawing &Colouruing-5
*Stories-5
*Tables-20
மேற்கண்ட அனைத்து செயல்பாடுகளையும் எழுதியும் பேசியும் நூறு சதவீதம் முழுமையாக முடித்தவர்களுக்கு கேடயம் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
26th January 2022 குடியரசு தினவிழாவை முன்னிட்டு ஆன்லைன் கல்வி ரேடியோவில் வழங்கப்பட்ட செயல்பாடுகள்: 
பள்ளிகள் திறந்த பின் குடியரசு தினவிழாவை முன்னிட்டு ஆன்லைன் கல்வி ரேடியோவில்     பல்வேறு செயல்பாடுகள்   மாணவர்களுக்கு வழங்கப்பட்டன  அதில் எம்பள்ளி மாணவர்கள் 15 பேர் பங்கேற்று கேடயங்கள், பரிசுகள், சான்றிதழ்கள், போன்றவற்றை பெற்றனர். இதற்கெல்லாம்  காரணகர்த்தாவான திரு. கார்த்திக் ராஜா அவர்களுக்கு மாணவர்கள் சார்பாகவும் பள்ளியின் சார்பாகவும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம்.
செயல்பாடுகள்
*தமிழ் வாக்கியங்கள்-10 
*ஆங்கில வாக்கியங்கள்-5 
*வாய்ப்பாடு-any one
*Good habits & Awareness- 5 points
*3/5 mins reading
மேற்கூறிய செயல்பாடுகளை 13/12/2021 முதல் 31/12/2021 முடிய 15 நாட்கள் இச்செயல்பாடுகளை தினமும் முழுமையாக முடித்த எம்பள்ளி மாணவர்களுக்கு கேடயங்கள் வழங்கி 26th January 2022-ல்  சிறப்பிக்கப்பட்டது.
ஆன்லைன் கல்வி ரேடியோ மூலம் எம் பள்ளி மாணவர்கள் பெற்ற ஊக்கமும் அங்கீகாரமும்:
* பாட கருத்துக்களுக்கான ஆடியோக்களை கேட்டு பயன்பெற்ற எமது பள்ளி மாணவர்களுக்கு (24 பேர்) வழங்கப்பட்ட e-certificate.
*14th November 2021 ல் ஆன்லைன் கல்வி ரேடியோவின் செயல்பாடுகளில் பங்கேற்ற மாணவர்கள் 12 பேருக்கு வழங்கப்பட்ட கேடயமும், பரிசுகளும், சான்றிதழ்களும் மாணவர்களை ஊக்கப்படுத்தியது.
 *"ஊக்கு விற்பவனை ஊக்கப்படுத்தினால் 
தேக்கு விற்பவனாக்கலாம்"*
என்பது போல
பங்கேற்ற மாணவர்களுக்கு அளிக்கும் ஊக்கம் அவர்களுக்கு அங்கீகாரமாகவும், மற்ற மாணவர்களுக்கு ஏக்கம் மூலம் தாக்கத்தை ஏற்படுத்தி அவர்கள்  மேம்படவும் வழிவகுக்கும் என்பதில் ஐயமில்லை.
*26th January 2022 குடியரசு தினவிழாவை முன்னிட்டு ஆன்லைன் கல்வி ரேடியோ மூலம் பல்வேறு செயல்பாடுகள் வழங்கப்பட்டன. அதில் எம்பள்ளி மாணவர்கள் 15 பேர் பங்கேற்று கேடயங்களும்ப், பரிசுகளும், சான்றிதழ்களும் பெற்றனர்.

ஆன்லைன் கல்வி ரேடியோ வைப்பற்றி எம்பள்ளி மாணவரது பெற்றோரது கருத்துக்கள்:
கொரோனா காலத்தில் மாணவர்களின் கற்றல் தொய்வின்றி  கற்பதற்கு பேருதவியாக இருந்தது.
ஆன்லைன் கல்வி ரேடியோவில் கற்பதால் மாணவர்களின் உடல்நலமும் மனநலமும் பாதுகாக்கப்படுகிறது.
எங்கேயும் எப்போதும் எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்பதன் மூலம் கருத்துக்கள் மிகுந்த தெளிவு பெறுகிறது.
செயல்பாடுகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கு பரிசுகளும், கேடயங்களும் வழங்குவதால் மாணவர்களிடையே கற்றலில் ஆர்வம் மேலோங்குகிறது.
 "ஊக்கமே ஆக்கத்திற்கு வழி"
 ஆன்லைன் கல்வி ரேடியோ பற்றி கல்வி அலுவலர்களின் கருத்துக்கள் மற்றும்  பாராட்டுக்கள்
*மாவட்டக் கல்வி அலுவலர் திரு. கன்னிச்சாமி அவர்களிடம் ஆன்லைன் கல்வி ரேடியோ சிறந்த செயல்பாடுகளுக்கு பெற்ற பாராட்டு.
*Certificate of appreciation presented by kalvi 40- Bumble B Trust.
*Appreciation certificate presented by 
The International Association of Lion Clubs.
*கோவை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திருமதி. கீதா அவர்களிடம் தினமலரின் இலட்சிய ஆசிரியர் விருது-21 பெற்ற கேடயம். இதற்கான அச்சாணி ஆன்லைன் கல்வி ரேடியோ என்பதில் பெருமிதம். *எமது பொள்ளாச்சி வடக்கு வட்டாரக் கல்வி  அலுவலர்கள் திரு. சின்னப்பராஜ், திருமதி. சார்மிளா,  திருமதி. யோகேஸ்வரி போன்றோரும் ஆன்லைன் கல்வி ரேடியோவின்  செயல்பாடுகளுக்காக பாராட்டு தெரிவித்தனர்.
 *"பிறக்கும் போது தாலாட்டு
இறக்கும் போது நீராட்டு
இடையில் கிடைப்பது பாராட்டு"
சாதிப்போம்!வெல்வோம்!* 
ஒன்றுபடுவோம்! வெல்வோம்!

எம்.ஸ்ரீதேவி
பட்டதாரி ஆசிரியை - கணிதம்
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி
வடக்கிபாளையம் - பொள்ளாச்சி வடக்கு
கோவை மாவட்டம் 

Thursday, October 6, 2022

Tr.Jayathangam-SGT-Little-flower-Pri-school-Palani-Dindigul

Online KalviRadio
www.kalviradio.com
ஆசிரியர்களின் அனுபவங்கள்

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

கொரோனா காலங்களில்.....

🌸🌸🌸🌸🌸🌸

ஆன்லைன் கல்வி ரேடியோ குறித்த ஆசிரியர்களின் அனுபவங்கள்....

🌱முன்னோட்டமாக.....

☘️சின்னஞ்சிறிய குழந்தைகளுக்கு செய்வது; இறைவனுக்கே கடன் வழங்குவதற்கு ஒப்பாகும்.

☘️நான்....

🍀உங்களுடைய பிரியமானவள்...

🍀திருமதி. இலா.ஜெய தங்கம், இடைநிலை ஆசிரியை. சிறுமலர் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி, பழனி வட்டம், திண்டுக்கல் மாவட்டம் .

🔖 நான் 2009 ஆம் ஆண்டு ஜூன் 15 அன்று இடைநிலை ஆசிரியையாக சிறுமலர் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் பணியில் சேர்ந்து பணியாற்றி வருகின்றேன்.

🔖ஆன்லைன் கல்வி ரேடியோ குழுமத்தில் நானும் இணைந்து பயணித்ததில் மிகுந்த மகிழ்ச்சி...

எல்லாம் வல்ல இறைவனுக்கு எனது நன்றிகள் 🙏🙏🙏🙏

🔖2019- 2020 ,2020 -2021 இந்த கல்வி ஆண்டுகளில், யாரும் நினையாத கொரோனா தொற்றால், எனக்கும், என் பிள்ளைகளுக்கும், அவர்களின் கல்விக்கும் இடையேயான மிகப்பெரிய இடைவெளியை கண்டு, உள்ளத்தால் மிகவும் வருந்தினேன்.

🔖 குழந்தைகளை கற்றலில் ஆர்வம் ஏற்படுத்துவதற்கு, என்ன செய்வது? என எண்ணிய தருணத்தில்...

கடவுள் வழங்கிய வரப்பிரசாதமாக.... ஆன்லைன் கல்வி ரேடியோவை நினைத்தேன்.

🔖www.kalviradio.com என்ற வலைதளத்தை உருவாக்கிய திருவாளர். மதிப்புமிகு. இடைநிலை ஆசிரியர். திரு. ஆ.கார்த்திக் ராஜா அவர்களுக்கும், அவர்களுக்கு உறுதுணையாக இருந்த ஒவ்வொரு நல்ல உள்ளங்களுக்கும் ....

இந்நிமிடத்தில் எனது வாழ்த்துக்களையும்💐💐💐💐💐💐💐 இதயமிகு நன்றிகளையும்🙏🙏🙏🙏🙏🙏🙏

மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்றேன்.🙂

அறிமுகம்.

🔖2021 ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் பழனி நகர், வட்டார கல்வி அலுவலர், மதிப்புமிகு. திரு.வெ.ரமேஷ் குமார் அவர்கள் வழியாக www.kalviradio.com என்ற வலைத்தளம் குறித்து அறிந்து கொண்டோம்.

🔖எமது சிறுமலர் தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியை, அருட் சகோதரி.ரெக்சலின் அவிலா செல்வி அவர்களது முழுமையான ஒத்துழைப்புடன்,

எம் பள்ளியில் பயிலும் அனைத்து மாணவ செல்வங்களுக்கும், அவர்தம் பெற்றோர்களுக்கும், இந்த வலைத்தளம் பற்றியும், அதன் நன்மைகள் குறித்தும் அறிமுகப்படுத்தினோம்.

🔖 மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு இதனுடைய பயன்பாடு பற்றியும், மாணவர்களின் உடல் நலனுக்கு எந்தவித பாதிப்பும் இன்றி, கற்றலில் மேம்படுவது குறித்தும், தெளிவாக பெற்றோர்களிடம் நேரடியாக மற்றும் தொலைபேசி வாயிலாக அறிமுகப்படுத்தினோம்.

பிள்ளைகளின் ஈடுபாடும்....
பெற்றோர்களின் ஆர்வமிகுதியும்....

☘️ குழந்தைகள் தின விழா...

🔖 2021 ஆம் ஆண்டு நவம்பர் 14 குழந்தைகள் தினத்தை முன்னிட்டு ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு எழுதுதல், பேசுதல், படங்கள் வரைதல், வண்ணம் தீட்டுதல், கதை கூறுதல் வாய்ப்பாடு சொல்லுதல் திருக்குறள்...

போன்ற பல்வேறு கல்வி செயல்பாடுகள் www.kalviradio.com என்ற இணையதளத்தில் மாணவர்களுக்கு அறிவிக்கப்பட்டது.

🔖2021, அக்டோபர்15 அன்று ஆன்லைன் கல்வி ரேடியோ செயல்பாடுகளில் பங்கு பெற என் பள்ளியின் சார்பாக நான் பதிவு செய்தேன்.

🔖 2021 அக்டோபர் 15 முதல் நவம்பர் 3 வரை நாள் வாரியாக, கிழமை வாரியாக ...

🌷தமிழ் ஆங்கில வார்த்தைகள்

🌷 விடுகதைகள்

🌷 பழமொழிகள்

🌷 திருக்குறள்

🌷 வினா விடைகள்

🌷 தேச தலைவர்கள்

🌷 கதை சொல்லுதல்

🌷 பெருக்கல் வாய்ப்பாடு...

🔖என ஒவ்வொரு செயல்பாடுகளையும், ஒவ்வொரு மாணவர்களும் செய்ய செய்ய, பெற்றோர்கள் மத்தியில் ஒரு ஆர்வம் ஏற்பட்டது.

🔖 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் மிகுந்த உற்சாகத்தோடு ஆடியோவை பதிவு செய்து அனுப்பினார்கள்.

🔖 அழகாக எழுதி, படங்கள் வரைந்து, வண்ணம் தீட்டி, தத்தம் படைப்புகளை பள்ளியில் சமர்ப்பித்தனர்.

🔖ஆசிரியர்கள் அதை சரிப்பார்த்து, திருத்தம் செய்து எனக்கு அனுப்புவர்.

🔖 நான் ஒருங்கிணைப்பாளராக இருந்து மாணவர்களின் தொகுப்புகளை ஆன்லைன் கல்வி ரேடியோ பகுதிக்கு அனுப்பி வைத்தேன்.

🔖 இதன் வாயிலாக ஆரோக்கியமான கற்றல் செயல்பாடுகள் குழந்தைகளிடத்தில் அதிகரித்தது.

🔖 பெற்றோர்களும், தத்தம் பிள்ளைகள், எந்த நிலையில் உள்ளனர்? என்பதை மிகத் தெளிவாக உணர்ந்து கொண்டனர். குழந்தைகளின் வளர்ச்சிக்கு மிக உறுதுணையாக இருந்தனர்.

🔖 இது எனக்கு ஒரு புதிய அனுபவமாக இருந்தது.

🔖 மாணவர்களின் அறிவு தேடலுக்கு வழிகாட்டியாக இருந்ததைக் குறித்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்.

ஜனவரி 26 குடியரசு தின செயல்பாடுகள் 2022...

🔖 குழந்தைகள் தினம் செயல்பாடுகளில் ஏற்பட்ட அனுபவத்தோடு, அதே முனைப்போடு, மிகுதியான உற்சாகத்தோடு இன்னும் அதீத தீரத்துடன் 2021 டிசம்பர் 21 அன்று பதிவு செய்து குடியரசு தின செயல்பாடுகளில் நாங்கள் ஒரு குழுவாக பங்கெடுத்தோம்...

🔖 இந்த முறை ஒருங்கிணைப்பாளராக என்னுடன் இன்னும் ஐந்து பேர் வகுப்பு வாரியாக இணைந்து கொண்டனர்.

🔖 🌸 வகுப்பு1- திருமதி. மா.ஜோஸ்பின் சோனியா ,திருமதி. யா. ஆரோக்கிய ஜென்சி

🌸 வகுப்பு2- திருமதி .வி.ஜொவிட்டா பாலட்

🌸 வகுப்பு-3 திருமதி. டோ. ஏஞ்சல் சந்தன சுந்தரி

🌸 வகுப்பு-4 திருமதி. இலா. ஜெய தங்கம்

🌸 வகுப்பு-5 திருமதி. ஆ. மரியஜோதி மணி

🔖 இவ்வாறாக நாங்கள் ஆறு பேரும், முறையாக பதிவு செய்து, வகுப்பு வாரியாக எங்களது மாணவர்களின் படைப்புகளை, குறிப்பாக

🌷சொல்வதை எழுதுதல்

🌷 வாக்கியங்கள்

🌷 பொது அறிவு வினா விடைகள்

🔖போன்ற ஆன்லைன் கல்வி ரேடியோவில் கொடுத்த அனைத்து செயல்பாடுகளையும் 2021 டிசம்பர் 21 முதல் 2022 ஜனவரி 23 வரை மிகச் சிறப்பாக செய்து, அவர்கள் கூறிய வழிமுறைகளை பின்பற்றி அனுப்பி வைத்தோம்.

🔖 ஏறக்குறைய 250 மாணவர்கள் இதன் மூலம் பயனடைந்தனர்.

🔖 பெற்றோர்களின் முழுமையான ஆதரவுடன், மாணவர்களின் மேம்பாட்டை கருத்தில் கொண்டு செயல்பட்டது எங்களுக்கு மகிழ்ச்சி அளித்தது.

🔖 ஒவ்வொரு பெற்றோர்களும், ஆசிரியர்களாக இருந்து அற்புதமாக செயல்பட்ட அந்த தருணம்..... எங்களை மிகவும் நெகிழ்ச்சிக்கு உள்ளாகியது.


ஆசிரியர்களின் ஒத்துழைப்பு....

🔖 ஆன்லைன் கல்வி ரேடியோ செயல்பாடுகள் குறித்த அனைத்து தகவல்களையும் பெற்றோர் மத்தியில் 2021 செப்டம்பர் ஐந்தாம் தேதி முதல் முறையாக கொண்டு சேர்த்தோம்.

🔖 மாணவர்கள் எழுதி அனுப்புவதை, சரி பார்த்து, திருத்தம் செய்து ,அதை புகைப்படம் எடுத்து அனுப்புதல்.

🔖 மாணவர்கள் அனுப்பிய ஆடியோ பதிவுகளை, முழுவதும் கேட்டு, அதை தொகுத்து டெலிகிராமில் அனுப்புதல்.

🔖 பங்கேற்ற அனைத்து மாணவர்களின் பெயர் பட்டியல் மற்றும் ஒவ்வொரு மாணவரின் செயல்பாடுகள் குறித்து சரியாக மதிப்பிட்டு, முறையான புள்ளி விவரங்களை தருதல்.

🔖 Trophies, Medal, Certificates பெறவேண்டிய மாணவர்களின் விவரங்களை சரியாக மதிப்பிட்டு தருதல்.

🔖 தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் ஆன்லைன் கல்வி ரேடியோ குறித்த தங்களது Feedback வீடியோக்களை வழங்குதல்.

🔖 பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் மற்றும் பெற்றோர்கள், மாணவர்களின் Feedback வீடியோ பகுதிகள் வழங்குதல்.

🔖 சொல்வதை எழுதுதல் பகுதி வீடியோ அனுப்புதல்

🔖இதுபோன்ற பல்வேறு பணிகளை, எம்முடைய தலைமை ஆசிரியை மற்றும் இருபதுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் என்னோடு இணைந்து மிகச் சிறப்பாக, முழுமையான ஒத்துழைப்பு நல்கி பணியாற்றினர்.

🔖 'பலவித மலர்களை இணைத்து ஓர் அழகிய மாலை தொடுப்பது போல' ....

நாங்கள் அனைவரும் கொரோனா காலங்களில் ஆன்லைன் கல்வி ரேடியோவோடு இணைந்து எம் பிள்ளைகளின் கல்விப் பணிக்காக செயல்பட்டது, எங்களுக்கு மிகவும் ஆனந்தத்தை அளித்தது.


அர்ப்பணிப்பு பணியில் .
அளவில்லா சந்தோஷம்...

🔖மழலைகள் தினம், குடியரசு தினம் முன்னிட்டு...

🌷 குழந்தைகள்

🌷 ஆசிரியர்கள்

🌷 பெற்றோர்கள்

🔖என அனைத்து தரப்பினருக்கும் மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கும் வகையில் ,மிக சரியாக திட்டமிட்டு, ஆன்லைன் கல்வி ரேடியோ சார்பாக திரு. ஆ. கார்த்திக்ராஜா இடைநிலை ஆசிரியர்அவர்கள், அவரது நண்பர்கள், ஆசிரியர்கள் இணைந்து பல அமைப்புகளிடமிருந்து, உரிய நிதி பெற்று, ஏற்ற நேரத்தில்,

பலவித இடி, மின்னல், மழை போன்ற சாதகமற்ற இயற்கை சூழலையும் பொருட்படுத்தாது, மாணவச் செல்வங்களுக்காக...

🔖Trophies,Medal, Certificates என அனைத்தையும், எல்லா பணிகளையும் தொய்வில்லாமல், முறையாக முடித்துக் கொடுத்த ஒவ்வொரு பள்ளிக்கும்,(2021 நவம்பர் 14 மற்றும் 2022 ஜனவரி 26-க்குள்) ஏற்ற நேரத்தில், உரிய முறையில் பார்சல் செய்து, அனுப்பி வைத்தனர்.


🔖அவர்கள் தங்கள் இலக்கை நோக்கிய பயணத்தில்... விடாமுயற்சியோடு, சுறுசுறுப்போடு, தியாக உள்ளதோடு பணியாற்றியதைக் கண்டு உள்ளத்தால் நான் ஈர்க்கப்பட்டேன்.

🔖நானும் என்னாலான சிறிய பங்களிப்பை ஆன்லைன் கல்வி ரேடியோவிற்கு வழங்க எனக்கு இது ஒரு தூண்டுகோலாய் இருந்தது.

🔖 கொரோனா காலங்களில் எம் பிள்ளைகளுக்கு கிடைத்த பரிசு பொருள், சான்றிதழ்கள் கண்டு, அவர்கள் மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்றனர் என்றால் அது மிகையாகாது.

🔖 இந்நேரத்தில் ஏழை பிள்ளைகளை, மகிழ்ச்சிப்படுத்திய, ஒவ்வொரு அன்பு உள்ளங்களையும் இறைவன் நிறைவாய் ஆசீர்வதிக்க மனதார வாழ்த்துகின்றேன்.


ஆன்லைன் கல்வி ரேடியோவில் எனது பங்களிப்பு...

🔖 ☘️நான் ....

☘️எனது வகுப்பு....

☘️ எனது பள்ளி ....

என்று குறுகிய வட்டத்தில் பயணித்துக் கொண்டிருந்தேன்.

🔖பலவித ஆசிரியர்களின், தன்னிகரில்லா தியாகத்தால், உந்தப்பட்டு, நானும்2021, டிசம்பர் 6 முதல் ஒவ்வொரு ஆடியோவாக தயாரித்து 2022 பிப்ரவரி இறுதியில் மாணவர்களுக்காக 60 ஆடியோ பதிவுகளை அனுப்பி உள்ளேன்.

🔖 'கல்வி என்பது அறிவை வளர்ப்பது மட்டுமல்ல'...

🔖 இவ்வுலகத்தில் நம் குழந்தைகள் சான்றோர்களாய் மிளிர....

தேவையானவை...✨✨✨✨✨

1.எல்லா உயிரினங்களையும் நேசிக்க வேண்டும்.

2.எல்லாவித மனிதர்களோடும், இணைந்து வாழ வேண்டும்.

3. அகம், புறம் இரண்டிலும் தூய்மை, வலிமை பேண வேண்டும்.

🔖மேற்கண்ட உயரிய நோக்கோடு நான் வாரமலர், சிறுவர் மலர், புத்தகப் பூங்கொத்துக்கள், நீதிக்கதைகள், உண்மை சம்பவங்கள் என பலவற்றை சேகரித்து அதன் வழியாக 50 கதை பகுதிகளை ஆடியோ வடிவாக ஆன்லைன் கல்வி ரேடியோவிற்கு

அனுப்பினேன்.

🔖 மேலும் 10 விடுகதை ஆடியோ பகுதிகளையும் அனுப்பினேன்.

🔖 நானும் இந்த ஆன்லைன் கல்வி ரேடியோ குடும்பத்தில் ஓர் உறுப்பினர் என எண்ணும்போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

🔖 ஆன்லைன் கல்வி ரேடியோவில் விதைத்த விதை....

தற்போது திண்டுக்கல், கல்விச்சாரல் வானொலி வாயிலாக, பல நல்ல கருத்துக்களை, மாணவர்களுக்கு எடுத்து இயம்பிக் கொண்டிருக்கின்றேன்.

என்பதில் நான் மிகவும் பெருமிதம் அடைகின்றேன்.

எனது வகுப்பறையில்
ஆன்லைன் கல்வி ரேடியோவின் பயன்பாடு.....


🔖எனது வகுப்பறையில் 2022 மார்ச் மாதம் முதல் தமிழ், ஆங்கில பாடல்கள், அறிவியல், சமூக அறிவியல் , கதைகள், விடுகதைகள் என பல்வேறு ஆடியோ பகுதிகளை Bluetooth speaker உதவியுடன் ஒலிபரப்பு செய்தேன்.

🔖 அதை எனது மாணவர்கள் கேட்டு பயனடைந்தனர்.

🔖இது மாணாக்கரின் ஒரு முகச் சிந்தனைதிறன், கேட்கும் திறன் போன்றவற்றை அதிகரிக்க செய்கின்றது.

🔖'ஒரு முறை கேட்டல், இருமுறை படித்தலுக்கு சமம் அல்லவா!'

🔖 இந்த புதுவிதக் கற்றல்..

மாணவர்களுக்கு உடல், உள்ள பாதிப்புக்கு வழி வகுக்காமல், முன்னேற்றத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் உள்ளது என்பதில், நான் மிகவும் சந்தோஷப்படுகின்றேன்.


சிறந்த ஆசிரியருக்கான விருது....

🔖 2022, ஜனவரி மாதம் முதல் பழனி வட்டார கல்வி அலுவலர் மதிப்புமிகு.திரு .மு. சரவணகுமார் ஐயா அவர்கள், சிறுமலர் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை சகோதரி. ஆரோக்கிய மேரி அவர்கள் என்னுடைய எல்லா கல்வி சார் செயல்பாடுகளிலும் எனக்கு முழுஉறுதுணையாக, பக்க பலமாக இருந்து, என்னை எல்லா விதங்களிலும் உற்சாகப்படுத்தி, ஊக்கப்படுத்தி வருகின்றனர்.

🔖 2022 செப்டம்பர் 5 பழனி நகர் வட்டார கல்வி அலுவலர் திரு.மு. சரவணக்குமார் அவர்கள், பழனி நகர் வட்டாரத்தில் ஆசிரியர் தின விழாவை முன்னிட்டு பாராட்டு விழா கூட்டம் ஏற்பாடு செய்தார்.

🔖 அதில் வட்டார கல்வி அலுவலர் ஐயா அவர்களது மேற்பார்வையின் அடிப்படையில் 15 ஆசிரியர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு சிறந்த ஆசிரியருக்கான விருது வழங்கி கௌரவித்தார்.

🔖அந்த விருது பெற்றதில் நானும் ஒருவர்....

என்பதை நினைத்து மிகவும் பூரிப்படைகின்றேன்.

🔖 நான் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டதில் ஆன்லைன் கல்வி ரேடியோ செயல்பாடுகளும் ஒரு காரணம் என்பதை இந்நேரத்தில் மிகவும் மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.

🔖 எல்லா பெருமையையும்,

புகழ்ச்சியையும்

இறைவனுக்கு சமர்ப்பிக்கின்றேன் ...


நிறைவாக....

🔖எந்தவித வர்த்தக, விளம்பர, வியாபார நோக்கம் இன்றி, திரு. ஆ. கார்த்திக்ராஜா அவர்களின் கருத்தாழத்தில் உதித்த இந்த www.kalviradio.com தொழில்நுட்பம் வாயிலாக இன்று எண்ணிலடங்கா மாணவர்களும், பெற்றோர்களும், ஆசிரியர்களும் பயனடைந்து வருகின்றனர்.

🔖' ஒரு விளக்கு எரிய தூண்டுகோல் தேவை'

அதைப்போல பலவித மனிதர்களை ஒரு குடும்பமாய் இணைத்து மிகச் சிறப்பாக வழி நடத்திய ஆன்லைன் கல்வி ரேடியோ குழுமத்திற்கு எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.

🔖'நீங்கள் யார் என்று, உங்கள் வார்த்தைகளால் அல்ல; செயல்களால் நிரூபியுங்கள்.'

என்ற வாக்கிற்கு வடிவம் கொடுத்த, அத்தனை ஆசிரிய பெருமக்களையும், இந்நேரத்தில் நன்றியோடு வாழ்த்துகின்றேன்...

🌸🌸🌸🌸🌸

🔖மகிழ்வோடு சிரம் தாழ்த்தி, தலை வணங்குகின்றேன்🙏🙏🙏🙏🙏

🔖மழலை கண்மணிகளுக்காக நாம் விதைக்கின்ற ஒவ்வொரு விதைகளும், நம்மையும், நம் சந்ததியையும் பேணிக்காக்கும்.

🔖எனது அனுபவங்களை, தொகுக்க வாய்ப்பு கொடுத்த ஆன்லைன் கல்வி ரேடியோ குழுமத்திற்கு எனது நன்றிகள்.

🔖 எல்லாம் வல்ல இறைவனுக்கு எனது நன்றிகள்🌸🌸🌸

நன்றி🙏