அறிமுகம்
திருமதி கீதா வேதரத்தினம் .பட்டதாரி ஆசிரியை.ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி.
பொன்னந்திவிட்டு பரங்கிப்பேட்டை ஒன்றியம் கடலூர் மாவட்டம் .
ஆன்லைன் கல்வி ரேடியோ என்ற அறிமுகமானது என்னுடன் பணியாற்றி தற்போது சேலம் மாவட்டத்தில் பணிபுரியும் பி.மஞ்சரி இடைநிலை ஆசிரியர் மூலம் 2021 இல் ஜனவரி மாதம் இருபதாம் தேதி தெரிந்து கொண்டேன் அன்று அவர்கள் என்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நான் ஆன்லைன் கல்வி ரேடியோவில் ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாஸ் எடுத்தது இன்று கல்வி ரேடியோவில் ஒளிபரப்பாகிறது அதனை நீங்கள் கேட்டு நான் எப்படி நடத்திய உள்ளேன் என்பதை என்னுடன் தொடர்பு கொண்டு கூறுங்கள் என்று மிகவும் உரிமையுடன் கேட்டுக்கொண்டார்.
நானும் அதனைக் கேட்டு மிகவும் சிறப்பாக உள்ளது என்று பாராட்டினேன். அவர்கள் உடனே நீங்களும் இதுபோல வகுப்பு எடுங்கள் என்று என்னை உற்சாகப்படுத்தினார் மேலும் கார்த்திக் ராஜா அவர்களின் தொலைபேசி எண்ணை கொடுத்து உடனே பேசுங்கள் என்றார்.எனக்கும் இந்த புதுமை பிடித்திருந்ததால் உடனே கார்த்திக் ராஜா sir ஐ தொடர்பு கொண்டு நானும் கல்வி ரேடியோவில் இணைகிறேன் இதற்கு என்ன செய்ய வேண்டும் என்று கேட்டேன் அவரும் உடனே உற்சாகமாக முதல் வகுப்பு மற்றும் இரண்டாம் வகுப்பிற்கான சூழ்நிலை இயல் பாடத்திற்கான மூன்றாம் பருவத்திற்கான பாடங்களை நடத்த முடியுமா என்று கேட்டார் நானும் உடனே சரி என்று கூறி அதன்படி நடத்தி பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி 2021 முதல் என்னுடைய கல்வி ரேடியோ பயணம் தொடங்கி தற்போது வரை மன நிறைவுடன் பயணித்துக் கொண்டிருக்கிறேன்.
2. கல்வி ரேடியோ பற்றிய எனது உணர்வுகள்
எனக்கு எப்போதும் புதுமையாக எதையாவது செய்ய வேண்டும் என்ற ஆர்வம் உண்டு. அதனால் ரேடியோவில் வகுப்பு எடுப்பு என்பது மிகவும் ஆர்வமாகவும் புதுமையாகவும் இருந்தது என்னை நான் ஒரு ரேடியோ ஆர்ஜேவாக எண்ணி பெருமை கொண்டு மகிழ்வுடன் பாடம் நடத்தினேன்.
3 . ஆன்லைன் கல்வி ரேடியோவில் என்னுடைய கற்பித்தல் அனுபவம்
என்னுடைய ஆண்ட்ராய்டு போன் மூலம் வாய்ஸ் ரெக்கார்டர் வாயிலாக முதன்முதலில் நான் முதல் மற்றும் இரண்டாம் வகுப்புகளுக்கான சூழ்நிலையியல்பாடத்தின் முதல் மற்றும் மூன்றாம் பருவத்திற்கான பாடத்தை எடுத்தேன். முதலில் சற்று பயமாகவும் தடுமாற்றமாகவும் இருந்தது .ஏனென்றால் இதுதான் போனில் பாடம் நடத்திய என்னுடைய முதல் அனுபவம். மேலும் மாணவர்களே இல்லாத இடத்தில் மாணவர்கள் இருப்பது போல கற்பனை செய்து கொண்டு தொடர்ந்து 30 நிமிடங்கள் பேசுவது என்பது சவாலாக இருந்தது. அதைவிட அமைதியான இடம் கிடைப்பது அதைவிட சவாலாக இருந்தது காரணம் கொரோனா காலகட்டம் என்பதால் வீட்டில் அனைவரும் ஒரே இடத்தில் இருந்தார்கள் டிவி ரேடியோ செல்போன் சுற்றுப்புற சவுண்டு எல்லாம் எனக்கு மிகப்பெரிய சோதனையை தந்தது. பல நாட்கள் இரவு 12 மணிக்கு மேல் ரெகார்ட் செய்த அனுபவமும் உண்டு .ஆனாலும் என்னால் கூட இதையெல்லாம் செய்ய முடிகிறது என்ற ஆனந்தமே எனக்கு நிம்மதியை அளித்தது. அதைவிட கொரோனா பயம் பற்றி சிந்திக்க நேரமில்லாமல் என் மனதை ஆன்லைன் கல்வி ரேடியோ ஆக்கிரமித்துக் கொண்டு உற்சாகமாக என்னை வைத்துக் கொள்ளவும் என்னுடைய நேரத்தை சரியாக செலவிடவும் இந்த ஆன்லைன்வகுப்பறை கற்பித்தல் அனுபவம் எனக்கு தந்தது.
4. ஆன்லைன் கல்வி ரேடியோ பாடப் பகுதிகளை மாணவர்களிடம் கொண்டு சேர்ப்பதில் நான் சந்தித்த சவால்கள்/ சோதனைகள்
1. மாணவர்களிடம் செல்போன் இல்லை
2.செல்போன் இருந்தாலும் அது பட்டன் செல் மாடலாக இருந்தது
3.பெற்றோர்களால் கொரோனா காலகட்டம் என்பதால் ரீசார்ஜ் செய்ய முடியாத நிலை வறுமையும் இதற்கு ஒரு காரணம்.
4.பெற்றோர்களிடம் ஆர்வமின்மை
5.மாணவர்கள் அனைவரும் கொரோனா பயத்தில் இருந்தார்கள் அந்த மனநிலையை சமாளிக்க முடியவில்லை
6 புதிய தொழில்நுட்பம் பற்றிய தயக்கம் எப்படி புரிய வைப்பது என்ற குழப்பம்
7 .யாருமே படிக்காத காலத்தில் அதாவது கொரோனா காரணமாக டீச்சர் நம்மை மட்டும் ஏன் படிக்கவும் ரேடியோ கேட்கவும் செய்கிறார்கள் என்ற எதிர்மறையான எண்ணம் கொண்ட பெற்றோர்கள் மாணவர்களின் மனநிலை
8 .மாணவர்களிடம் எப்படி கொண்டு சேர்ப்பது என்ற என்னுடைய ஆதங்கம் மற்றும் கவலை
9.நான் ஆன்லைன் வகுப்பு எடுப்பதற்கு எனக்கு கிடைத்த எதிர்மறையான விமர்சனங்களால் ஏற்பட்ட வெறுப்பு
10 .கொரோனா தொற்றால் எனக்கு ஏற்பட்ட உடல்நிலை தொய்வு மேலும் குடும்பத்திலும் கொரோனா தொற்றால் ஏற்பட்ட நிம்மதி இன்மை இதுபோல பல்வேறு பிரச்சனைகளை நான் எவ்வாறு சமாளித்தேன் என்பதை இனிவரும் பகுதியில் பார்க்கலாமா
5. கற்றலில் மாணவர் பங்கு
சிறு துளி பெருவெள்ளம் என்பது போலவும் நாம் ஒரு அடி எடுத்து வைத்தால் கடவுள் நம்மை நோக்கி 10 அடி எடுத்து வைப்பார் என்ற கூற்றுக்கிணங்க முதன் முதலில் எட்டாம் வகுப்பு மற்றும் முதல் வகுப்பு படிக்கும் இரு குழந்தைகள் கொண்ட அதாவது கே பி தியா கே பி சாய் பாலாஜி என்ற மாணவர்கள் வீட்டைத்தான் முதன் முதலில் நான் தொடர்பு கொண்டேன் ஏப்ரல் 16ஆம் தேதி 2021 இல் தொலைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆன்லைன் கல்வி ரேடியோ பற்றியும் அதன் பயன்களையும் அதை எப்படி பயன்படுத்துவது என்ற வெப்சைட் அட்ரஸ் ஐயும் கல்வி ரேடியோலிங்கையும் கொடுத்து இதை எப்படி பயன்படுத்துவது இதனால் நமக்கு என்ன பயன் என்பது பற்றி எல்லாம் அவரிடம் பேசினேன். அவர்களுக்கு புரிந்தது போலவும் புரியாதது போலவும் இருந்தார்கள் மறுநாள் அவர்களை தொடர்பு கொண்டு வீடியோ காலில் வருமாறு கூறி அவர்களுக்கு என்னுடைய செல்போனிலிருந்து எப்படி www.kalviradio.com என்பதை எப்படி நாம் பயன்படுத்த வேண்டும் என்பதை ஆபரேட் செய்து காட்டினேன். ஓரளவு புரிந்து கொண்ட அந்த குழந்தைகளின் பெற்றோரான திருமதி கே.பி .பபிதா அவர்கள் மறுநாள் என்னிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தான் அந்த வெப்சைட்டை ஓபன் செய்ததாகவும் காலை ஆறு மணிக்கு அமுதக் கதைகள் மற்றும் பாடல்களை தான் கேட்டதாகவும் கூறினார் மேலும் இது மிகவும் அருமையாக இருக்கிறது டீச்சர் நன்றாக இருக்கிறது இதனால் நாளை முதல் என்னுடைய குழந்தைகளுக்கும் இந்த ரேடியோவை போட்டுக்காட்டுகிறேன் என்ற நற்செய்தியை என்னிடம் தெரிவித்த போது நான் என்னுடைய முதல் குழந்தையை சுகப்பிரசவத்தில் பெற்றெடுத்த அனுபவத்தை உணர்ந்தேன் .நான் மீண்டும் மீண்டும் அவர்களிடம் போன் செய்து தினமும் இதை கேட்பதற்கு வலியுறுத்தினேன் அதன் பின்னர் அவரை ஆன்லைன் கல்வி ரேடியோ வாட்ஸ் அப் குரூப்பில் இணைத்து மிக எளிதாக அந்த வெப்சைட்டில் ரேடியோ கேட்க உதவி செய்தேன். மேலும் என்னுடைய whatsapp குரூப் ஸ்டேட்டஸ் . ஃபோன் கால் வீடியோ கால் மூலமும் என்னுடைய தோழிகள் நண்பர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் ஆசிரியர் தோழிகள் நண்பர்கள் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள்
என் உறவினர்கள் என எனக்குத் தெரிந்த பல பேரிடம் ஆன்லைன் கல்வி ரேடியோ பற்றி கூறினேன் இதில் முக்கியமாக பொன்னந்திட்டு கூழையார் பகுதி முன்னாள் மாணவர்களான திரு. அமர்நாத் திரு. கலைமுதன்
செல்வி .அக்ஷயா சத்துணவு பொறுப்பாளர் திரு .உமாநாத் போன்றவர்கள் என் செய்தியை மற்றவர்களிடம் தெரிவிக்கும் நல்ல ஒரு ஊடகமாக செயல்பட்டார்கள் அதேபோல தில்லைவிடங்கன் பள்ளியின் முன்னாள் மாணவியான செல்வி மாயாவதியும் ஆன்லைன் கல்வி ரேடியோ பற்றிய செயல்பாடுகளை மாணவர்களிடமும் பெற்றோர்களிடமும் தெரிவிக்க ஒரு நல்ல துணையாக செயல்பட்டார் இதனைத் தொடர்ந்து ஆன்லைன் கல்வி ரேடியோ whatsapp குரூப்பில் ஜூன் மாதம் 2021 இல் என்னுடைய மாணவர்களின் பெற்றோர்களும் முன்னாள் மாணவர்களும் இணைந்து இந்த சேவையை நன்கு பயன்படுத்தி மற்றவர்களுக்கும் எடுத்துக் கூறினார்கள் இதன் மூலம் என்னுடைய இந்தப் பயணமானது விரைவாகவும் மகிழ்வாகவும் மற்றவர்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு நல்ல ஒரு ஊடகமாகவும் இருந்தது இதன் மூலம் ஆசிரியர்களும் மாணவர்களும்இந்த ஆன்லைன் கல்வி ரேடியோ சேவையை பயன்படுத்தி தங்களுடைய ஊரடங்கு காலத்தை கற்றல் செயல்பாட்டுக்கு நல்ல முறையில் பயன்படுத்திக்கொண்டனர். நான் நடத்திய பாடப்பகுதியையும் அதன் சிறப்புகளையும் என்னுடன் பகிர்ந்து கொண்டது என்னுடைய பணிக்கான அங்கீகாரமாக இந்த பாராட்டுகள் அமைந்தது.
6. என்னுடைய வகுப்பறையில் ஆன்லைன் கல்வி ரேடியோ பயன்படுத்திய விதம் .
கொரோனா அரக்கன் பிடியிலிருந்து தப்பித்த நாமும் மாணவர்களும் சந்தித்த 2021 நவம்பர்மாதம் நமக்கும் மாணவர்களுக்குமான பொற்காலம்
பல்வேறு மனநிலையில் இருந்த மாணவர்களை ஒரு இடத்தில் அரை மணி நேரம் அமர வைப்பதே அனைத்து ஆசிரியர்களுக்கும் பெரும் சவாலாக இருந்தது அப்போது நம்முடைய தமிழக அரசும் மாணவர்களை உற்சாகப்படுத்தும் நோக்கில் பாடல்களும் கதைகளும் கூறி மாணவர்களின் மனநிலையை சரி செய்யும் டாக்டர் வேலையை நம்மால் செய்ய முடியும் என்ற நோக்கில் நமக்கு செய்திகளை அனுப்பி நம்மை உற்சாகமாக பணி செய்ய ஆர்வமூட்டினர் இந்த செயல்பாட்டுக்கு எனக்கும் மற்ற ஆசிரியர்களுக்கும் ஆன்லைன் கல்வி ரேடியோவில் ஒளிபரப்பான நற்சிந்தனை
வினாடி வினா
விடுகதை
திருக்குறள் பழமொழிகள்
மற்றும் மாணவர்கள் பங்கு கொண்ட மின்மினி நேரங்கள் என்ற நிகழ்ச்சியானது
மிகவும் பயனளித்தது மேலும் பாடப்பகுதியில் பாடம் கற்பித்தல்
வினா விடை
ஒன் மார்க் கொஸ்டின் போன்ற பகுதியும் மிகவும் பயனுள்ளதாக இருந்தது
குறிப்பாக இரு ஆசிரியர்கள் உள்ள பள்ளியில் நம் ஆன்லைன் கல்வி ரேடியோ ஒரு பகுதி நேர ஆசிரியரைப் போலவே செயல்பட்டது
ஆறு .ஏழு .எட்டு வகுப்புகளுக்கு பல பள்ளிகளில் சில பாடங்களுக்கு எடுத்துக்காட்டாக அறிவியல்
சமூக அறிவியல் பாட ஆசிரியர் இல்லாமல் இருக்கும் வகுப்பறையில் பாடப்பகுதி நடத்தும் ஆடியோ மிகவும் உதவியாக இருந்தது. வினா விடை ஆடியோக்கள் ஆசிரியர்களின் வேலைப்பளுவை குறைத்தது
நோட்ஸ் வாங்கும் சூழ்நிலையை தவிர்த்தது
மேலும் வகுப்பறை சைலண்டாக இருக்கவும் மாணவர்களின் கவனம் சிதறாமல் இருக்கவும் இந்த வினா விடை ஆடியோ மிகவும் பயன்படுத்தப்பட்டது குறிப்பாக மாணவர்கள் தங்கள் பாடப் பகுதிக்கான வினா விடையை தானே குறித்துக்கொண்டு தான் சரியாக குறித்துக் கொண்டுள்ளனரா? என்பதை சரி பார்க்க சுய பரிசோதனை செய்து கொள்ளும் ஒரு கருவியாகவும் இந்த ஆன்லைன் கல்வி ரேடியோ பயன்பட்டது என்று கூறினால் அது மிகையாகாது/
7. ஆன்லைன் கல்வி ரேடியோ செயல்பாடுகளில் எம் பள்ளி மாணவர்களின் பங்கு
ஒற்றுமையே பலம் என்பதற்கு ஏற்ப பல ஆசிரியர்கள் மற்றும் பல மாணவர்களின் குரலை வானொலி மூலம் பாடப் பகுதி மற்றும் மின்மினி நேரங்கள் மூலம் கேட்ட என் பள்ளி மாணவர்களை மெதுவாக கல்வி ரேடியோ மாணவர்கள் செயல்பாடுகளில்பங்கு பெற ஆர்வமூட்டினேன் அதன் நிகழ்வாக பொன்னந்திட்டு பள்ளியை சேர்ந்த 14மாணவர்கள் ஊரடங்கு காலத்தில் தொடர்ந்து கல்வி ரேடியோ நிகழ்வுகளில் பங்கு கொண்டதற்கான ஈ சர்டிபிகேட் பெற்றது மாணவர்களுக்கும் எனக்கும் உற்சாகமாக இருந்தது.
அதற்கு அடுத்து அக்டோபர் மாதம் 30ஆம் தேதி 2020இல் குழந்தைகள் தின விழா மாணவர் செயல்பாட்டிற்கு 25 மாணவர்கள் கலந்துகொண்டு பரிசும் அதற்கான பதக்கமும் பெற்றனர் .
இதில் மாணவர்களுக்கு உதவி செய்த பள்ளி ஆசிரியர்களையும் கௌரவிக்கும் விதமாக தலைமை ஆசிரியர் உட்பட அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும் டிசம்பர் 2020இல் எழுதுவேன் வாசிப்பேன் என்ற நிகழ்வில் பன்னிரண்டு மாணவர்கள் பங்கேற்று பாராட்டு பெற்றனர்.
இதில் குறிப்பாக ஒவ்வொரு மாணவர்களும் 60 ஆடியோ மற்றும் எழுத்து வேலைகளையும் செய்து நிறைவாக ஒப்படைத்தனர்.
சொல்வதை எழுதுதல் என்ற நிகழ்வில் எட்டு மாணவர்கள் தொடர்ந்து கேட்டு எழுதி பாராட்டு பெற்றனர். இவற்றையெல்லாம் என்னுடைய ஸ்டேட்டஸில் அப்டேட் செய்த போது என்னுடைய சக ஆசிரியர்களான pums கொத்தங்குடி இந்து. Pums .சம்பந்தம் pums பிச்சாவரம் pups. பூவாலைpups மணல்மேடு பள்ளி மாணவர்களும் ஆன்லைன் கல்வி ரேடியோ மாணவர் செயல்பாடுகளில் பங்கேற்று அவர்களும் பரிசும் பாராட்டும் பெற்றனர் இவ்வாறு செய்வதற்கு அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களும் ஒத்துழைப்பு வழங்கியதால் பெஸ்ட் ஸ்கூல் அவார்ட்
HMஅவார்ட்
டீச்சர்ஸ் அவார்ட்
போன்ற பாராட்டு சான்றிதழ்களை கடலூர் கல்வி மாவட்ட முதலாண்டு கல்வி ரேடியோ விழாவில் பெற்றுக் கொண்டது அனைத்து ஆசிரியர்களுக்கும் நல்ல ஒரு மன நிறைவான நிகழ்வாக அமைந்தது இதையெல்லாம் முறையாக செய்த திரு. கார்த்திக் ராஜா சார் அவர்களுக்கும் இந்த இடத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
8. பெற்றோர்களின் அனுபவங்கள்
1.எட்டாம் வகுப்பு படிக்கும் அ. பவித்ராவின் தந்தை ஏ அர்ஜுனன் அவர்கள் கூறியதாவது தன் மகளின் உண்மையான திறமைகளை இந்த ஆன்லைன் கல்வி ரேடியோ செயல்பாடுகளில் கலந்து கொண்டதன் மூலம் தன் மகளைப் பற்றி தான் நிறைவாக புரிந்து கொண்டதாக கூறினார்கள்
2 .வி மனிஷா எட்டாம் வகுப்பு. இவருடைய தாய் விர லட்சுமி கூறும்போது தன்மகள் ஊரடங்கு காலத்தில் தன் படிப்பை தொடர்ந்து செயல்படுத்த நல்ல ஒரு வாய்ப்பினை இந்த கல்வி ரேடியோ அளித்தது என கூறினார்
3 . கே .பி . சாய் பாலாஜி மாணவரின் பாட்டி திருமதி. சுந்தரி தன் பேரனுடன் ரேடியோ கேட்கும் போது தன்னுடைய இளமை பருவத்தை நினைவு கூற முடிந்தது என நெகிழ்வாக கூறினார்.
4 .காட்டுமன்னார்கோவிலில் உள்ள என் உறவினர் திருமதி உமாதேவி அவர்கள் தன்னுடைய பேரன் பேத்திகளுக்கு புதிய விடுகதைகள் மற்றும் பழமொழிகளை கூற எனக்கு இந்த கல்வி ரேடியோ உதவி செய்தது என கூறினார்.
5 .சென்னையை சேர்ந்த திருமதி கார்த்திகா அவர்கள் ஆங்கில வழி படிக்கும் தன் மகன் ஆதிலுக்கு தமிழ் கற்றுக் கொடுக்கவும் பேசவும் பாடல்களை பாடவும் இந்த ஆன்லைன் கல்வி ரேடியோ பயன்பட்டது எனக் கூறினார்
9. ஆன்லைன் கல்வி ரேடியோவில் பணியாற்றியதன் மூலம் சமூகத்தில் நான் பெற்ற அங்கீகாரங்கள்.
1.ஊரடங்கு காலத்தில் பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் ஆன்லைன் கல்வி ரேடியோவில் பணியாற்றிய ஒரே ஆசிரியர் என்ற அங்கீகாரமும் வாழ்த்தும் வட்டார கல்வி அலுவலர் திரு நடராஜன் அவர்கள் மூலம் 4/9/2021 அன்று நடைபெற்ற தலைமையாசிரியர் கூட்டத்தில் பரிசும் பாராட்டும் கிடைத்தது.
2. சிதம்பரம் கல்வி மாவட்டத்தின் செம்மை சீர் ஆசிரியர் விருதானது 5 9 2021 அன்று வழங்கப்பட்டது
3. சிதம்பரம் மிட் டவுன் ரோட்டில் சங்கம் மூலம் கல்வி காப்பாளர் விருது 25 9 2021 அன்று ரோட்டரி சங்கம் மூலம் வழங்கப்பட்டது.
4. செங்கல்பட்டு மாவட்ட அப்துல் கலாம் அறக்கட்டளை மூலம் கனவு ஆசிரியர் விருது அக்டோபர் மாதம் 2021 8 ம்தேதி அன்று வழங்கப்பட்டது.
5 வேதாத்திரி மகரிஷி அறக்கட்டளை சார்பாக 12 8 2022 அன்று வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
6. மாவட்ட முதன்மை கல்வி அலுவலரான திரு . கன்னிசாமி அவர்கள் 21 11 2022 அன்று பள்ளி பார்வையின் போது ஆன்லைன் கல்வி ரேடியோவில் மாணவர்கள் பங்கேற்றதையும் என்னுடைய பணியையும் பார்த்து பாராட்டி கல்வி ரேடியோ மூலம் வழங்கப்பட்ட பாராட்டையும் சான்றிதழையும் பதக்கத்தையும் வழங்கி மிகவும் பெருமையாக பாராட்டி மற்ற ஆசிரியர்களும் இதுபோல செய்ய முயலுங்கள் என்று அறிவுரை கூறி உங்களுடைய பணியை தொடர்ந்து செய்யுங்கள் என்று மிகவும் உற்சாகமாக பாராட்டினார். மேலும் பொள்ளாச்சியில் இருக்கக்கூடிய என்னுடைய பெயரை கொண்ட கீதா ஆசிரியரும் இந்த ஆன்லைன் கல்வி ரேடியோவில் இருப்பதால் உங்களையும் நான் ஆன்லைன் கீதா என்று அழைக்கிறேன் என்று கூறி இன்று வரை என்னை அப்படியே அழைப்பது மிகவும் பெருமைக்குரிய விஷயமாக உள்ளது .
7.பரங்கிப்பேட்டை ஒன்றிய BRT. திரு சசிகுமார் அவர்கள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர் செயல்களை பாராட்டி வழங்கப்பட்ட பரிசு பதக்கங்களை வழங்கி கௌரவப்படுத்தினார் .
8. S To வலைத்தமிழ் டிவி ஒருங்கிணைப்பாளர் திரு ரவி சொக்கலிங்கம் அவர்கள் 24 .4 2022 அன்று பள்ளிக்கு வருகை தந்து மாணவர்க ளையும் .ஊரடங்கு காலத்தில் மிகச் சிறப்பான பணியை செய்த என்னையும் பாராட்டி பரிசு வழங்கி உற்சாகப்படுத்தினார்.
9 . புகழினி பன்னாட்டு தொலைக்காட்சியில் இந்த ஆன்லைன் கல்வி ரேடியாவில் பணிபுரியக்கூடிய .திருமதி.ராமலக்ஷ்மி டீச்சர் மூலமாக என்னை அடையாளம் கண்டு நேரடி பேட்டி கண்டு நம்முடைய ஆன்லைன் கல்வி ரேடியோ நிகழ்வுகளை பற்றியும் இந்த தொலைக்காட்சிகள் பேசுவதற்கு வாய்ப்பு அளித்து. பாராட்டி வாழ்த்து கூறினார்கள் இந்த நிகழ்வானது 19 .3.2022 அன்று நேரடி ஒளிபரப்பாக ஒளிபரப்பப்பட்டது.
10 .கடலூர் மாவட்டத்தின் ஆன்லைன் கல்வி ரேடியோ முதலாம் ஆண்டு நிறைவு விழாவில் பங்கேற்ற ceo திரு. பூபதி அவர்கள் மற்றும்Deo . BRT மற்றும் வடலூர்DIET.தலைவர் போன்றோர்களின் முன்னிலையில் சிறந்த ஆசிரியருக்கான விருதும் சிறந்த பள்ளிக்கான விருதும் பாராட்டு சான்றிதழும் ஜூன் மாதம் 17 ஆம் தேதி 2022 அன்று KR team சார்பாக திரு .கார்த்திக் ராஜா சாரின் முயற்சியினாலும் இதில் பங்கேற்ற அனைத்து ஆசிரியர்களுக்கும் கிடைத்தது.இதுவே நல்ல ஒரு மதிப்பும் மரியாதையும் இந்த சமூகத்தின் மூலம் கிடைத்தது என்பதை கூறுவதில் பெருமை கொள்கிறேன்
10. தொடரும் பயணம்
" சேர்ந்து பயணிப்போம் இணைந்து சாதிப்போம்' என்பது போல ஆன்லைன் கல்வி ரேடியோவில் 2021 ஜனவரி முதல் இனைந்து இன்றும் இனிவரும் காலங்களிலும் திரு. கார்த்திக்ராஜா சாருடன் இணைந்து கல்விப்பணி செய்வதில் எனக்கு மட்டற்ற மகிழ்வும் பெருமையும் தான்.
"என் கடன் பணி செய்து கிடப்பதே"
" கடமையை செய் பலனை எதிர்பாராதே"
* உன் திறமை உலகறிய உனக்கு கிடைத்த அரிய வாய்ப்பு இந்த ஆன்லைன் கல்வி ரேடியோ"
என்பதில் எனக்கு பெருமையும் மகிழ்வும் இருக்கிறது இதனாலேயே நான் தொடர்ந்து இந்த ஆன்லைன் கல்வி ரேடியோவில் என்னையும் என்னுடைய மாணவர்களையும் இணைத்துக் கொண்டு தொடர்ந்து பயணிக்கிறேன். என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன் இதுபோல இந்த பணி செய்வது மனதுக்கும் உடலுக்கும் நல்ல ஒரு உற்சாகத்தையும் மனநிறைவையும் அளிக்கிறது அதனால் இந்த பணியை தொடர்ந்து செய்து கொண்டே இருப்பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. இந்த வாய்ப்பினை வழங்கிய திருக்கார்த்திக் ராஜா அவர்களுக்கும் இந்த கே ஆர் டீமில் என்னுடன் இணைந்து பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களுக்கும் இந்த பதிவின் மூலம் நன்றியையும் வாழ்த்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் வாழ்க வளமுடன் நன்றி வணக்கம்.
என்றும் உங்கள்
ச. கீதா வேதரத்தினம்.