Sunday, October 9, 2022

Tr.MANGALESWARI-BT-English-Govt.Girls.Hr.Sec.School-Kovilpatti-Thoothukudi-dist

 


Tr.MANGALESWARI BT-English
Govt.Girls.Hr.Sec.School-Kovilpatti
Thoothukudi-dist

ஆசிரியர்களின் அனுபவங்களை ஆன்லைன் கல்வி ரேடியோவில் E- book க்காக தொகுக்கும் முடிவில் , நானும் ஒரு ஆசிரியராய் ,ஆன்லைன் கல்வி ரேடியோவில் ஒன்றரை வருட காலம் பயணித்த ஒரு பயணி என்ற முறையில், என் அனுபவங்களைத் தொகுத்து அனுப்பி உள்ளேன் . இதனை வாசிக்கும் ஆசிரியப் பெருமக்கள், மாணவச் செல்வங்கள் மற்றும் ஆன்லைன் கல்வி ரேடியோவின் பயன்பாட்டாளர்கள் அனைவருக்கும் என் கனிவான வணக்கங்கள்!🙏🏻 நல்லாசிரியர் மற்றும் அன்பாசிரியர் சொ. மங்களேஸ்வரி (எம். ஏ., பி.எட் .,எம்.பில்.,) ஆகிய நான் தமிழக அரசால் 2012 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று அன்றைய முதல்வர் புரட்சித்தலைவி ஜெயலலிதா அவர்களால் 13 டிசம்பர் 2012ல் சென்னை ஒய். எம் .சி .ஏ மைதானத்தில் வைத்து பணி ஆணை வழங்கப்பெற்று 17 டிசம்பர் 2012 அன்று தூத்துக்குடி மாவட்டத்தில், கோவில்பட்டி நகரில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஆங்கில பட்டதாரி ஆசிரியையாகப் பணியில் சேர்ந்தேன். பணிக்கு சேர்ந்த நாளில் பி பி டி எனும் Power point presentation போட்டு பாடம் நடத்தும் அறிவும், ஆர்வத்துடனும் பணியை தொடங்கினேன். லேப்டாப்பில் பிள்ளைகளுக்கு படங்கள் மற்றும் பாடத் தலைப்பிற்கு ஏற்ற வீடியோக்களைக் காண்பித்துப் பாடங்களை நடத்தி, மாணவர்களை பல செயல்பாடுகளுக்கு உட்படுத்தி, அதில் சிறந்தவைகளைத் தேர்வு செய்து, வருட இறுதியில் பிப்ரவரி மாதம் லேர்னிங் அவுட்கம் ப்ரோக்ராம் ( Learning outcome programme) என நடத்தி, பரிசு வழங்குவதும் வருட இலக்காக இருந்தது . அதனை வீடியோ செய்து லேப்டாப்பில் போட்டுக் காட்டி ,ஆங்கிலம் என்றாலே பயந்து படிக்க மறுக்கும் பிள்ளைகளுக்கு ,ஆர்வம் ஏற்படுத்துவதே என் முயற்சியாக இருந்தது. ஏற்கனவே மெட்ரிகுலேஷன் பள்ளியில் செய்துவந்த பணியை நிறுத்தவோ மாற்றவோ கூடாது என்ற வைராக்கியமும் முழுமுதற் காரணமாக அமைந்தது .இவ்வாறாக செய்த போது மாணவர்களின் ஆர்வமும் ,புரிதலும் மேம்படுவதைப் பார்க்க முடிந்தது. " பயத்தைப் போக்கி  -பயணத்தில், படிப்பெனும் பயணத்தில், பங்கெடுக்க வைக்க முடிந்தது. இப்படியாகச் சென்று கொண்டிருந்த எனது ஏழு வருட ஆசிரியர் பணியில், மெல்ல கற்கும் மாணவர்களுக்காக, அவர்கள் மெல்ல கற்போராக இருக்கக் காரணமே, வாசிப்புத் திறன் இல்லால் தான் என்று புரிந்த நாள் முதல், நான் தயாரிக்கும் பவர் பாயிண்ட் ப்ரசெண்டேஷனில், என்னுடைய வாய்ஸ் ஆடியோவை இணைத்து, அவர்கள் வாசிப்பதற்கான நேரம் விட்டு பதிவு செய்து, வகுப்பில் ப்ளூடூத் ஸ்பீக்கர் பயன்படுத்தி, அவர்களை மீண்டும் மீண்டும் கேட்க வைப்பது என்று முடிவு செய்து Question pattern ல்  அவர்கள் எந்தெந்த கேள்விகளில் கவனம் செலுத்தினால் தேர்ச்சி பெற முடியும் என்பதைக் கவனத்தில் கொண்டு, ஆங்கிலம் முதல் மற்றும் இரண்டாம் தாள்களுக்கு  PPT தயார் செய்து, பயிற்சி அளித்து வந்ததே தலைமை ஆசிரியை மற்றும் கல்வி அதிகாரிகளால் பாராட்ட பெற்றது. எல்லா நேரங்களிலும் லேப்டாப் பயன்படுத்த முடியாது என்று எண்ணி, சார்ட்டில் கேள்விகளை எழுதி டெஸ்கில் பரப்பி வைத்து விடுவேன். அருகில் லீடர்களை நிறுத்தி வாசிக்கப் பழக்குவேன் அல்லது நானே வாசித்துக் கொடுப்பேன். இவ்வாறாக வாசிப்புத் திறனை மேம்படுத்தினேன். ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க ஆர் பி ஆக செல்லும் இடத்தில் இவ்விரண்டையும் செய்து காண்பித்தபோது Innovative வாக உள்ளது என பாராட்டும் பெற்றுத் தந்த விஷயங்கள் இவை .இவ்வாறு சிறந்த முறையில் சென்ற பணியில் அடுத்த கட்டமாக வாட்ஸாப்  மூலமும் ,ஆண்ட்ராய்டு போன் இல்லாத மாணவியரிடம் போன் கால் செய்தும் படித்து ஒப்புவிக்க செய்தேன். வாட்ஸ் அப் குழு ஆரம்பித்த ஒரு வாரத்தில் மாணவியரிடம் சிறிது வேறுபாடும் தெரிய ஆரம்பித்தது. "அற்புதமான அர்ப்பணிப்பு பணியில் அரங்கேறிய அரக்கன் தான் -கொரோனா (கோவிட் 19).  மார்ச் 21 2020 இல் பத்தாம் வகுப்பு தேர்வு ஆரம்பிக்க நான்கைந்து நாட்களே இருந்த நிலையில் ஊரையே அடக்கி ,வீட்டில் பதுக்கி, ஆசிரியர்களைத் தனிமையில் பள்ளியில் பரிதவிக்க விட்டு ,15 நாட்களில் நிலைமை சீரடையும் ... ஒரு மாதத்தில் சீரடையும்... அதன் பின் தேர்வு இருக்கும் ....என்ற எதிர்பார்ப்பில் மூழ்கடித்து..... அனைவரையும் ஊரடங்கு எனும் பெயரில் , தேர்வை நிறுத்தி, வீட்டில் சிறை வைத்து, உல்லாசமாய் உலவியது கோவிட்- 19 வைரஸ் . அச்சூழலில் ஆர்ப்பரிப்பு, அவசரகதி என ஓடிக்கொண்டிருந்த வாழ்க்கையில், மண்பானை சமையல்... நிதானமான, பரபரப்பில்லாத வீட்டு வேலை, தாயம், பல்லாங்குழி, சீட்டு கட்டு, கேரம் என பாரம்பரிய வீட்டு சூழலை அமைத்து சந்தோஷமாக இருக்க முடிந்தாலும் ,பணியில் தொய்வு, பள்ளிகளில்லாமல்- பராமரிப்பில்லா மாணவிகள் என ஏதோ ஒரு பெரும் குறை மனதை ஆட்டுவிக்க, மாணவியரைச் சென்றடைய ஓர் வழி கண்டடைய வேண்டும் என ஆர்வமும் ஆதங்கமும் ஏற்பட்டது .......(தொடரும்)

Tr.A.R.Thailambal-PUMS-Vadakkipalayam-Pollachi-North-Coimbatore-District


ஆ.ரா.தைலாம்பாள்
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வடக்கு பாளையம்,
பொள்ளாச்சி வடக்கு கோயம்புத்தூர் மாவட்டம்.

ஆசிரியர் அனுபவங்கள்....

 ஆன்லைன் கல்வி ரேடியோ கல்வி ரேடியோ www.kalvi radio.com அறிமுகம் கிடைத்தது பற்றி...

 கொரோனா ஊரடங்கு காலத்தில் எங்கள் ஒன்றியத்தில் பணியாற்றிய ஆசிரியர்கள் மூலம் நாளிதழ் செய்திகளின் வாயிலாக கல்வி ரேடியோ பற்றிய அறிமுகம் எனக்கு கிடைத்தது. எங்கள் பள்ளி கணித பட்டதாரி ஆசிரியை எம். ஸ்ரீதேவி மூலம் கல்வி வலையொலி பற்றி அறிந்தேன். 

2. கொரோனா ஊரடங்கு காலத்தில் கற்பித்தல் பணியில் ஆன்லைன் கல்வி ரேடியோ பயன்பாடு....

 2020 ஆம் ஆண்டுக்கு முன்பு வரை நாம் மாணவர்களை நேரடியாக அணுகி அவர்கள் கல்வி செழித்தோங்க அவர்களுக்கு வழிகாட்டியாக இருந்தோம். கொரோனா ஊரடங்கால் பள்ளிகள் மூடப்பட்டது. பல மாணவர்களின் கல்வி முற்றிலும் முடங்கியது. செல்வ செழிப்புள்ளவர்கள் பல வழிகளில் என்னதான் இணைய வழியில் பல கருவிகள் கொண்டு கற்றாலும் குறிப்பாக அரசு பள்ளி மாணவர்கள் கற்க வழியின்றி தம்மை வழிநடத்த தக்க துணை இன்றி இருந்த தருணத்தில் ஏதேனும் ஒரு மாற்று வழியில் அனைத்து மாணவர்களும் கல்வி கற்க என்ன வழி என்று யோசித்துக்கொண்டு இருந்த நேரத்தில், கடலூர் மாவட்டம், புவனகிரி ஒன்றியம், கத்தாழை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர் திரு.ஆ.கார்த்திக் ராஜா அவர்கள் ஆன்லைன் கல்வி ரேடியோ என்னும் கல்வி வலையொலியை துவக்கினார். முதலில் ஒன்றிய, மாவட்ட அளவில் இருந்த கல்வி வலையொலி பின்னாளில் கற்பக விருட்சமென பரந்து விரிந்தது.


3. கொரோனா காலத்தில் மாணவர்களின் கற்றலில் ஆன்லைன் கல்வி ரேடியோ பங்கு...

என்னுடன் பணியாற்றும் ஆசிரியர்கள் சிலரும் இந்த கல்வி வலையொலி மூலம், தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து பாடம் தொடர்பான ஆடியோக்களை கவனித்து, கல்வி ரேடியோ  தொடர்பான பல விளக்கங்களை பெற்றனர். இந்த கல்வி ரேடியோவின் சிறப்பம்சம் மாணவனின் உடல் நலத்திற்கும், மனநலத்திற்கும், தீங்கிழைக்காத எங்கேயும், எப்பொழுதும், எக்கணமும், எல்லா நேரங்களிலும், திரும்ப திரும்ப செவி வழியே கேட்டு படிக்க முடியும். மேலும் இந்த கல்வி வலையொலியை சாதாரண கைபேசியிலும் கூட பயன்படுத்த முடியும். மேலும் இந்த கல்வி வலையொலிக்கு செலவிடப்படும் Data -வானது மிகவும் குறைவு. மேலும் இந்த கல்வி வலையொலி ஒரு Blog spot என்பதால்  எவ்விதமான விளம்பரங்களும் தோன்றாது. இந்த கல்வி வலையொலி மூலம் கொடிய நோய் தொற்று காலத்திலும், மாணவர்களுக்கு தலைசிறந்த கல்வியை அளிக்க முடியும்.


4. இந்த ஆன்லைன் கல்வி ரேடியோவில் உங்கள் செயல்பாடுகள் பற்றி....

 இந்த இலட்சியப் பயணத்தில் என்னுடைய அனுபவம் இதன் செயல்பாடுகளை பற்றி அறிந்தவுடன் இந்த லட்சிய பயணத்தில் என்னையும் இணைத்துக் கொள்ள பேரார்வம் கொண்டேன்.  இந்த ஊக்கம் தான் என்னை இந்த பயணத்தில் சேர்த்தது. நான் உடனடியாக திரு.கார்த்திக் ராஜா அவர்களை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு இந்த லட்சிய பயணத்தில் நானும் ஒரு அங்கமாக இணைந்து கொள்ள என் விருப்பத்தை தெரிவித்தேன். அவர் மகிழ்வுடன் இசைவு தெரிவித்தார். 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 4-ஆம் தேதி முதல் எனது 6,7,8 வகுப்புகளுக்கான ஆடியோக்களை அனுப்ப துவங்கினேன். ஆடியோக்கள் தயாரிக்க, தயாரிக்க ஆர்வம் கொப்பளித்தது. மேலும் மேலும் புத்தகப் பாடல்கள், பாரதியார் பாடல்கள், பொதுவான பாடல்கள் பாடநூல் வாசிப்பு பயிற்சி,Points to remember, புத்தக பூங்கொத்து கதைகள், ஆத்திச்சூடி, விடுகதைகள், பழமொழிகள் மற்றும் இன்ன இன்ன பலவகையான கற்றல்களை கல்வி வலையொலிக்கு வழங்கி வருகிறேன். மொத்தம் 700 ஆடியோக்கள் தயார் செய்து அனுப்பியுள்ளேன்.


 பள்ளி தொடங்கிய பின் வகுப்பறை கற்றல்

கற்பித்தல் செயல்பாடுகளில் ஆன்லைன் கல்வி ரேடியோ பயன்பாடு...

 Bluetooth speaker மூலம் மாணவர்களுக்கு ஆடியோ கேட்க செல்கிறோம். மேலும் பாடல்கள், திருக்குறள், பழமொழி பாட புத்தகப் பயிற்சி போன்றவற்றை மீண்டும் கேட்கச் செய்யலாம் இந்த புதுவிதமான கற்றல் கற்பித்தல் முறையினால், எந்த மாணவனும் செவி மூலம் நிறைவான கற்றலை அடைய முடியும். ஆசிரியர் இல்லாத வகுப்பறையிலும், ஒரு ஆசிரியரின் இடத்தை கல்வி ரேடியோ நிரப்புகிறது என்றால் அது மிகையாகாது.


5. இந்த ஆன்லைன் கல்வி ரேடியோவில் மாணவர்கள் பங்கேற்று  தங்களது செயல்பாடுகளை பகிர்ந்தது பற்றி ...

எங்கள் பள்ளி மாணவர்கள் குடியரசு தினம், சுதந்திர தினம் போன்ற விழாக்களின் கல்வி ரேடியோவில், செயல்பாடுகளில் மகிழ்ச்சியுடன் பங்கேற்று தங்களது திறமையை வெளிப்படுத்தியுள்ளனர். ஆன்லைன் கல்வி ரேடியோ மூலம் மாணவர்கள் பெற்ற ஊக்கம், எங்கள் பள்ளி மாணவர்கள் அதிக அளவில், அதிக செயல்பாடுகளில் பங்கேற்று, பாராட்டு சான்றிதழ்,Trophies   பெற்றுள்ளனர். இவை அவர்களுக்கு மென்மேலும் மகிழ்ச்சி, ஊக்கம் ஏற்படுத்தியது.

 கல்வி அலுவலர் கருத்து...

 பொள்ளாச்சி மாவட்டம் கல்வி அலுவலர் அவர்களும், வடக்கு வட்டார கல்வி அலுவலர் அவர்களும், கல்வி ரேடியோ செயல்பாடுகளை பாராட்டி, ஊக்கம் அளித்து வருகின்றனர்.

 பெற்றோர் கருத்து....


 தங்கள் மாணவர்களின் கல்விக்கு கல்வி ரேடியோ மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக பெற்றோர் கருத்து தெரிவித்துள்ளனர். மாணவர்களுக்கு கல்வி ரேடியோ மூலம் கிடைக்கும் சான்றிதழ்கள், பாராட்டுக்கள் அவர்களுக்கு மகிழ்ச்சியும், ஊக்கமும் தருவதாக கூறியுள்ளனர். என்றென்றும் நல்வாழ்த்துக்களுடன்

ஆ.ரா.தைலாம்பாள்.M.A. B.Ed பட்டதாரி ஆசிரியர் (தமிழ்) 

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வடக்கு பாளையம், 

பொள்ளாச்சி வடக்கு கோயம்புத்தூர் மாவட்டம்.

Tr.Santhi-SSKV-SALA-Primary-School-Mukkudal-Pappakudi-Tirunelveli-DIS


Tr.சாந்தி
சொக்கலால் சரஸ்வதி ஷத்திரிய வித்யா சாலா ஆரம்பப்பள்ளி,
முக்கூடல், பாப்பாக்குடி ஒன்றியம்.
 திருநெல்வேலி மாவட்டம்.

ஆன்லைன் கல்வி ரேடியோ தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஆசிரியர்களையும் அன்போடு பழகுவதற்கும் தகவல்களை பரிமாறுவதற்கும் பேர் உதவியாக உள்ளது. 

இதன் எளிமையும் 

கையாளும் வசதியும் 

இதன் நேர்த்தியும் 

இதனை உருவாக்கிய திரு. கார்த்திக் ராஜா சார் அவர்களையே சேரும் மேலும் மேலும் புத்துயிர் பெற்று விருட்சமாய் வளர எனது அன்பான வாழ்த்துக்களும் நன்றியும்....

கல்வி ரேடியோவில் பங்கு கொண்ட ஒரு வாரத்திலேயே திருநெல்வேலி அரிமா சங்கம் வழங்கிய சிறந்த ஆசிரியருக்கான விருதை பெற்றேன் அதைத்தொடர்ந்து வாட்ஸ் அப் குழுவில் கார்த்திக் ராஜா சார் பகிர்ந்த அன்பாசிரியர் விருதுக்கான விண்ணப்பத்தில் கல்வி ரேடியோ அனுபவங்களையும் சேர்த்து விண்ணப்பித்திருந்தோம் 2022 ஆம் ஆண்டிற்கான அன்பாசிரியர் விருதும் கிடைத்தது. தற்போது பிற ஆசிரியர்களை சிறந்த ஆசிரியர் விருதுக்காக பரிந்துரைக்கும் அங்கீகாரத்தை திருநெல்வேலி அரிமா சங்கம் வழங்கியுள்ளது இது ஆன்லைன் கல்வி ரேடியோ மூலமாக எனக்கு கிடைத்த அங்கீகாரம் ஆகும்.

திருநெல்வேலி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களை சந்தித்து ஆன்லைன் கல்வி ரேடியோ பற்றி கூறும் பொழுது பாராட்டி சிறப்பு செய்தார்கள். வட்டார கல்வி அலுவலர் திருமதி. மீனாட்சி அவர்களும் வெகுவாகப் பாராட்டினார்கள்.

கல்வி ரேடியோவில் வாசித்தல் எழுதுதல் பகுதிக்கு பதிவேற்றம் செய்யும் பொறுப்பை ஏற்றதிலிருந்து பல்வேறு மாவட்டங்களில் உள்ள ஆசிரியர்களுடன் பேசும் வாய்ப்பு கிடைத்தது ஆகையால் பிற மாவட்டங்களை பற்றியும் கல்வி நிலை குறித்தும் அறிந்து கொள்ள கல்வி ரேடியோ எனக்கு பேர் உதவியாக இருந்தது பிற ஆசிரியர்களுடன் பேசும் பொழுது அவர்களின் மனநிலை, பள்ளி சூழ்நிலை, கல்வி வளர்ச்சி, மாணவர்களின் தரம் மற்றும் மாணவர்களின் தரத்தை உயர்த்த அவர்களின் புதிய யுக்திகள் பற்றியும் தெரிந்து கொண்டேன் அதை எனது மாணவர்களுக்கும் நான் செயல்படுத்தி வெற்றியும் பெற்றுள்ளேன் கல்வி ரேடியோவில் பங்கெடுத்த பிறகு எனக்கு தன்னம்பிக்கையும் மனநிறைவும் மிகுதியாக வளர்ந்துள்ளது.

கல்வி ரேடியோவும் நானும் 


முதன் முதலில் கல்வி ரேடியோவை நடத்திக் கொண்டிருக்கும் திரு கார்த்திக் ராஜா சார் அவர்களுக்கு நல்லாசிரியர் விருது கிடைத்த செய்தியை அவரது வலைதளத்தில் தெரிந்து கொண்டேன் அவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் பொருட்டு அவர்களை அலைபேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்ததோடு கல்வி ரேடியோவில் பங்கெடுக்கும் வழிமுறைகளை கேட்டேன் இது மிக எளிமையான தொழில்நுட்பம் தாங்கள் இருந்த இடத்திலிருந்து இதில் தாராளமாக பங்கெடுக்கலாம் என்று எனக்கு வழிமுறைகளை கூறினார்கள் நான் முதன்முதலில் இதில் பங்கெடுக்கும் போது பலமுறை அவர்களை அலைபேசியில் அழைத்து எனக்கு வரும் எல்லா சந்தேகங்களுக்கும் நிவர்த்தி பெற்றுள்ளேன் சற்றும் கோபப்படாமல் எல்லா சந்தேகங்களையும் தீர்த்து வைத்தார்கள் ஆகையால் என்னால் அதில் எளிதாக பங்கு கொள்ள முடிந்தது முதலில் மூன்றாம் வகுப்பிற்கான வினா விடை பகுதிக்கு தமிழ்  கணக்கு அறிவியல் சமூக அறிவியல் ஆகிய நான்கு பாடங்களுக்கும் மதிப்பீடு பகுதிக்கான கேள்விகளை தயார் செய்து ஆடியோக்களை அனுப்பினேன் எனக்கு அதில் ஒரு மகிழ்ச்சியும் திருப்தியும் இருந்தது ஆகையால் தொடர்ந்து இதில் பயணிப்பதில் மிகுந்த ஈடுபாடு கொண்டேன் பின்பு இதை முடித்துவிட்டு வேறு ஏதேனும் பாடம் எடுக்க வேண்டி இருக்கிறதா என்று கார்த்திக் ராஜா சாரிடம் கேட்டபோது கூடுதல் கேள்விகள் Quiz பகுதிக்கு கேள்விகள் எடுக்க வேண்டும் முடியுமா என்று கேட்டார்கள் நான் கண்டிப்பாக முடியும் என்று கூறி அதற்கான ஆடியோக்களை தயார் செய்து அனுப்பினேன் இவ்வாறு எனது ஆன்லைன் கல்லூரி ரேடியோவின் முதல் அனுபவம் சிறப்பாக அமைந்தது பின்பு அந்த வேலையை முடித்துவிட்டு சார் வேறு ஏதேனும் வேலை இருக்கிறதா என்று கேட்கும் பொழுது சார் என்னிடம் உங்களுக்கு கம்ப்யூட்டர் தெரியுமா என்று கேட்டார்கள் ஆமாம் என்று சொன்னவுடன் வலைதளத்தில் எவ்வாறு பதிவேற்றம் செய்வது என்பதை மிகத் தெளிவாக கூறி பதிவேற்றம் செய்யும் முக்கிய பணியிலும் என்னை ஈடுபடுத்தினார்கள் முதலில் சற்று பணி கடினமாக தோன்றினாலும் அதை நான் பழகிக் கொண்டேன் அப்பொழுதும் பலமுறை ஆசிரியரை அழைத்து சந்தேகம் கேட்டுள்ளேன் சற்றும் முகம் சுளிக்காமல் அனைத்தையும் தெரிந்து கொள்ள உதவினார்கள் பிறகு எனக்கு வாசித்தல் & எழுதுதல்  குழுவிற்கான தலைமை பொறுப்பை தந்தார்கள் இன்று வரை அந்த பொறுப்பில் நான் எந்தவித தொய்வும் இல்லாமல் எனது வேலையை சிறப்பாக செய்கிறேன் என்றே என்ன தோன்றுகிறது. மேலும் வலைதளத்தின் ஒவ்வொரு பகுதியையும் எவ்வாறு இயக்குவது என்று டெமோ வீடியோக்கள் அனுப்பி உள்ளேன். Google meetல் எவ்வாறு ஒரு சந்திப்பை நடத்துவது என்பது பற்றியும் தெரிந்து கொண்டேன். ஆன்லைன் கல்வி ரேடியோவில் பணியாற்றிய பிறகு  மனதிற்கு ஒரு திருப்தியும் மனநிறைவும் ஏற்பட்டுள்ளது.


ஆன்லைன் கல்வி ரேடியோவில் நவம்பர் 14 குழந்தைகள் தின நிகழ்ச்சியில் எங்களது மாணவர்கள் அதிகமாக பங்கு பெற்று ட்ராபி மற்றும் மெடல் பெற்றுள்ளனர் ஆடியோ தயாரிப்பில் மாணவர்கள் தன்னிச்சையாக ஈடுபட்டதால் மாணவர்களுக்கும் தன்னம்பிக்கை வளர்ந்துள்ளது. 

ஜனவரி 26 குடியரசு தின நிகழ்ச்சியிலும் எங்களது பள்ளி மாணவர்கள் பங்கேற்று டிராபி மற்றும் மெடல் பெற்றுள்ளனர். 

அதேபோன்று ஆண்டு இறுதியில் வைத்த நிகழ்விலும் பங்கு கொண்டு சுமார் 80 மாணவர்கள் அதற்கான பரிசுகளை பெற்றுள்ளனர்

 இவ்வாறு மாணவர்கள் பரிசு பெறுவதற்கும் மாணவர்களை வழிகாட்டுவதற்கும் ஆசிரியர்களுக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த ஆன்லைன் கல்வி ரேடியோவிற்கு மிகுந்த நன்றி. இதில் பங்கு கொண்டதன் மூலம் மாணவர்கள் சுய அறிமுகம் செய்யும் தன்னம்பிக்கையை பெற்றுள்ளனர். போட்டிகளில் பங்கேற்க தயக்கமின்றி முன் வருகிறார்கள். மாணவர்களிடையே ஆரோக்கியமான போட்டி மனப்பான்மை வளர்ந்துள்ளது.

Tr.SAMUNDESWARI-SGT-PUPS-VANATHIRAYAPURAM-KURINJIPADI-Cuddalore-Dis.


நா.சாமுண்டீஸ்வரி, இடைநிலை ஆசிரியர்,
ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி-வானதி ராயபுரம் 
குறிஞ்சிப்பாடி ஒன்றியம்
கடலூர் மாவட்டம்

 இணைய வழி கல்வியில் இணைந்த என் அனுபவங்கள்:

என்னைப் பற்றி:

        நான் நா.சாமுண்டீஸ்வரி, இடைநிலை ஆசிரியர் ,கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி ஒன்றியம், வானதி ராயபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பணிபுரிந்து வருகிறேன். நான் 17/12/2012 அன்று ஆசிரியர் பணியில் சேர்ந்தேன். சேர்ந்த நாள் முதல் இன்று வரை மாணவர்களின் கற்றல் மேம்படுவதற்கான வழிகளை தேடித்தேடி முயன்ற வரை சிறப்பாக கற்பித்தல் பணியை மேற்கொண்டு வருகிறேன்.

ஆன்லைனில் அறிமுகமான ஆன்லைன் கல்வி ரேடியோ:

    நான் ஆன்லைன் கல்வி ரேடியோவை பற்றி முகநூல் வாயிலாக தெரிந்து கொண்டேன் .அதில் இணைந்து செயல்படுவதற்கு ஆசையும் ஆர்வமும் எனக்குள் இருந்தது.24/03/2022 அன்று வடலூர் DIET இல் நடைபெற்ற "RESEARCH PROJECT DISSEMINATION WORKSHOP"என்ற பணிமனையில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட திரு.ஆ.கார்த்திக் ராஜா அவர்களைச் சந்தித்தேன். அந்தப் பணிமனையில் "கடலூர் மாவட்டத்தில் கொரோனா பெருந் தொற்று காலக்கட்டங்களில் ஆன்லைன் கல்வி ரேடியோவின் பயன்பாடு" என்ற தலைப்பில் DIET Lecturer திரு.பழனி அவர்கள் மேற்கொண்ட ஆய்வினை விளக்கிக் கூறினார். பயிற்சி முடிந்த பிறகு திரு.கார்த்திக் ராஜாவை சந்தித்து ஆன்லைன் கல்வி ரேடியோவில் பயணம் செய்வதில் இருக்கும் என் ஆர்வத்தைப் பற்றிப் பேசினேன்."பயிற்சியின் அந்தம்...

என் முயற்சியின் ஆதியாக அமைந்ததில் எனக்கு மகிழ்ச்சி".


வானொலியில் என் முதல் குரலொலி :

  26/03/2022 அன்று மூன்றாம் வகுப்பு மூன்றாம்பருவம்  சமூக அறிவியல் பாடத்தில் புத்தக பயிற்சிகளுக்கான (BOOKBACK EXERCISES) ஆடியோக்களைத் தயார் செய்து அனுப்பினேன் .இதுவே என் முதல் ஆடியோ பங்களிப்பாகும்.

என் ஆடியோக்களின் அணி வகுப்பு:

  *புத்தகப் பயிற்சி ஆடியோவை தொடர்ந்து மூன்றாம் வகுப்பிற்கு வினா விடை பகுதிகளுக்கான (அறிவியல், கணக்கு ,சமூக அறிவியல் ) ஆடியோக்களைத் தயார் செய்தேன். 

*30/03/2022 அன்று துவங்கியது என்னுடைய தேதியும் செய்தியும் பொது அறிவு பகுதி. ஒவ்வொரு தேதியின் முக்கியத்துவத்தைப் பற்றி இதில் கூறியிருப்பேன். இது மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் அமைந்து வருகிறது .பள்ளிகளில் காலை வழிபாட்டுக் கூட்டத்தில் 'இன்றைய தினம்' என்ற தலைப்பில் பேசுவதற்கு மாணவர்களுக்கும் ,ஆசிரியர்களுக்கும் பயனுள்ளதாக அமைந்து வருகிறது .மேலும் போட்டி தேர்வுகளுக்கு படித்துக்கொண்டிருக்கும் தேர்வர்களுக்கும் இது மிகவும் பயனுள்ள வகையில் அமையும்.

*13/04/2022 அன்று துவங்கியது உயிரெழுத்துக்களுக்கான ஆடியோ தொகுப்பு. நான் இதில் ஒவ்வொரு உயிரெழுத்துக்கும் ஐந்து சொற்கள் வீதம் கூறியிருப்பேன். இது மாணவர்களுக்கு தமிழ் எழுத்துப் பயிற்சிக்கு மிகவும் பயன்பட்டு வருகிறது.

*உயிர் எழுத்துக்களைத் தொடர்ந்து மெய்யெழுத்துக்களின் ஆடியோ தொகுப்புகள் தயார் செய்தேன். 

*பிறகு points to remember பகுதியில் இரண்டாம் வகுப்பிற்கு ஆடியோக்களைச் செய்தேன்.

*தற்போது எண்ணும் எழுத்தும் திட்டம் நடைமுறையில் உள்ள வகுப்பு ஒன்று முதல் மூன்றாம் வரை உள்ள ஆசிரியர் கையேட்டில் இருக்கும் ஆங்கில பாடல்களுக்கான (ENGLISH SONGS-TERM -1) ஆடியோக்களைத் தயார் செய்துள்ளேன்.

*மேலும் பருவம் இரண்டிற்கான எண்ணும் எழுத்தும் "சொல்வதை எழுதுதல் "(ENGLISH DICTATION)பகுதி ஆங்கிலப் பாடத்திற்கு ஆடியோக்களைத் தயார் செய்துள்ளேன்.



Tr.S.Geetha-BT-Pums-Ponnanthittu-Parangeipettai-CUDDALORE-DIS

 



அறிமுகம் 

 திருமதி கீதா வேதரத்தினம் .பட்டதாரி ஆசிரியை.ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி.

பொன்னந்திவிட்டு பரங்கிப்பேட்டை ஒன்றியம் கடலூர் மாவட்டம் .

ஆன்லைன் கல்வி ரேடியோ என்ற அறிமுகமானது என்னுடன் பணியாற்றி தற்போது சேலம் மாவட்டத்தில் பணிபுரியும் பி.மஞ்சரி இடைநிலை ஆசிரியர் மூலம் 2021 இல் ஜனவரி மாதம் இருபதாம் தேதி தெரிந்து கொண்டேன் அன்று அவர்கள் என்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நான் ஆன்லைன் கல்வி ரேடியோவில் ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாஸ்  எடுத்தது இன்று கல்வி ரேடியோவில் ஒளிபரப்பாகிறது அதனை நீங்கள் கேட்டு நான் எப்படி நடத்திய உள்ளேன் என்பதை என்னுடன் தொடர்பு கொண்டு கூறுங்கள் என்று மிகவும் உரிமையுடன் கேட்டுக்கொண்டார்.

நானும் அதனைக் கேட்டு மிகவும் சிறப்பாக உள்ளது என்று பாராட்டினேன். அவர்கள் உடனே நீங்களும் இதுபோல வகுப்பு எடுங்கள் என்று என்னை உற்சாகப்படுத்தினார் மேலும் கார்த்திக் ராஜா அவர்களின் தொலைபேசி எண்ணை  கொடுத்து உடனே பேசுங்கள் என்றார்.எனக்கும் இந்த புதுமை பிடித்திருந்ததால் உடனே கார்த்திக் ராஜா sir ஐ தொடர்பு கொண்டு நானும்  கல்வி ரேடியோவில் இணைகிறேன் இதற்கு என்ன செய்ய வேண்டும் என்று கேட்டேன் அவரும் உடனே உற்சாகமாக முதல் வகுப்பு மற்றும் இரண்டாம் வகுப்பிற்கான சூழ்நிலை இயல் பாடத்திற்கான மூன்றாம் பருவத்திற்கான பாடங்களை நடத்த முடியுமா என்று கேட்டார் நானும் உடனே சரி என்று கூறி அதன்படி நடத்தி பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி 2021 முதல் என்னுடைய கல்வி ரேடியோ பயணம் தொடங்கி தற்போது வரை மன நிறைவுடன் பயணித்துக் கொண்டிருக்கிறேன்.


2. கல்வி ரேடியோ பற்றிய எனது உணர்வுகள்

 எனக்கு எப்போதும் புதுமையாக எதையாவது செய்ய வேண்டும் என்ற ஆர்வம் உண்டு. அதனால் ரேடியோவில் வகுப்பு எடுப்பு என்பது மிகவும் ஆர்வமாகவும் புதுமையாகவும் இருந்தது என்னை நான் ஒரு ரேடியோ ஆர்ஜேவாக  எண்ணி பெருமை கொண்டு மகிழ்வுடன் பாடம் நடத்தினேன்.


3 . ஆன்லைன் கல்வி ரேடியோவில் என்னுடைய கற்பித்தல் அனுபவம் 

என்னுடைய ஆண்ட்ராய்டு போன் மூலம் வாய்ஸ் ரெக்கார்டர் வாயிலாக முதன்முதலில் நான் முதல் மற்றும் இரண்டாம் வகுப்புகளுக்கான சூழ்நிலையியல்பாடத்தின் முதல் மற்றும் மூன்றாம் பருவத்திற்கான பாடத்தை எடுத்தேன். முதலில் சற்று பயமாகவும் தடுமாற்றமாகவும் இருந்தது .ஏனென்றால் இதுதான் போனில் பாடம் நடத்திய என்னுடைய முதல் அனுபவம். மேலும் மாணவர்களே இல்லாத இடத்தில் மாணவர்கள் இருப்பது போல கற்பனை செய்து கொண்டு தொடர்ந்து 30 நிமிடங்கள் பேசுவது என்பது சவாலாக இருந்தது. அதைவிட அமைதியான இடம் கிடைப்பது அதைவிட சவாலாக இருந்தது காரணம் கொரோனா காலகட்டம் என்பதால் வீட்டில் அனைவரும் ஒரே இடத்தில் இருந்தார்கள் டிவி  ரேடியோ செல்போன்  சுற்றுப்புற சவுண்டு  எல்லாம் எனக்கு மிகப்பெரிய சோதனையை தந்தது. பல நாட்கள் இரவு 12 மணிக்கு மேல் ரெகார்ட் செய்த அனுபவமும் உண்டு .ஆனாலும் என்னால் கூட இதையெல்லாம் செய்ய முடிகிறது என்ற ஆனந்தமே எனக்கு நிம்மதியை அளித்தது. அதைவிட கொரோனா பயம் பற்றி சிந்திக்க நேரமில்லாமல் என் மனதை ஆன்லைன் கல்வி ரேடியோ ஆக்கிரமித்துக் கொண்டு உற்சாகமாக என்னை வைத்துக் கொள்ளவும் என்னுடைய நேரத்தை சரியாக செலவிடவும் இந்த ஆன்லைன்வகுப்பறை கற்பித்தல் அனுபவம் எனக்கு தந்தது.


4.  ஆன்லைன் கல்வி ரேடியோ பாடப் பகுதிகளை மாணவர்களிடம் கொண்டு சேர்ப்பதில் நான் சந்தித்த சவால்கள்/ சோதனைகள் 


1. மாணவர்களிடம் செல்போன் இல்லை

 2.செல்போன் இருந்தாலும் அது பட்டன் செல் மாடலாக இருந்தது

 3.பெற்றோர்களால் கொரோனா காலகட்டம் என்பதால் ரீசார்ஜ் செய்ய முடியாத நிலை வறுமையும் இதற்கு ஒரு காரணம். 


4.பெற்றோர்களிடம் ஆர்வமின்மை 

5.மாணவர்கள் அனைவரும் கொரோனா பயத்தில் இருந்தார்கள் அந்த மனநிலையை சமாளிக்க முடியவில்லை

6  புதிய தொழில்நுட்பம் பற்றிய தயக்கம் எப்படி புரிய வைப்பது என்ற குழப்பம்

 7 .யாருமே படிக்காத காலத்தில் அதாவது கொரோனா காரணமாக டீச்சர் நம்மை மட்டும் ஏன் படிக்கவும் ரேடியோ கேட்கவும் செய்கிறார்கள் என்ற எதிர்மறையான எண்ணம் கொண்ட பெற்றோர்கள் மாணவர்களின் மனநிலை


 8 .மாணவர்களிடம் எப்படி கொண்டு சேர்ப்பது என்ற என்னுடைய ஆதங்கம் மற்றும் கவலை


 9.நான் ஆன்லைன் வகுப்பு எடுப்பதற்கு எனக்கு கிடைத்த எதிர்மறையான விமர்சனங்களால் ஏற்பட்ட வெறுப்பு 


 10 .கொரோனா தொற்றால் எனக்கு ஏற்பட்ட உடல்நிலை தொய்வு மேலும் குடும்பத்திலும் கொரோனா தொற்றால் ஏற்பட்ட நிம்மதி இன்மை இதுபோல பல்வேறு பிரச்சனைகளை நான் எவ்வாறு சமாளித்தேன் என்பதை இனிவரும் பகுதியில் பார்க்கலாமா


5. கற்றலில் மாணவர் பங்கு


 சிறு துளி பெருவெள்ளம் என்பது போலவும் நாம் ஒரு அடி எடுத்து வைத்தால் கடவுள் நம்மை நோக்கி 10 அடி எடுத்து வைப்பார் என்ற கூற்றுக்கிணங்க முதன் முதலில் எட்டாம் வகுப்பு மற்றும் முதல் வகுப்பு படிக்கும் இரு குழந்தைகள் கொண்ட அதாவது கே பி தியா கே பி சாய் பாலாஜி என்ற மாணவர்கள் வீட்டைத்தான் முதன் முதலில் நான் தொடர்பு கொண்டேன் ஏப்ரல் 16ஆம் தேதி 2021 இல் தொலைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆன்லைன் கல்வி ரேடியோ பற்றியும் அதன் பயன்களையும் அதை எப்படி பயன்படுத்துவது என்ற வெப்சைட் அட்ரஸ் ஐயும்  கல்வி ரேடியோலிங்கையும் கொடுத்து இதை எப்படி பயன்படுத்துவது இதனால் நமக்கு என்ன பயன் என்பது பற்றி எல்லாம் அவரிடம் பேசினேன். அவர்களுக்கு புரிந்தது போலவும் புரியாதது போலவும் இருந்தார்கள் மறுநாள் அவர்களை தொடர்பு கொண்டு வீடியோ காலில் வருமாறு கூறி அவர்களுக்கு என்னுடைய செல்போனிலிருந்து எப்படி www.kalviradio.com என்பதை எப்படி நாம் பயன்படுத்த வேண்டும் என்பதை ஆபரேட் செய்து காட்டினேன். ஓரளவு புரிந்து கொண்ட அந்த குழந்தைகளின் பெற்றோரான திருமதி கே.பி .பபிதா அவர்கள் மறுநாள் என்னிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தான் அந்த வெப்சைட்டை ஓபன் செய்ததாகவும் காலை ஆறு மணிக்கு அமுதக் கதைகள் மற்றும் பாடல்களை தான் கேட்டதாகவும் கூறினார் மேலும் இது மிகவும் அருமையாக இருக்கிறது டீச்சர் நன்றாக இருக்கிறது இதனால் நாளை முதல் என்னுடைய குழந்தைகளுக்கும் இந்த ரேடியோவை போட்டுக்காட்டுகிறேன் என்ற நற்செய்தியை என்னிடம் தெரிவித்த போது நான் என்னுடைய முதல்  குழந்தையை சுகப்பிரசவத்தில் பெற்றெடுத்த அனுபவத்தை உணர்ந்தேன் .நான் மீண்டும் மீண்டும் அவர்களிடம் போன் செய்து தினமும் இதை கேட்பதற்கு வலியுறுத்தினேன் அதன் பின்னர் அவரை ஆன்லைன் கல்வி ரேடியோ வாட்ஸ் அப் குரூப்பில் இணைத்து மிக எளிதாக அந்த வெப்சைட்டில் ரேடியோ கேட்க உதவி செய்தேன். மேலும் என்னுடைய whatsapp குரூப் ஸ்டேட்டஸ் . ஃபோன் கால் வீடியோ கால்  மூலமும் என்னுடைய தோழிகள் நண்பர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் ஆசிரியர்  தோழிகள் நண்பர்கள்  ஓய்வு பெற்ற ஆசிரியர்கள்

 என் உறவினர்கள் என எனக்குத் தெரிந்த பல பேரிடம் ஆன்லைன் கல்வி ரேடியோ பற்றி கூறினேன் இதில் முக்கியமாக பொன்னந்திட்டு கூழையார் பகுதி முன்னாள் மாணவர்களான திரு. அமர்நாத் திரு. கலைமுதன்

 செல்வி .அக்ஷயா சத்துணவு பொறுப்பாளர் திரு .உமாநாத் போன்றவர்கள் என் செய்தியை மற்றவர்களிடம் தெரிவிக்கும் நல்ல ஒரு ஊடகமாக செயல்பட்டார்கள் அதேபோல தில்லைவிடங்கன் பள்ளியின் முன்னாள் மாணவியான செல்வி மாயாவதியும்  ஆன்லைன் கல்வி ரேடியோ பற்றிய செயல்பாடுகளை மாணவர்களிடமும் பெற்றோர்களிடமும் தெரிவிக்க ஒரு நல்ல துணையாக செயல்பட்டார் இதனைத் தொடர்ந்து ஆன்லைன் கல்வி ரேடியோ whatsapp குரூப்பில் ஜூன் மாதம் 2021 இல் என்னுடைய மாணவர்களின் பெற்றோர்களும் முன்னாள் மாணவர்களும் இணைந்து இந்த சேவையை நன்கு பயன்படுத்தி மற்றவர்களுக்கும் எடுத்துக் கூறினார்கள் இதன் மூலம் என்னுடைய இந்தப் பயணமானது விரைவாகவும் மகிழ்வாகவும் மற்றவர்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு நல்ல ஒரு ஊடகமாகவும் இருந்தது இதன் மூலம் ஆசிரியர்களும்  மாணவர்களும்இந்த ஆன்லைன் கல்வி ரேடியோ சேவையை பயன்படுத்தி தங்களுடைய ஊரடங்கு காலத்தை கற்றல் செயல்பாட்டுக்கு நல்ல முறையில் பயன்படுத்திக்கொண்டனர். நான் நடத்திய பாடப்பகுதியையும் அதன் சிறப்புகளையும் என்னுடன் பகிர்ந்து கொண்டது என்னுடைய பணிக்கான அங்கீகாரமாக இந்த பாராட்டுகள் அமைந்தது.


6. என்னுடைய வகுப்பறையில் ஆன்லைன் கல்வி ரேடியோ பயன்படுத்திய விதம் . 


கொரோனா அரக்கன் பிடியிலிருந்து தப்பித்த நாமும் மாணவர்களும் சந்தித்த 2021 நவம்பர்மாதம் நமக்கும் மாணவர்களுக்குமான பொற்காலம்

 பல்வேறு மனநிலையில் இருந்த மாணவர்களை ஒரு இடத்தில் அரை மணி நேரம் அமர வைப்பதே அனைத்து ஆசிரியர்களுக்கும் பெரும் சவாலாக இருந்தது அப்போது நம்முடைய தமிழக அரசும் மாணவர்களை உற்சாகப்படுத்தும் நோக்கில் பாடல்களும் கதைகளும் கூறி மாணவர்களின் மனநிலையை சரி செய்யும் டாக்டர் வேலையை நம்மால் செய்ய முடியும் என்ற நோக்கில் நமக்கு செய்திகளை அனுப்பி நம்மை உற்சாகமாக பணி செய்ய ஆர்வமூட்டினர் இந்த செயல்பாட்டுக்கு எனக்கும் மற்ற ஆசிரியர்களுக்கும் ஆன்லைன் கல்வி ரேடியோவில் ஒளிபரப்பான நற்சிந்தனை

 வினாடி வினா 

விடுகதை 

திருக்குறள் பழமொழிகள் 

மற்றும் மாணவர்கள் பங்கு கொண்ட மின்மினி நேரங்கள் என்ற நிகழ்ச்சியானது 

மிகவும் பயனளித்தது மேலும் பாடப்பகுதியில் பாடம் கற்பித்தல்

வினா விடை

 ஒன் மார்க் கொஸ்டின் போன்ற பகுதியும் மிகவும் பயனுள்ளதாக இருந்தது 

குறிப்பாக இரு ஆசிரியர்கள் உள்ள பள்ளியில் நம் ஆன்லைன் கல்வி ரேடியோ ஒரு பகுதி நேர ஆசிரியரைப் போலவே செயல்பட்டது

 ஆறு .ஏழு .எட்டு வகுப்புகளுக்கு பல பள்ளிகளில் சில பாடங்களுக்கு எடுத்துக்காட்டாக அறிவியல் 

சமூக அறிவியல் பாட  ஆசிரியர் இல்லாமல் இருக்கும் வகுப்பறையில் பாடப்பகுதி நடத்தும் ஆடியோ மிகவும் உதவியாக இருந்தது. வினா விடை ஆடியோக்கள் ஆசிரியர்களின் வேலைப்பளுவை குறைத்தது

 நோட்ஸ் வாங்கும் சூழ்நிலையை தவிர்த்தது

 மேலும் வகுப்பறை சைலண்டாக இருக்கவும் மாணவர்களின் கவனம் சிதறாமல் இருக்கவும் இந்த வினா விடை ஆடியோ மிகவும் பயன்படுத்தப்பட்டது குறிப்பாக மாணவர்கள் தங்கள் பாடப் பகுதிக்கான வினா விடையை தானே குறித்துக்கொண்டு தான் சரியாக குறித்துக் கொண்டுள்ளனரா? என்பதை சரி பார்க்க  சுய பரிசோதனை செய்து கொள்ளும் ஒரு கருவியாகவும் இந்த ஆன்லைன் கல்வி ரேடியோ பயன்பட்டது என்று கூறினால் அது மிகையாகாது/


7. ஆன்லைன் கல்வி ரேடியோ செயல்பாடுகளில் எம் பள்ளி மாணவர்களின் பங்கு


 ஒற்றுமையே பலம் என்பதற்கு ஏற்ப பல ஆசிரியர்கள் மற்றும் பல மாணவர்களின் குரலை வானொலி மூலம் பாடப் பகுதி மற்றும் மின்மினி நேரங்கள் மூலம் கேட்ட என் பள்ளி மாணவர்களை மெதுவாக கல்வி ரேடியோ மாணவர்கள் செயல்பாடுகளில்பங்கு பெற ஆர்வமூட்டினேன் அதன் நிகழ்வாக பொன்னந்திட்டு பள்ளியை சேர்ந்த 14மாணவர்கள்  ஊரடங்கு காலத்தில் தொடர்ந்து கல்வி ரேடியோ நிகழ்வுகளில் பங்கு கொண்டதற்கான ஈ  சர்டிபிகேட் பெற்றது மாணவர்களுக்கும் எனக்கும் உற்சாகமாக இருந்தது. 

அதற்கு அடுத்து அக்டோபர் மாதம் 30ஆம் தேதி 2020இல் குழந்தைகள் தின விழா மாணவர் செயல்பாட்டிற்கு 25 மாணவர்கள் கலந்துகொண்டு பரிசும் அதற்கான பதக்கமும் பெற்றனர் .

இதில் மாணவர்களுக்கு உதவி செய்த பள்ளி ஆசிரியர்களையும் கௌரவிக்கும் விதமாக தலைமை ஆசிரியர் உட்பட அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும் டிசம்பர் 2020இல் எழுதுவேன் வாசிப்பேன் என்ற நிகழ்வில் பன்னிரண்டு மாணவர்கள் பங்கேற்று பாராட்டு பெற்றனர். 

இதில் குறிப்பாக ஒவ்வொரு மாணவர்களும் 60 ஆடியோ மற்றும் எழுத்து வேலைகளையும் செய்து நிறைவாக ஒப்படைத்தனர். 

சொல்வதை எழுதுதல் என்ற நிகழ்வில் எட்டு மாணவர்கள் தொடர்ந்து கேட்டு எழுதி பாராட்டு பெற்றனர். இவற்றையெல்லாம் என்னுடைய ஸ்டேட்டஸில் அப்டேட் செய்த போது என்னுடைய சக ஆசிரியர்களான pums கொத்தங்குடி இந்து. Pums .சம்பந்தம் pums  பிச்சாவரம் pups. பூவாலைpups மணல்மேடு பள்ளி மாணவர்களும் ஆன்லைன் கல்வி ரேடியோ மாணவர் செயல்பாடுகளில் பங்கேற்று அவர்களும் பரிசும் பாராட்டும் பெற்றனர் இவ்வாறு செய்வதற்கு அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களும் ஒத்துழைப்பு வழங்கியதால் பெஸ்ட் ஸ்கூல் அவார்ட்

HMஅவார்ட் 

டீச்சர்ஸ் அவார்ட்

 போன்ற பாராட்டு சான்றிதழ்களை கடலூர் கல்வி மாவட்ட முதலாண்டு கல்வி ரேடியோ விழாவில் பெற்றுக் கொண்டது அனைத்து ஆசிரியர்களுக்கும் நல்ல ஒரு மன நிறைவான நிகழ்வாக அமைந்தது இதையெல்லாம் முறையாக செய்த திரு. கார்த்திக் ராஜா சார் அவர்களுக்கும் இந்த இடத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

8. பெற்றோர்களின் அனுபவங்கள் 


1.எட்டாம் வகுப்பு படிக்கும் அ. பவித்ராவின் தந்தை ஏ அர்ஜுனன் அவர்கள் கூறியதாவது தன் மகளின் உண்மையான திறமைகளை இந்த ஆன்லைன் கல்வி ரேடியோ செயல்பாடுகளில் கலந்து கொண்டதன் மூலம் தன் மகளைப் பற்றி தான் நிறைவாக புரிந்து கொண்டதாக கூறினார்கள் 


2 .வி மனிஷா எட்டாம் வகுப்பு. இவருடைய தாய் விர லட்சுமி கூறும்போது தன்மகள் ஊரடங்கு காலத்தில் தன் படிப்பை தொடர்ந்து செயல்படுத்த நல்ல ஒரு வாய்ப்பினை இந்த கல்வி ரேடியோ அளித்தது என கூறினார்


3 . கே .பி . சாய் பாலாஜி  மாணவரின் பாட்டி திருமதி. சுந்தரி தன் பேரனுடன் ரேடியோ கேட்கும் போது தன்னுடைய இளமை பருவத்தை நினைவு கூற முடிந்தது என நெகிழ்வாக கூறினார். 


4 .காட்டுமன்னார்கோவிலில் உள்ள என் உறவினர் திருமதி உமாதேவி அவர்கள் தன்னுடைய பேரன் பேத்திகளுக்கு புதிய விடுகதைகள் மற்றும் பழமொழிகளை கூற எனக்கு இந்த கல்வி ரேடியோ உதவி செய்தது என கூறினார். 


5 .சென்னையை சேர்ந்த திருமதி கார்த்திகா அவர்கள் ஆங்கில வழி படிக்கும் தன் மகன்  ஆதிலுக்கு தமிழ் கற்றுக் கொடுக்கவும் பேசவும் பாடல்களை பாடவும் இந்த ஆன்லைன் கல்வி ரேடியோ பயன்பட்டது எனக் கூறினார்

9. ஆன்லைன் கல்வி ரேடியோவில் பணியாற்றியதன் மூலம் சமூகத்தில் நான் பெற்ற அங்கீகாரங்கள். 



1.ஊரடங்கு காலத்தில் பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் ஆன்லைன் கல்வி ரேடியோவில் பணியாற்றிய ஒரே ஆசிரியர் என்ற அங்கீகாரமும் வாழ்த்தும் வட்டார கல்வி அலுவலர் திரு நடராஜன் அவர்கள் மூலம் 4/9/2021 அன்று நடைபெற்ற தலைமையாசிரியர் கூட்டத்தில் பரிசும் பாராட்டும் கிடைத்தது. 


2. சிதம்பரம் கல்வி மாவட்டத்தின் செம்மை சீர் ஆசிரியர் விருதானது 5 9 2021 அன்று வழங்கப்பட்டது 


3. சிதம்பரம் மிட் டவுன் ரோட்டில் சங்கம்  மூலம் கல்வி காப்பாளர் விருது 25 9 2021 அன்று ரோட்டரி சங்கம் மூலம் வழங்கப்பட்டது. 


4. செங்கல்பட்டு மாவட்ட அப்துல் கலாம் அறக்கட்டளை மூலம் கனவு ஆசிரியர்  விருது அக்டோபர் மாதம் 2021 8 ம்தேதி அன்று வழங்கப்பட்டது. 


    5 வேதாத்திரி மகரிஷி அறக்கட்டளை சார்பாக 12 8 2022 அன்று வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. 


6.  மாவட்ட முதன்மை கல்வி அலுவலரான திரு . கன்னிசாமி அவர்கள் 21 11 2022 அன்று பள்ளி பார்வையின் போது  ஆன்லைன் கல்வி ரேடியோவில் மாணவர்கள் பங்கேற்றதையும் என்னுடைய பணியையும் பார்த்து பாராட்டி கல்வி ரேடியோ மூலம் வழங்கப்பட்ட பாராட்டையும் சான்றிதழையும் பதக்கத்தையும் வழங்கி மிகவும் பெருமையாக பாராட்டி மற்ற ஆசிரியர்களும் இதுபோல செய்ய  முயலுங்கள் என்று அறிவுரை கூறி உங்களுடைய பணியை தொடர்ந்து செய்யுங்கள் என்று மிகவும் உற்சாகமாக பாராட்டினார். மேலும் பொள்ளாச்சியில் இருக்கக்கூடிய என்னுடைய பெயரை கொண்ட கீதா ஆசிரியரும் இந்த ஆன்லைன் கல்வி ரேடியோவில் இருப்பதால் உங்களையும் நான் ஆன்லைன் கீதா என்று அழைக்கிறேன் என்று கூறி இன்று வரை என்னை அப்படியே அழைப்பது மிகவும் பெருமைக்குரிய விஷயமாக உள்ளது .



7.பரங்கிப்பேட்டை ஒன்றிய   BRT. திரு சசிகுமார் அவர்கள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர் செயல்களை பாராட்டி  வழங்கப்பட்ட பரிசு பதக்கங்களை வழங்கி கௌரவப்படுத்தினார் . 


8. S To  வலைத்தமிழ் டிவி ஒருங்கிணைப்பாளர் திரு ரவி சொக்கலிங்கம் அவர்கள் 24 .4 2022 அன்று பள்ளிக்கு வருகை தந்து மாணவர்க ளையும்  .ஊரடங்கு காலத்தில் மிகச் சிறப்பான பணியை செய்த  என்னையும் பாராட்டி பரிசு வழங்கி உற்சாகப்படுத்தினார். 


9 . புகழினி பன்னாட்டு தொலைக்காட்சியில் இந்த ஆன்லைன் கல்வி ரேடியாவில் பணிபுரியக்கூடிய .திருமதி.ராமலக்ஷ்மி டீச்சர் மூலமாக என்னை அடையாளம் கண்டு நேரடி பேட்டி கண்டு நம்முடைய ஆன்லைன் கல்வி ரேடியோ நிகழ்வுகளை பற்றியும் இந்த தொலைக்காட்சிகள் பேசுவதற்கு வாய்ப்பு அளித்து. பாராட்டி வாழ்த்து கூறினார்கள் இந்த நிகழ்வானது 19 .3.2022 அன்று நேரடி ஒளிபரப்பாக ஒளிபரப்பப்பட்டது. 


10 .கடலூர் மாவட்டத்தின் ஆன்லைன் கல்வி ரேடியோ முதலாம் ஆண்டு நிறைவு விழாவில் பங்கேற்ற ceo திரு. பூபதி அவர்கள் மற்றும்Deo  . BRT மற்றும் வடலூர்DIET.தலைவர் போன்றோர்களின் முன்னிலையில் சிறந்த ஆசிரியருக்கான விருதும் சிறந்த பள்ளிக்கான விருதும் பாராட்டு சான்றிதழும் ஜூன் மாதம் 17 ஆம் தேதி 2022 அன்று KR team சார்பாக திரு .கார்த்திக் ராஜா சாரின் முயற்சியினாலும் இதில் பங்கேற்ற அனைத்து ஆசிரியர்களுக்கும் கிடைத்தது.இதுவே நல்ல ஒரு மதிப்பும் மரியாதையும் இந்த சமூகத்தின் மூலம் கிடைத்தது என்பதை கூறுவதில் பெருமை கொள்கிறேன்


10. தொடரும் பயணம்


" சேர்ந்து பயணிப்போம் இணைந்து சாதிப்போம்' என்பது போல ஆன்லைன் கல்வி ரேடியோவில் 2021 ஜனவரி முதல் இனைந்து இன்றும் இனிவரும் காலங்களிலும் திரு. கார்த்திக்ராஜா சாருடன் இணைந்து கல்விப்பணி செய்வதில் எனக்கு மட்டற்ற மகிழ்வும் பெருமையும் தான். 


"என் கடன் பணி செய்து கிடப்பதே"

" கடமையை செய் பலனை எதிர்பாராதே"


* உன் திறமை உலகறிய உனக்கு கிடைத்த அரிய வாய்ப்பு  இந்த ஆன்லைன் கல்வி ரேடியோ"


 என்பதில் எனக்கு பெருமையும் மகிழ்வும் இருக்கிறது இதனாலேயே நான் தொடர்ந்து இந்த ஆன்லைன் கல்வி ரேடியோவில் என்னையும்  என்னுடைய மாணவர்களையும் இணைத்துக் கொண்டு தொடர்ந்து பயணிக்கிறேன். என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன் இதுபோல இந்த பணி செய்வது மனதுக்கும் உடலுக்கும் நல்ல ஒரு உற்சாகத்தையும் மனநிறைவையும் அளிக்கிறது அதனால் இந்த பணியை தொடர்ந்து செய்து கொண்டே இருப்பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. இந்த வாய்ப்பினை வழங்கிய திருக்கார்த்திக் ராஜா அவர்களுக்கும் இந்த கே ஆர் டீமில் என்னுடன் இணைந்து பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களுக்கும் இந்த பதிவின் மூலம் நன்றியையும் வாழ்த்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் வாழ்க வளமுடன் நன்றி வணக்கம். 

என்றும் உங்கள்

ச. கீதா வேதரத்தினம்.


Tr.M.ShakilaSalamath-Govt.Girls.Hr.Sec.School-Kovilpatti-Thoothukudi-dist



 அறிமுகம் 

 நான் மு.ஷகிலா சலாமத் B.lit, MA. Bed. நான் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அரசு மகளிர்  மேல்நிலைப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக  பணியாற்றுகிறேன். நான் 1999 ஆம் ஆண்டு அரசுப்பணியில் சேர்ந்தேன், நான்  என் வகுப்பறையை மிகவும்  சுவராஸ்யமாக கொண்டு செல்ல விரும்புவேன், ஆகையால் QR code, Videoக்களை பயன்படுத்துவேன். பொம்மைகள், படங்கள், Chart போன்ற வற்றையும் பயன்படுத்துவேன். . மாணவிகளுக்கு Project work கொடுத்து அவர்கள் அனைவரையும் ஓவியம் வரைய ஊக்குவிப்பேன்.


 கொரோனா காலகட்டத்தில் கிடைத்த வரப்பிரசாதம் . 

 எனக்கு பாடல், நடனம், ஓவியம், பேச்சு போன்றவற்றில் ஈடுபாடு அதிகம். அதே போல் என்னிடம் பயிலும் மாணவிகளும் நல்ல திறமைகள் பெறவேண்டும் என்று அலாதி பிரியம். 2019 ஏப்ரல் மாதத்தில் உருவான கொரோனா என்ற நோய் உலகையே உலுக்கி போட்டது. அந்த சமயத்தில் தம்பி திரு. கார்த்திக் ராஜா அவர்களால் அறிமுகம் செய்யபட்ட கல்வி ரேடியோ கொரோனா காலகட்டத்தின் ஒரு வரப்பிரசாதம் ஆகும். எனக்கு கிடைத்த நல் வாய்ப்பை  மாணவச் செல்வங்களுக்கு நல் வழியில் பயன்படுத்தினேன்.


 கல்வி ரேடியோவின் சிறப்பு 

 கல்வி ரேடியோவின் அறிமுகம் கிடைத்த போது. அதன் சிறப்பு அம்சங்களை எண்ணி பூரிப்படைந்தேன்.

 அவை சுருக்கமாக

* வாசித்தல் 

* வாக்கியங்களில் சொல்வதை எழுதுதல்.

* பாடல், கதை. 

*ஆடியோ லைப்ரரி.

* தினசரி செயல்பாடு.

*பழமொழிகள்.

*விடுகதைகள்.

*பாடங்கள், பயிற்சிகள்.

*வினா, விடைகள்.

ஆகா..... அனைத்தும் வியக்க வைக்கும் விதமாக இருந்தது. 


 எனது பங்களிப்பு 

நான் ஆன்லைன் கல்விரேடியோவில் 6ஆம் வகுப்பு மாணவச்செல்வங்களுக்கு ஆங்கில வழியில் சமூக அறிவியல் பாடமும். 7ம் வகுப்பு மாணவச் செல்வங்களுக்கு சொல்வதை எழுதுதல் தமிழ் மற்றும் ஆங்கில பாடத்தில் செயல்பாடுகள் செய்தேன். என் வகுப்பு மாணவிகள் கேட்டு பயன் பெற்றுள்ளனர் என்பதை கொரோனா காலகட்டத்திற்கு பின் பள்ளிகள் திறந்து செயல்பட ஆரம்பித்த பொழுது நான் தெரிந்து கொண்டேன் .



 குழந்தைகள் தின பங்கேற்பு படைப்பாற்றல் வளர்த்தல். 


 குழந்தைகள் தின பங்கேற்பில் என் வகுப்பு மாணவச் செல்வங்களும் பங்கேற்றனர்.

 

 




அவர்களின் படைப்புகள் மிக அருமை, அதிலும் அந்தச் செயல்பாடுகள் மாணவர்களின் எழுத்து, ஓவியம் மற்றும் பல திறமைகளை மேம்படுத்தும் வண்ணமும், போட்டியில் கலந்து பரிசுகளை வெல்ல வேண்டும் என்ற ஆர்வமும் இருந்தது சிறந்த படைப்பகளிகளாக உருவெடுக்கும் வண்ணம் அந்த செயல்பாடுகள் இருந்தன.


 சிறந்த ஆசிரியர்கள் விருது 

 நாம் எவ்வளவு வேலை பார்த்தாலும் நமக்கான அங்கீகாரம் அவ்வப்பொழுது தேவைப்படும் .மரம் வளர உரம் தேவை ,என்பதற்கு ஏற்ப விருது என்பது நமக்கான உரம். அந்த உரம் இடத்தயாராக இருந்தவர்கள் நெல் விளையும் பூமியாக உள்ள நெல்லை மாவட்டத்தில் நம் கல்வி குழு ஆசிரியை திருமதி. சாந்தி அவர்கள். Lion திரு. திரு மலைக்குமரன் ஆசிரியர் தின விழாவை முன்னிட்டு சிறந்த ஆசிரியர் விருது வழங்க இருப்பதாகவும். அதில் விருப்பம் உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம் என்றும்  கூறினார். அதில் நானும் கலந்து கொண்டு விருது வாங்கினேன். கரும்பு தின்ன கூலியா? விருதுக்கு ஏற்பாடு செய்த சகோதரி திருமதி. சாந்தி மற்றும் விருது வழங்கிய சகோதரர் திரு. திருமலைகுமரன் அவர்களுக்கும் நன்றி கூற கடமை பட்டுள்ளேன். நாம் எந்த விருதுகளையோ , பாராட்டுகளையோ எதிர் பார்த்து  இக்கல்வி ரேடியோவில் பங்கேற்கவில்லை. அரசு பள்ளி  மாணவர்கள் மட்டும் அல்லாது மற்ற மாணவச்  செல்வங்களும் பயன் பெற அனைவரும் இணைந்தோம். பணியாற்றினோம்.


இந்த வாய்ப்பை நல்கிய அருமைத் தம்பி அவர்களுக்கும் நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த குழுவில் என்னை இணைத்து அறிமுகம் செய்த சகோதரி திருமதி. புஷ்பா அவர்களுக்கும் என் நன்றியை தெரிந்துக்கொள்கிறேன்.


 நல் ஆக்கத்திற்கு ஊக்கம் அவசியம். 

மாணவர்களுக்கு செயல்பாடுகள் மூலம் நல்ல ஊக்கமும் மேலும் எங்கும் எப்பொழுதும் தொய்வு இல்லாமல் கல்வி பெற நல்ல பல தரமான வினாக்கள், விடைகள், பயிற்சி என பற்பலசிறப்பம்சங்களை அள்ளி தந்தது நம் கல்வி குழு. இவையனைத்தையும் பார்த்து வியந்தேன்.  எப்பப்பா இவ்வளவும் சாத்தியமா என்று எல்லாம் சாத்தியம் என்று நிரூபித்துக் காட்டினார். நம் நல்லாசிரியர் அருமை தம்பி திரு. கார்த்திக் ராஜா அவர்கள் அவருடைய ஆக்கத்திற்கு நல் ஊக்கமாய் பல ஆசிரிய பெருமக்கள் கைகோர்த்தனர்.


மீண்டுமாய் அனைவருக்கும் நன்றி .

 பெற்றோர்களின் கருத்து குவியல்கள் : 

பெற்றோர்களின் கருத்துக்கள் ஆடியோ மற்றும் வீடியோவாகவும் எமக்கு கிடைத்தன. அக் கருத்துக் குவியல்கள் முத்துக் குவியல்களாக ஜொலித்தன.  வைர கீரிடத்திற்கு முத்துக்களால் மேலும் மெருகூட்டுவதைப் போன்ற வார்த்தை ஜாலங்கள். 

 பயணங்கள் முடிவதில்லை 

 சிறிதளவில் தொடங்கப்பட்ட இந்த இணையவழி பயணம் மேலும் சிறப்புடனும் ஒளிர மிளிர என்னால் முடிந்த வழிகளில் உதவி செய்ய கடமை பட்டுள்ளேன்.

இப்பயணம் மேலும் மேலும்  சிறப்புடன் வெற்றி பெற வாழ்த்துகிறேன். 

                           நன்றி! வணக்கம். 

                                

                         இப்படிக்கு, 

                    மு. ஷகிலா சலாமத்

                   அரசு(ம)மே.நி.பள்ளி

                        கோவில்பட்டி. 

                     தூத்துக்குடி மாவட்டம்.

Tr.Gayathri-PUMS-ELUMICHANAHALLI-Dharmapuri Dt

  


ஆசிரியர் பெயர்: இரா.காயத்ரி

பதவி   : பட்டதாரி ஆசிரியை (கணிதம்)

பள்ளி   : ஊ.ஒ.ந.நி.பள்ளி, எலுமிச்சனஅள்ளி , காரிமங்கலம் ஒன்றியம், தருமபுரி மாவட்டம்

 

 அறிமுகம்:   கொரானா காலகட்டத்தில் மாணவர்களுக்கு ஏதேனும் ஒன்றை கொடுக்க வேண்டும் என தேடிய போது ஜூலை 2021 இல் பயிற்சித்தாள்கள் கொடுக்க தேடிய போது  ஆன்லைன் கல்வி ரேடியோவில் அடி எடுத்து வைத்தேன். மாணவர்கள் ஆர்வமுடன் செய்ய அந்த பயிற்சித்தாள்களை இன்றுவரை பயன்படுத்தி வருகிறோம். பள்ளி மற்றும் வகுப்பறை சார்ந்த அத்தனை கோப்புகளும் சேகரித்து வைத்துள்ளனர். எளிமையாக பிரதி எடுத்து பயன்படுத்தலாம்.

 

 ஆன்லைன் கல்விரேடியோவில் எனது பயணம்  :

  1.அக்டோபர் 2021 இல் தருமபுரி கல்வி ரேடியோ குழுவில் நவம்பர் மாத குழந்தைகள் தின விழா செயல்பாடுகள் குறித்த இணைப்பு தென்பட்டது. ஓராண்டு கால இடைவெளிக்கு பின்னர் மாணவர்களை ஊக்குவிக்க நல்ல வாய்ப்பென்று 20 மாணவர்கள் 3 முதல் 8 ஆம் வகுப்பு வரை பங்கேற்க செய்தேன். நினைத்ததை விட மாணவர்களிடம்  நல்ல ஆர்வம் தென்பட்டது. இதில் 3 மாணவர்கள் கேடயம், பதக்கமும், 6 மாணவர்கள் பதக்கமும், 11 மாணவர்கள் சான்றிதழ்களும் பெற்றனர். அதிலிருந்து மற்ற மாணவர்களும் வாய்ப்பு எப்போது மீண்டும் வரும் என கேட்க துவங்கினார்கள். தலைமையாசிரியர் பாராட்டுகளுடன் ஒத்துழைப்பும் அளித்தார். இந்த செயல்பாடுகள் செய்ய உதவி ஆசிரியை சாந்தி அவர்கள் ஒத்துழைப்பு தந்தார். மாணவர்கள் மற்றும் ஆசியர்கள் காணொளியும் கல்வி ரேடியோ யூ டூபில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

      பெற்ற பரிசுப்பொருட்களை பள்ளி மேலாண்மை குழு மற்றும் ஆசிரியப் பயிற்றுநர் முன்னிலையில் வழங்கி பாராட்டினோம்.

  அனைத்து கல்வி ரேடியோ வலையொலி பக்கத்தில் சேமித்துள்ளனர். எப்போதும் வேண்டுமானாலும் பார்த்து பயன் பெறலாம்.

 



2. அதன் பிறகு மாணவர்களுக்கு கல்வி ரேடியோவை எவ்வாறு பயன்படுத்துவது, பாடம் சார்ந்த மற்றும் பாடம் சாராத எத்தனை விதமான விஷயங்கள் உள்ளன என்பதை தெளிவுப்படுத்தினேன். பெரும்பாலான மாணவர்கள் செயல்படுத்த கற்றுக்கொண்டு செயல்படுத்தி வருகின்றனர். பெற்றோர்களிடமும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பாடல், கதை,விடுகதை, பொது அறிவு மற்றும் பாடம் என மாணவர்கள் பயன்படுத்த அனைத்தும் ஒருங்கிணைந்து உள்ளது.

3.மாணவர்களுக்காக எனது பங்களிப்பும் தர வேண்டும் என எண்ணினேன். பாடல்கள், ஆறாம் வகுப்பு வாசித்தல் பகுதி, எளிமையாக நினைவில் கொள்ள (points to remember) பகுதி என 150 இற்கும் மேற்பட்ட ஆடியோக்களையும் மற்றும் ஆன்லைன் தேர்விற்கு 5 முதல் 8 ஆம் வகுப்பு வரை தயார் செய்து கொடுத்து தொடர்ந்து பயணிக்கிறேன். ஆன்லைன் வினாத்தாள்களும் வடிவமைத்து தந்துள்ளேன்.

4. ஆன்லைன் கல்வி ரேடியோ சிறப்பு மலர் தயாரிப்பிற்கு தருமபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடமிருந்து வாழ்த்துரையும் கிடைக்கப்பெற்றேன்.இதனை கேட்டு ஐயா அவர்கள் பாராட்டினார்கள். பிரதியை கொடுத்த போது மனமகிழ்ச்சியோடு பாராட்டினார்கள். மாணவர்களை கருத்தில் கொண்டு எடுத்து வைத்த அடி அங்கீகாரமாக மாறியுள்ளது. எமது மாவட்டத்தில் நான் மட்டுமே ஒரே ஒரு ஒருங்கிணைப்பாளராக முதலில் இங்கு இணைந்து செயல்பட்டு வருகிறேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.  விரைவில் பலரையும் இதில் இணைப்பேன்.



5. ஜனவரி 2022 குடியரசு தின செயல்பாடுகளில் 45  மாணவர்கள் பங்கேற்றனர். சிறப்பாக செய்து பதக்கமும், சான்றிதழும் பெற்றனர். இதன் மூலம் அவர்களது கேட்டல், படித்தல், எழுதுதல் மற்றும் வரையும் திறன் மேம்பட்டுள்ளதை நன்றாக கண்காணிக்க முடிகிறது.  அந்த கோப்புகளை பத்திரமாக சேகரித்து வைத்துள்ளேன். 

       எமது பள்ளிக்கு அருகாமை பள்ளி எர்ரசீகலஅள்ளி நடுநிலை பள்ளி உதவி ஆசிரியை திருமதி. இராஜேஸ்வரி அவர்களையும் ஊக்குவித்து, 12 மாணவர்கள் பங்கேற்று சான்றிதழ் பெற்றனர்.

     எமது பள்ளியில் உடன் பணியாற்றும் 5 ஆசிரியர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ் பெற்றுத்தந்தேன்.




6. கல்வி மலரில் பள்ளி மேலாண்மை குழு தலைவி கருத்து பகிர்ந்துள்ளார். மேலும் மற்ற உறுப்பினர்களிடம் இதனை பற்றி கூறி வருகிறார். அவர்களுடைய இரண்டு பிள்ளைகளும் கேடயம், பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் பெற்றுள்ளனர்.

 

ஆன்லைன் கல்வி ரேடியோ பற்றிய அனுபவம்:

      அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆபத்தில்லாமல், எளிமையாக கையாளக்கூடிய ஒரு தளம்.  மாணவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை தானே கேட்டு களைந்திடலாம்.  எங்களை போன்ற ஆசிரியர்களுக்கு கூட்டு முயற்சியில் கிடைத்த வெற்றி.  முகமறியாத எத்தனையோ அரசு பள்ளி மாணவர்களுக்கு சென்று பயனடையும், எதையோ புதிதாக சாதித்தது போல் ஒரு உணர்வு. இந்த ஆன்லைன் கல்வி ரேடியோ பயணம் இன்னும் தொடரும்.

 

ஆசிரியை. இரா.காயத்ரி

ஊ.ஒ.ந.நி.பள்ளி, எலுமிச்சனஅள்ளி

காரிமங்கலம் ஒன்றியம்

தருமபுரி மாவட்டம்

 

 

Friday, October 7, 2022

Tr-S.Kanagalakshmi-BT-PUMS-Bodipalayam-Pollachi-North-Coimbatore-District

 Online kalvi Radio Teacher's experience 
 www.kalviradio.com


சி.கனகலஷ்மி
பட்டதாரி ஆசிரியை
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி
போடி பாளையம்
பொள்ளாச்சி வடக்கு
கோயம்புத்தூர் மாவட்டம்.

அறிமுகம் ....

ஒரு இனிய காலைப் பொழுது பொள்ளாச்சியில் இருந்து மதுரைக்கு செல்ல பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்தேன். கொரோனா -19 பெருந்தொற்றால் பள்ளி மாணவர்களின் கற்றல் தடைபட்ட பொழுது இடைவெளி இன்றி கற்சிலை தொடர்ந்து மேற்கொள்ள எவ்விதம் முயற்சிக்கலாம் என்று எண்ணிக் கொண்டிருந்தேன். அந்த நேரத்தில் கைபேசியின் அழைப்பு வந்தது. எங்கள் பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய பட்டதாரி ஆசிரியை திருமதி. எம் ரஜனி அவர்கள் ஆன்லைன் கல்வி ரேடியோவை பற்றி சொல்லி அறிமுகம் செய்தார். நானும் உடனே என் கைப்பேசி மூலமாக ஆன்லைன் கல்வி ரேடியோவின் செயல்பாடுகளை கேட்டறிந்தேன். இயக்குவதற்கு எளிமையாகவும், கேட்பதற்கு அருமையாகவும், இருந்தது. இவ்வாறு கையாளுவதற்கு எளிமையாக இருப்பதால் மாணவர்களின் கற்றலை நிச்சயம் ஆன்லைன் கல்வி ரேடியோ வலுப்படுத்தும் என்பதை புரிந்து கொண்டேன். மேலும் பள்ளி மாணவர்கள் வீட்டில் இருந்தபடியே இந்த இக்கட்டான நோய் தொற்று சூழலில் கற்றலை தொடர நல்லதொரு வாய்ப்பு ஆன்லைன் கல்வி ரேடியோ மூலமாக கிடைத்திருக்கிறது என்பதை உணர்ந்தேன். எங்கள் பள்ளி மாணவர்களுக்கு முதலில் ஆன்லைன் கல்வி ரேடியோவின் சிறப்பு அம்சங்களை பற்றியும், எவ்வாறு இயக்கி பயன்படுத்துவது என்பதைப் பற்றியும் எடுத்துக் கூறினேன். www.kalviradio.com இணைய வலை பக்கத்திற்கு சென்று மாணவர்கள் கற்றலுக்காக பயன்படுத்த ஆரம்பித்தனர். அதன்பின்னர் நானும் ஆன்லைன் கல்வி ரேடியோவில் சமூக அறிவியல் பாடத்தில் என் பங்களிப்பை தருவதற்கு ஆர்வம் காட்டினேன். இதனால் எங்கள் பள்ளி மாணவர்கள் மட்டுமல்லாமல் அனைத்து அரசு பள்ளி மாணவர்களும் பயனுற வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியது. அப்பொழுது திரு. கார்த்திக் ராஜா அவர்களிடம் என் பங்களிப்பு செய்யும் எண்ணத்தை வெளிப்படுத்தினேன். அவர் மிகவும் பொறுமையாக, நிதானமாக, தெளிவாக ஆடியோ பதிவிடும் முறையினை விளக்கிக் கூறினார். 


"எய்தற்கரியது இயைந்தக்கால்  அந்நிலையே

 செய்தற் கரிய செயல்."

 என்ற வள்ளுவ பெருந்தகையின் வாக்கிலற்கேற்ப நல்ல செயல்களை நினைத்தவுடன் செய்ய வேண்டும் என்ற முனைப்பு தோன்றியது.


கற்பக விருட்சகம் கல்வி ரேடியோ....

 எங்கள் பள்ளி பசுமையான சூழலில் போடிபாளையம் கிராமத்தில் அமைந்திருக்கிறது. இங்கு ஓரக்கலியூர், இராசி செட்டிபாளையம் போன்ற அருகில் உள்ள கிராமங்களில் இருந்து மாணவர்கள் வந்து கல்வி பயின்றனர் எனக்கு சிறுவயதில் இருந்து வானொலி கேட்கும் நல்ல பழக்கம் உண்டு. அதனால் வானொலி கேட்டுக்கொண்டே எனது அன்றாட பணிகளை உற்சாகத்துடன் தொடங்குவேன். நாம் செய்கின்ற பல்வேறு பணிகளுக்கு இடையே நிறைய தகவல்களையும், புதிய செய்திகளையும் கேட்டுக்கொண்டே செய்யலாம். அறிவைப் பெருக்கிக் கொள்ளலாம். அதனால் தான் என் மாணவர்களை அடிக்கடி வானொலி கேட்கும்படி ஊக்கப்படுத்துவேன். அவ்வாறுதான் கொரோனா ஊரடங்கு காலத்தில் மாணவர்களின் பாட அறிவை வளர்த்துக் கொள்வதற்கு பக்க பலமாகவும், நவீன உத்தியாகவும் ஆன்லைன் கல்வி ரேடியோ இருந்தது. மேலும் வீட்டில் இருந்தபடியே பெற்றோர்களின் கண்காணிப்புடன் பள்ளி மாணவர்கள் தன்னார்வத்துடன் தங்களது கற்றலை மேற்கொள்ளவும், வழி வகுத்தது. மேலும் மாணவர்களின் திறன்களை மேம்படுத்திக் கொள்ளவும் வசதியாக அமைந்திருப்பது அதனுடைய தனிச்சிறப்பாகும். "எரிந்து கொண்டுள்ள விளக்கே, மற்ற விளக்குகளை ஏற்ற முடியும்." என்று ரவீந்திரநாத் தாகூர் கூறினார். எனவே எங்கள் கிராமப்புற மாணவர்கள் எளிமையாக வீட்டில் இருந்தபடியே கற்றுக் கொள்வதற்கும், கற்றுக் கொண்டதை சுய கற்றல் செய்து பயன் பெறுவதற்கும், கொரோனா காலத்தில் ஆன்லைன் கல்வி ரேடியோ பெரிதும் உதவியது. இன்று அனைத்து பள்ளி மாணவர்களும் எளிமையாக பயன்படுத்தும் வண்ணம் படைப்பு தொகுப்புகள் வலை பக்கங்களில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. இது ஆன்லைன் கல்வி ரேடியோவின் கடின உழைப்பிற்கு கிடைத்த வெற்றியாகும்.


பங்களிப்பும் பயன்பாடும்..


"எனைத் தானும்  நல்லவை கேட்க அனைத்தானும் ஆன்ற பெருமை தரும்."

 என்ற குறள் நெறி கேற்ப சிறந்த பெருமைகளை தரக்கூடிய நற்கருத்துக்களை மாணவர்கள் எளிமையாக கேட்டறிந்து, பயம் பெறுவதற்கு ஆன்லைன் கல்வி ரேடியோ புதிய பாதையை அமைத்து கொடுத்துள்ளது. இத்தகைய புதிய பாதையில் என் முதல் பயணம் ஆரம்பமானது. முதலில் ஆறு ,ஏழு, எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு சமூக அறிவியல் பாட வினா- விடை  தொகுப்புகளை ஆடியோ மூலம் பதிவு செய்து வழங்கினேன். பின்னர் கதை கேட்பதிலும் சொல்வதிலும் ஆர்வம் இருந்ததால் கதைகள் மற்றும் விழிப்புணர்வு தகவல்கள், நன்னெறி கருத்துக்கள் போன்றவற்றையும் பதிவு செய்தேன். மேலும் தேசிய திறனறி தேர்வுக்கு பயிற்சி அளிக்கும் பொருட்டு NMMS கையேடு வாயிலாக சமூக அறிவியல் முக்கிய பாட கருத்துக்கள் மற்றும் Points to remember, வினா தயாரிப்பு ஆகியவற்றையும் பதிவு செய்து வழங்கினேன். இவ்வாறு மாணவர்கள் ஆன்லைன் கல்வி ரேடியோவை பாட கருத்துக்கள், பாடல்கள், பாடப்பயிற்சிகள் Online Test என்று அதன் பல்வேறு பரிமாணங்களை சூழலுக்கு தகுந்தார் போல் பயன்படுத்தி வருகின்றனர். "அறிவற்றங் காக்கும் கருவி செறுவார்க்கும் உள்ளழிக்க லாகா அரண்." இதனை தருவது கேடில் வெளிச்செல்வம் கல்வி ஆகும். கற்கும் மாணவர்களின் உளநிலையை அறிந்து கற்பித்தால் எதையும் எளிதாக கற்பிக்க முடியும். இந்த அறிவியல் தொழில்நுட்ப உலகத்தில் அறிவு பெருக்கம் அளவின்றி நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. இக்கால பட்டத்திற்கு பொருந்தும் வகையில் ஆன்லைன் கல்வி ரேடியோவின் செயல்பாடுகளை ஆடியோ வழியாக மாணவர்கள் மீண்டும் மீண்டும் கேட்டு கற்றலில் முன்னேற்றம் காண்கின்றார்கள். என் வகுப்பறையில் கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளில் பாட வேளைக்கு தகுந்தபடி வினா விடை தொகுப்புகளை மாணவர்கள் கேட்டு நோட்டில் எழுதி பார்ப்பார்கள். மீண்டும் நன்றாக பாட கருத்துக்களை வலுவூட்டுவதற்காக Points to remember பகுதியை கேட்க செய்வது உண்டு. மற்ற ஆசிரியர்கள் வராத நேரங்களில் அந்த பாடங்களை கேட்டுக்கொண்டே எழுதுவதற்கும், படிப்பதற்கும் பயிற்சி கொடுப்பேன். ஆர்வத்துடன் கவனிப்பதற்காக கதைகள் கேட்கச் செய்து ,அதில் உள்ள நன்னெறி கருத்துக்களை விவாதிப்பதும், அப்பொழுது நடக்கும். தன்னார்வம் மிக்க மாணவர்களை கண்டறிந்து மாலை நேரங்களிலும், விடுமுறை நேரங்களிலும், சொல்வதை எழுதுதல், பகுதியை கேட்டு எழுத ஊக்கப்படுத்தியதால், மாணவர்கள் நன்கு பயிற்சி வருகிறார்கள்.


  

வாழ்த்துரையும் வரவேற்பும் ....

கோவை மாவட்டம், (பொள்ளாச்சி வடக்கு) கல்வி அலுவலர் திரு. பி. கன்னிச்சாமி அவர்கள், வட்டார கல்வி அலுவலர்கள் திருமதி. சார்மிளா அவர்கள், திருமதி. யோகேஸ்வரி அவர்கள், வட்டார வள மைய மேற்பார்வையாளர் திரு. கந்தசாமி அவர்கள் மற்றும் ஆசிரியப் பயிற்றுநர்கள் ஆகியோர்களின் வாழ்த்துக்களை நானும் எனது மாணவர்களும் பெற்றோம்.
 


 எங்கள் பள்ளியின் தலைமை ஆசிரியை திருமதி. ஆர். அம்சவேணி அவர்களும், பள்ளியின் உதவி ஆசிரியர்களும், பெற்றோர்களும் முழு ஆதரவையும், ஒத்துழைப்பையும் வழங்கி வாழ்த்தினார்கள். அதனால் தான் எங்களால் ஆன்லைன் கல்வி ரேடியோவின் செயல்பாடுகளில் சுதந்திரமாக செயலாற்றி பங்கு பெற முடிந்தது. வாய்ப்புக்களை பயன்படுத்திக்கொண்டு மாணவர்களின் கற்றலில் மாற்றங்களை கொண்டு வருவதற்கு உதவி புரிந்தது.


 பங்கேற்பும் பாராட்டும் பரிசும்..

 கல்வி வலையொலியில் நான்...
 நான் பிறந்தது படித்தது எல்லாம் மதுரை மண்ணில் தான். ஆசிரியர் பணியின் அருமைகளை சுட்டிக்காட்டி வளர்க்கப்பட்டதால் இப்பணியில் ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது. தந்தையின் தனியாக ஆவலாலும், ஆண்டவனின் ஆசியாலும் பொள்ளாச்சியில் (வடக்கு) 08.01.1999 வெள்ளியன்று இடைநிலை ஆசிரியராக பணியில் சேர்ந்தேன்.பின் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்றேன். மேலும் பதவி உயர்வில் 02.06.2010 புதன் அன்று முதல் பட்டதாரி ஆசிரியராக சேர்ந்து போடிப்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பணியாற்றி வருகிறேன். ஏதேனும் ஒரு வகையில் மாணவர்களின் கற்றல் கற்பித்தலை வளர்ச்சி அடைய செய்ய வேண்டுமென்றே எண்ணத்தில் செயலாற்றிக் கொண்டிருந்தேன். அவ்வாறே ஒருமித்த சிந்தனையில் உருவான ஆன்லைன் கல்வி ரேடியோவின் கூட்டு முயற்சியில் என்னை இணைத்துக் கொண்டேன். மாணவர்களையும் பங்கு பெற செய்து, பயனடைய செய்து வருகிறேன். இதில் பெற்றோரின் கண்காணிப்பும், பாதுகாப்பும் உறுதி செய்யப்படுகிறது. கால நேர அட்டவணை திரு. கார்த்திக் ராஜா அவர்களின் வழிகாட்டுதலுடன் என் பணியை தொடங்கினேன் .

24 .02 .2021 புதன்கிழமை முதல் பருவம் ஏழாம் வகுப்பு சமூக அறிவியல் வினா விடை தொகுப்பு முதல் ஆடியோவை பதிவு செய்து அனுப்பினேன். மாணவர்களுக்கு நம்மால் ஆன ஒரு சிறு முயற்சியை முன்னெடுத்து இருக்கிறோம் என்பதில் மனமகிழ்ச்சி ஏற்பட்டது. திரு.கார்த்திக் ராஜா அவர்களின் தலைமையில், தன்னார்வமிக்க அரசு பள்ளி ஆசிரியர்களின் கூட்டு முயற்சியில், மாணவர்களின் கற்றல் நலனுக்கான உயரிய நோக்கில் நோக்கத்தில் என் முதல் பயணம் 24 .02 .2021 தொடங்கி இனிமையாக தொடர்கிறது.
 எளிமை ;இனிமை; புதுமை ;அருமை; ஆன்லைன் கல்வி ரேடியோ



 "மனிதனுடைய முழு திறமைகளின் வெளிப்பாடே, உண்மையான கல்வி." என்று நம் தேசத்தந்தை காந்தியடிகள் கூறினார். மாணவர்களின் திறமைகளை வெளிக்கொணரும் வண்ணம் ஆன்லைன் கல்வி ரேடியோவில் மாணவர்களின் கல்வி செயல்பாடுகள் வரவேற்கப்பட்டன. எங்கள் பள்ளி மாணவர்கள் அதில் தன்னார்வத்துடன் பங்கேற்று செயல்பாடுகளை ஆடியோக்கள் மூலமாக பதிவு செய்தும், நோட்டில் தொடர்ந்து எழுதியும் வந்தனர். குறிப்பாக நவம்பர் 14 குழந்தைகள் தினம், ஜனவரி 26 குடியரசு தினம், ஆன்லைன் கல்வி ரேடியோவின் முதலாம் ஆண்டு நிறைவு விழா போன்றவற்றின் மூலமாக நடத்தப்பட்ட மாணவர்களுக்கான செயல்பாடுகளில் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள். அதற்காக கேடயமும், மெடல்களும், பாராட்டு சான்றிதழ்களும் பெற்று தமக்கும், பள்ளிக்கும் பெருமை சேர்த்தார்கள். அவர்களின் படைப்புகள் ஆன்லைன் கல்வி ரேடியோவில் "மின்மணிகள் மின்னும் நேரம்" எனும் பகுதியில் சேமிக்கப்பட்டுள்ளது.

" கற்றலின் முழு பயன் சுதந்திரமான படைப்புத்திறன் அடைவது தான்"
 டாக்டர். ராதாகிருஷ்ணன்.

 ஆன்லைன் கல்வி ரேடியோவில் மாணவர்களின் செயல்பாடுகளுக்கு வழிகாட்டிய ஆசிரியர்களுக்கும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
   


 ஒவ்வொரு பாராட்டும் அனைவரையும் உற்சாகப்படுத்தி அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்வதற்கு அடித்தளமாக அமைகிறது.

 எனது ஆசிரிய பணியில் முதன்முறையாக பொள்ளாச்சி வடக்கு குறுவள மையத்தில் சிகரம் தொட்ட ஆசிரியர் விருது (2005 -06) பெற்றேன். இரண்டாவது முறையாக 12 ஜூலை 2021 ஆன்லைன் கல்வி ரேடியோவின் மூலமாக கேடயமும், National Builders  பாராட்டு சான்றிதழும், புவனகிரி ரோட்டரி சங்க பாராட்டு சான்றிதழும் பெற்றேன். மேலும் 10 செப்டம்பர் 2022 அன்று திருநெல்வேலி லயன்ஸ் கிளப் மற்றும் கிரீன் சிட்டி சார்பாக Best Teacher Award  பாராட்டு சான்றிதழும் பெற்றேன். 



Play List இருப்பதால் மீண்டும், மீண்டும் கேட்டு படிப்பதற்கும், கற்றல் வலுப்பெறுவதற்கும் பயன்படுகிறது. தன்னார்வமிக்க மாணவர்கள் மட்டும் அதிகமாக பங்கு பெறவும், பயன்பெறவும் முடிகிறது.
" முயற்சி சிறகுகளை அசைப்போம்
 முடியாது என்பதை முடிப்போம்
 கனவை மெய்ப்பட வைப்போம்
 காலத்தில் வெற்றியைப் பதிப்போம்.,"
- கவிதாசன் 
ஆசிரிய பணி என்பது நமக்கு கிடைத்த அரிய வாய்ப்பு என்பதால் நமது முழு ஆற்றலுடனும், முழு திறமையுடனும் நம்பிக்கையுடனும் பயணிப்போம்.
 வாழ்க வளமுடன்
       வாழ்த்துக்களுடன்.